அறிவுப் போட்டி – 10 : விடைகளும் வெற்றியாளர்களும்

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.


வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் – 10 இல் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் கீழ்க்காணும் 10 பேர் மட்டுமே அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளித்திருந்தனர்:

1)

மும்தாஜ்

mbe…@gmail.com

52 வினாடிகள்

2)

முஹம்மது ஸாலிஹ்

mohdaa…@hotmail.com

55 வினாடிகள்

3)

ஆயிஷா

aysj…@gmail.com

59 வினாடிகள்

4)

அஹ்மது

allam1…@rediff.com

59 வினாடிகள்

5)

அப்துல் நஸீர் ஏ பி

zaihaft…@yahoo.co.in

1நி. 2 வினாடிகள்

6)

ஜைனுல் ஆபிதீன்

zain_m…@yahoomail.com

1நி. 4 வினாடிகள்

7)

ஆயிஷத்

kaniays_1…@yahoo.com

1நி. 11 வினாடிகள்

8)

ஸாரா. ஆர்

s…@gmail.com

1 நி. 56 வினாடிகள்

9)

பஷீர்

waytobash…@gmail.com

3 நி. 10 வினாடிகள்

10)

ஏபிஸிடீ

a…@yahoo.com

10 நி. 37 வினாடிகள்


மேற்காணும் பட்டியலில் உள்ள 10 பேர்களில் மிகக் குறைந்த நேரத்தில் பதிலளித்த கீழ்க்கண்டவர்கள் முதல் மூன்று வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோதரி மும்தாஜ் – முதல் பரிசு (52 வினாடிகள்)
(2) சகோதரர் முஹம்மது ஸாலிஹ் – இரண்டாம் பரிசு (55 வினாடிகள்)
(3) சகோதரி ஆயிஷா – மூன்றாம் பரிசு (59 வினாடிகள்)
(3) சகோதரர் அஹ்மது – மூன்றாம் பரிசு (59 வினாடிகள்)

அறிவுப்போட்டி-10க்கான சரியான விடைகள்:

வினா-1: நபி(ஸல்)அவர்கள் இறுதிப் பேருரை நிகழ்த்திய இடம் எது?
விடை: அரஃபா மைதானம்


வினா-2: எந்த நபியை ஒரு சமுதாயம் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்?
விடை: இப்ராஹீம்(அலை)


வினா-3: “வட்டி வாங்குபவர்கள் நிரந்தர நரகவாசிகள்” வசன எண் எது?
விடை:   2 : 275


வினா-4:  துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாளின் சிறப்பு என்ன?
விடை: அரஃபா


வினா-5: கடந்த மற்றும் அடுத்த ஆண்டின் பாவங்கள் மன்னிக்கப் படும் நோன்பு எது?
விடை: அரஃபா நோன்பு


வினா-6: அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களின் தாயார் பெயர் என்ன?
விடை: ஹாலா (ரலி)


வினா-7:  அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பளித்த நபி(ஸல்) மகள் யார்?
விடை: ஸைனப் (ரலி)


வினா-8 நபி(ஸல்)-கதீஜா(ரலி) தம்பதியருக்கு எத்தனை பெண் மக்கள் பிறந்தார்கள்?
விடை: நான்கு


வினா-9: நபி இப்ராஹீம் (அலை) அவர்களை நெருப்பில் வீசச்செய்த மன்னன் யார்?
விடை: நம்ரூது


வினா-10: பாலஸ்தீனத்தின் தலை நகரம் எது?
விடை: ஜெருஸெலம் (பைத்துல் மக்திஸ்)


மதிப்பெண் இல்லாப் படக்கேள்வி:

படத்திலுள்ளவர்களில் அஜ்மீர் தர்ஹா குண்டுவெடிப்பு குற்றவாளி என குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவனான பயங்கரவாதி யார்?
விடை: இந்திரேஷ் குமார் (Source : http://www.satyamargam.com/1503).

oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 10இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் ( admin@satyamargam.com ) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

 

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

 

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.