அறிவுப் போட்டி – 30 : விடைகளும் வெற்றியாளர்களும்

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்:

அறிவுப் போட்டி 30இல் மாஷா அல்லாஹ், ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) மர்யம் (முதலாம்பரிசு) mariam… at yahoo

(2) ஹபீப் (இரண்டாம்பரிசு) nooh5… at yahoo

(3) அஹ்மது (மூன்றாம்பரிசு) shaj_b… at yahoo

அறிவுப்போட்டி -30 க்கானசரியானவிடைகள்:

வினா-01: அல்குர்ஆன்எத்தனைஜுஸ்வுகளாக (பாகங்களாக) வகுக்கப்பட்டுள்ளது?

விடை : முப்பது

 


 

வினா-02: சூராஅல்முஸ்ஸம்மில், குர்ஆனில்எத்தனையாவதுஅத்தியாயமாகஇடம்பெற்றுள்ளது?

 

விடை : 73

 


 

வினா-03: சூராலுக்மானில் (அத்தியாயம் 31), லுக்மான்தம்புதல்வரிடம்கூறியது: “என்அருமைமகனே! நீ _______________ நிலைநாட்டுவாயாக…” (கோடிட்டஇடத்தைப்பூர்த்திசெய்க).

 

விடை : தொழுகையை

 


 

வினா-04: ஹதீஸ்என்பதன்பொருள்யாது?

 

விடை : நபி (ஸல்) அவர்களின்சொல், செயல், அங்கீகாரம்

 


 

வினா-05: நபிஇப்ராஹீம் (அலை) அவர்களின்இல்லத்திற்குவருகைபுரிந்தபெருமதிப்பிற்குரியவிருந்தினர்கள்யாவர்?

 

விடை : மலக்குகள்

 


 

வினா-06: அந்தஇறுதிநேரம்வரும்போதுகுற்றவாளிகள்நம்பிக்கையிழப்பார்கள்எனும்பொருள்படஅல்குர்ஆனில்அமைந்துள்ளவசனஎண்எது?

 

விடை : (சூராஅர்ரூம் 30:12)

 


 

வினா-07: உலகஇறுதித்தீர்ப்புநாளின்போதுஎத்தனைசாராருக்குஅல்லாஹ்வின்அர்ஷுநிழலின்கீழ்இடம்கிடைக்கும்?

 

விடை : ஏழு

 


 

வினா-08: இவர்களுள்இறைத்தூதர்ஒருவரின்சகோதரர்யார்?

 

விடை : மூஸா

 


 

வினா-09: அபிஸீனியாநாட்டின்மற்றொருபெயர்என்ன?

 

விடை : எத்தியோப்பியா

 


 

வினா-10: இப்னுபதூதாஎன்பவர்யார்?

 

விடை : உலகப்பயணி

 


 

oOo

 

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகப் பரிசு/கள் பெற்றுக் கொண்டதைக் கட்டாயம் தெரிவித்து உறுதி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 30இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை admin[at]satyamargam.com எனும் மின் முகவரியுடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.