ஈமானின் சுவையறியும் மூன்று தன்மைகள்!

Share this:

பித்தோழர்கள் யாசிர் (ரலி) அவர்களும் அவர்கள் துணைவியர் சுமைய்யா (ரலி) அவர்களும் இஸ்லாத்தை ஏற்றதற்காக இஸ்லாத்தின் எதிரிகளால் கடுமையாக துன்புறுத்தப் பட்டார்கள், இறுதி வரை இறை மறுப்பை ஏற்பதில்லை என்பதில் உறுதியாக இருந்த அவர்கள் (எதிரிகளால் கொல்லப்பட்டு) வீரமரணம் அடைந்தார்கள்.

பிலால் (ரலி) கப்பாப் (ரலி) போன்றோர்கள் (இறைவன் ஒருவன் என்ற இஸ்லாமிய கொள்கையை கூறியதற்காக) அடியையும் அவமானத்தையும் ஏற்றார்கள், நாவால் மட்டும் தான் என்றாலும் கூட இறைமறுப்பை ஏற்பதைவிட இவ்வாறு துன்பங்களை (மறுமை வெற்றிக்காக) தாங்கிக் கொள்வதே சிறந்தது என்று அவர்கள் கருதினார்கள்.

அதே போல் “உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்” என்ற 4:29 குர்ஆன் வசனத்தை சுட்டிக் காட்டித் துன்பங்களை ஏற்பதை விட (உள்ளத்தில் இறை நம்பிக்கை இருக்கும் நிலையில் நாவினால் மட்டும்) இறை மறுப்பை வெளியிடுவது தவறாகாது என்று கூறுகிறார்கள் (பத்ஹுல் பாரி)

ஈமான் என்றால் இறை நம்பிக்கை என்று பொருள் இதன் சுவையை முறையாக உணர அல்லாஹ்வின் தூதர் இந்த மூன்று மிக முக்கிய பண்புகள் ஒரு சேர இருப்பது அவசியம் என்று குறிப்பிடுகிறார்கள்.

இறைவன் மீதும் இறை தூதர் மீதும் கொள்ளும் நேசம் என்பது நாம் சாதாரணமாக இவ்வுலகில் ஒருவர், மற்றவர் மீது கொள்ளக்கூடிய நேசத்தைப் போன்றதாக இல்லாமல் ஒரு தற்காலிகமான நேசமாகவோ போலியான நேசமாகவோ அல்லது மனைவி மக்கள் தாய் தந்தை நண்பர்கள் என்று பலர் மீது நமக்கு உள்ள நேசமாக இல்லாமல் இதற்கு நிகராக வேறு ஏதும் இவ்வுலகில் இல்லை எனும் அளவில் இந்த நேசம் இருத்தல் வேண்டும்.

ஒரு பொருளை அல்லது ஒரு நபரை பிற எல்லாவற்றையும் விட அதிகமாக ஒருவர் நேசிக்கும் போது எந்நேரமும் அதே சிந்தனையில் இருப்பார்; எதைச் செய்தாலும் அதைச் செய்யும் போதும் அந்த சிந்தனை மாறாது; தன்னுடைய திருப்திக்கும் மேலாக தாம் இவ்வாறு நேசிக்கக் கூடியவரின் விருப்பத்திற்கு முன்னுரிமையளிக்கப்பட்டு எதையும் செய்யக்கூடிய மனோநிலையில் அவர் இருப்பதைப் பரவலாக பார்க்கலாம்.

உதாரணமாக தான் நேசிக்க்கூடிய ஒரு நபர் அல்லது ஒரு  கட்சியையே எடுத்துக் கொள்வோம் அவருக்கோ அந்த ஒரு கட்சிக்கோ எதையும் செய்ய துணியக்கூடியவர்களை நம்மால் சாதாரணமாக அன்றாடம் பார்க்க முடிகிறது. அதற்காக செலவிடப்படக்கூடிய பணமோ பொருளோ நேரமோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் முழுமூச்சாக தன் நேசத்திற்குரியதற்காக தன்னை அர்ப்பணிக்க்க்கூடிய பண்பு வந்து விடுகிறது. அது ஒரு நாடாகவோ ஒரு மதமாகவோ ஒரு தலைவராகவோ அல்லது ஒரு கொள்கையாகவோ எனும் போது அதன் தீவிரத்தை சொல்லத்தேவையில்லை. இந்த நேசத்தின் காரணமாக கொலை அல்லது தற்கொலை செய்யும் அளவிற்குக் கூட விபரீதமாக மடத்தனமாக செயல்படக்கூடியவர்களையும் காணலாம்.

இதனைக் கருத்தில் கொண்டு,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் இறை நம்பிக்கையின் (ஈமானின்) சுவையை அடைவார். (அவை)

1) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிக நேசத்திற்குரியோராவது
2) ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹுக்காகவே நேசிப்பது.
3) தாம் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று இறைமறுப்பிற்குத் திரும்புவதை அவர் வெறுப்பது.
(அறிவிப்பவர் : அனஸ் (ரலி) ஹதீஸ் நூல் புகாரி ஹதீஸ் எண் 6941)

எனும் இந்நபிமொழியை ஆராயும் போது அதாவது நமக்கு இறுதித் தீர்ப்பளிப்பவர், மன்னிப்பவர் அல்லது தண்டிக்க வல்லவர், கண்காணிப்பவர், மறுமையின் வாழ்க்கையின் அதிபதி ஏக இறைவனாகிய அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை எனும் போது அதே போல் நபி (ஸல்) அவர்கள் வழியை தவிர ஈடேற்றமில்லை எனும் போது நாம் இறைவனையும் அவனால் ஏவப்பட்டவைகளையும் இறைத்தூதரையும் அவர்களால் காட்டப்பட்ட வழிமுறைகளையும் நமது குடும்பம் மனைவி மக்கள் பெற்றோர் உற்றார் உறவினர் தோழர் ஆகிய அனைவரை விடவும் அதிகம் நேசிப்பது அவசியமாகின்றது. அப்போது தான் நாம் இறைவனுக்காக எதையும் செய்ய எப்போதும் தயார் நிலையில் இருப்போம், இவ்வாறு இறை சிந்தனை எப்போதும் இருக்குமேயானால் தீய சிந்தனைகள் தீய வழிமுறைகள் நமது வாழ்க்கையில் அறவே வர வாய்ப்பிலாமல் போகும்.

இறைவனுக்காகவும் இறைதூதர் காட்டிய வழியில் எதையும் செயல் படுத்தும் மனப்பான்மை வரும் போது நமது உயிரையும் பொருட்படுத்தாமல் இறைநேசத்தில் இறைக்கட்டளைகளை இப்புவியில் இறைத்தூதர் காட்டிய படி சற்றும் கூடுதல் குறைவின்றி முழுமையாக முறையாகத் தன்னுள்ளும் இந்தப் புவியிலும் நிலை நாட்ட வேண்டும் எனும் சிந்தனையின் ஆக்கபூர்வ வெளிப்பாடுகளை காணலாம்.

அது வணக்கவழிபாடுகளாயினும் அல்லது இதர வாழ்வியல் சம்பந்தமான காரியங்களாயினும் இதன் மூலம் தெளிவாக பிரதிபலிக்கும் நிலை இந்த இறை நேசத்தினால் ஏற்படும்.

இரண்டாவதாக இந்த இறை நேசத்தின் முக்கியமானதொரு அடிப்படையாவது இறைவனின் கட்டளைக்காகவேயன்றி, இன்ன பிற உலக உறவு முறைகளோ, இதர இன குல மொழி தேசம் போன்ற அற்பமான காரணங்களாகவோ இருக்காது, என்பதால் எவ்விதத்திலும் அநியாயமோ அநீதியோ இன்னும் எவ்விதமான தீமையோ சிறிதும் தலை தூக்க வழி வகுக்கப்படாது.

நேசம் மற்றும் அதனடிப்படையில் செயல்களின் சரியான அல்லது தவறான தன்மையை நிர்ணயிக்கும் நிலை மாறி இறை கட்டளை மற்றும் இறைத்தூதர் கட்டளைகளை நிலை நாட்டுதல் எனும் அடிப்படையில் நேசமும் அதன் எதிர்மறையாம் வெறுப்பும் ஒன்றன் மீதோ அல்லது ஒருவர் மீதோ ஏற்பட அல்லது அமைய வழி பிறக்கும்.

இதனால் இறையாட்சி இப்புவியில் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற உன்னத எண்ணம் மேலோங்கும். போலியான சித்தாந்தங்கள், பொருளாதார சுரண்டல்கள், வீண்விரயங்கள், அநீதி, இறைநிராகரிப்பு வெறுக்கத்தக்க ஆதாரமற்ற அறிவீனங்கள் சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற அனைத்தும் முற்றிலும் அகன்று விடக்கூடிய காரணிகள் அதிகரிக்கும், அதுவே இறையாட்சிக்கும் படியமைக்கும் .

மூன்றாவது மிக முக்கிய அம்சமாகிய இறை நிராகரிப்பு எனும் தன்மை, அதைவிட ஒரு பெரிய அறியாமையோ அறிவீனமோ இப்புவியில் இல்லை என்பதை உணர்ந்து அதன் பால் செல்லக்கூடிய வழிகளை முழுமையாக அடைத்திட முனையவேண்டும். நாளை விரும்பியோ விரும்பாமலோ அந்த இறைவனின் முன்னிலையில் நிற்க வேண்டும் எனும் நம்பிக்கை (ஈமான்) உறுதியாக இருக்கும் போது அவனை சொல்லாலோ செயலாலோ உள்ளத்தாலோ என்றும் பகலிலோ இரவிலோ தனிமையிலோ கூட்டத்திலோ எப்போதும் நிராகரிக்க முனையவோ இசையவோகூடாது. அதனால் எவ்வளவு பெரிய இலாபம் ஏற்படுமென்றாலும் அல்லது உயிர் பொருள் நஷ்டம் என்றோ அல்லது நெருப்பில் வீசப்பட்டாலும் தூக்கிலேற்றப்பட்டாலும் உடலை துண்டு துண்டாக ஆக்கபடக்கூடிய சூழ்நிலையை எதிர்கொள்ள நேர்ந்தாலும் இவ்வுலகத்தோடு வாழ்க்கை முடிவடைவதில்லை என்ற உண்மை மிளிரும் விதமாக இறை நிராகரிப்புத்தன்மையை அதன் சாயலும் நமது வாழ்வில் அறவே வராதவாறு அதை முற்றிலும் வெறுக்க வேண்டும்.

இதுவே ஈமானின் உண்மையான உன்னதமான உயர்தரமான சுவை என்பதை உணர்ந்து வாழ நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.

ஆக்கம்: இப்னு ஹனீஃப்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.