ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்துக்கு ஒன்றைக் கடத்த உதவுவதே ஊடகம் ஆகும்.
மின்சாரத்தை ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குக் கொண்டு வரும் உலோகக் கம்பி அல்லது நீர், அல்லது மின்சாரம் பாயும் எதுவானாலும் மின் கடத்தும் ஊடகமாகும். ஒலி அலைகளைச் சுமந்து வருவதற்குக் காற்று ஊடகம் ஆகும். சிங்கப்பூரிலிருந்து தங்கத்தைக் கடத்தி வரும் ‘குருவி’யும் ஊடகம்தான்.
இன்று ஊடகம் – மீடியா என்பது விரிந்த வேறுபட்ட பொருளைத் தரும் ஒரு சொல் ஆகிவிட்டது. தகவல் தொடர்புச் சாதனங்கள் வழி, செய்திப் பரிமாற்றம், பொழுது போக்கு, கல்வி, புள்ளிவிபரங்கள் வணிக விளம்பரங்கள் போன்றவற்றை, அவை உருவாகும் இடங்களிலிருந்து கடத்தி வந்து நம் கண்ணுக்கும் செவிக்கும் தருவதால் ஊடகம் எனப்படுகிறது.
அச்சேற்றப்பட்டு வரும் செய்தித் தாள்கள், வாராவாரம், மாதமிருமுறை, மும்முறை ஒருமுறை என வரும் இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையத்தில் வரும் செய்தித் தளங்கள், தனியாரது வலைப்பூக்கள், முகநூல் மற்றும் ட்விட்டர் பதிவுகள், தகவல் பலகைகள் போன்றவை ஊடகம் என்ற வரையறைக்குள் வருவனவாகும்.
ஊடகம் என்பது வலிமையானது. ஊடகத்திற்கெனக் கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் தலையாய இடத்தைப் பெற்றிருப்பது ஊடகம். ஆட்சியைக் கவிழ்க்கவும் ஆட்சியில் அமர்த்தவும் வல்லமை பெற்றிருப்பது ஊடகம்.
ஊடகவியல் என்பது மக்களிடம் கருத்துவாக்கம் செய்யும் வலிமையான பணியாகும். ஊடகவியலாளர்கள் தாம் விரும்பும் வகையில் மக்களின் அறிவுத் தளத்தை நகர்த்திச் செல்ல முடியும்.
ஒரு மனிதனின் சிந்தனைத் தளத்தில் ஊடுருவி அவன் எதைச் செய்ய வேண்டும், யாரை அல்லது எதைச் சார்ந்திருக்க வேண்டும், எதை உண்ண வேண்டும்; உடுக்க வேண்டும், எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும், தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற அளவுக்கு மக்களின் அனைத்துச் செயற்பாடுகளையும் அவர்கள் அறிந்து கொண்டோ அறியாமலோ இயக்குகின்ற சக்தியாக ஊடகம் விளங்குகிறது.
ஊடகங்கள் தங்களைப் பற்றி “நாங்கள் நடுநிலையாளர்கள்” எனத் தன்னுயர்வாகக் கூறிக்கொண்டாலும் அவர்கள் விரும்பும் வண்ணம் மக்களின் மனங்களில் பாதிப்பை உருவாக்குவதுதான் அனைத்து ஊடகங்களின் அடிப்படைக் குறிக்கோளாகும். மக்களின் சிந்தனைத் தளத்துக்குள் ஊடுருவி, சார்புத் தன்மை ஒன்றை உருவாக்கி அவர்களை இயக்குகின்ற சக்தியாக இன்றைய நவீன ஊடகம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது.
அண்மையில் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே நரேந்திர மோடியை ரோம்போவாக, ராபின்ஹுட்டாக, ஸூப்பர்மேனாகச் சித்திரித்து வந்த ஊடகக் கட்டமைப்பால் அவரும் அவரது கட்சியும் எதிர்க்கட்சியே இல்லா நிலைக்கு உயர்த்தப்பட்டு வெற்றி பெற்றதே ஊடக வலிமைக்குச் சான்றாகும்.
ஊடகம் உண்மையை உரக்கச் சொல்லி, ஊழலை வெளிப்படுத்தி, குற்றம் புரிந்தோரை அடையாளம் காட்டிச் செயல்பட்ட காலமும் இருந்தது. அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்ஸனின் வாட்டர் கேட் ஊழலை வெளிக்கொணர்ந்தது வாஷிங்டன் போஸ்ட் எனும் இதழ்தான். போபார்ஸ் ஊழல், சவப்பெட்டி ஊழல், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் போன்றவற்றை வெளிக்கொண்டு வந்ததும் ஊடகங்கள்தாம். ஆனால் அவை இருள் கிழித்து மின்னி மறையும் மின்னல்கள் போல எப்போதாவது வருவன.
சமூகப் பொறுப்பும் அக்கறையும் உள்ள ஊடக முதலாளிகளும் ஆசிரியர்களும் செய்தியாளர்களும் அரிதாகி விட்டனர். பரபரப்பான செய்திகளே இன்று விற்பனைக்குரிய பண்டங்களாம். 99% ஊடகங்கள் வணிக நிறுவனங்களுக்கே உரிய லாபநோக்குடன் செயல்படத் தொடங்கிவிட்டன. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அறக்கோட்பாடுகள் மறைந்து மக்களை எப்படியாவது கவர்ந்து விற்பனையைப் பெருக்கி லாபம் ஈட்ட வேண்டும் என்றே அவை கருதுகின்றன. News can be hot; but should be fact என்ற அடிப்படையை மறந்து விட்டுச் சில ஊடகங்கள் தங்கள் மதம் மற்றும் இனம் சார்ந்த நுண்ணரசியலுக்குத் தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்வதை இன்று நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
சான்றாக:– இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் சதிச்செயல் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட டெல்லிப் பேராசிரியர் எஸ் ஏ ஆர் கீலானியின் வீட்டில் சோதனைக்காகவும் அவரைக் கைது செய்வதற்காகவும் காவல் துறை குவிந்திருந்தது. இந்நிலையில் ஊடகவியலாளர்களும் பெரும் திரளாக அங்குக் குவிந்தனர். தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்புகளும் பரபரப்பாக அரங்கேறின. கீலானியின் வீட்டின் முன் நின்றபடி, “கீலானி தலைமறைவாகிவிட்டார்” என ‘ஆஜ் தக்’ செய்தியாளர் ஆவேசத்துடன் செய்தி அளந்ததைத் தம் வீட்டில் அமர்ந்தபடி டி வி யில் கண்டுகொண்டிருந்தார் கீலானி!
முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக ஏதாவது செய்திகளைப் புனைந்து வெளியிட்டுத் தம் அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன ஊடகங்கள். மேலை நாட்டு ஊடகங்கள் இதில் முன் நிற்கின்றன. யூதர்களே பெரும்பாலான ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் இவை போன்ற பொய்களும் புனைவுகளும் பரபரப்பாக வெளியாகின்றன.
பெரும்பான்மையான ஊடகங்கள் உலக அளவில் யூத சக்திகளின் கட்டுப்பாட்டிலும் இந்திய அளவில் இந்துத்துவ சக்திகளின் கட்டுப்பாட்டிலும் இருப்பதனால் ஒருதலைப்பட்சமான, திரிக்கப்பட்ட மற்றும் இனவெறியைத் தூண்டும் வகையிலான செய்திகள் அதிக அளவில் ஊடகங்களில் இடம்பெறுவதைக் காண முடிகிறது. அவர்களது நோக்கம் ஆட்சி, அதிகாரம், அரசியல் மேலாண்மை. இதற்குத் தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராக அவர்கள் மீது கரிபூசும் எந்த இழிசெயலுக்கும் தயங்கமாட்டார்கள் இந்த வெட்கம் கெட்ட பிறவிகள். பாலஸ்தீனியர் தாக்கினால் தீவிரவாதமாம்; இஸ்ரேல் தாக்கினால் தற்காப்பாம்.
இவர்களது மதம் மற்றும் இனம் சார்ந்த நுண்ணரசியலுக்கு ஒரு சிறிய எடுத்துக் காட்டு கீழே :-
2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் கட்ரினா புயல் வீசியபோது வெளியிடப்பட்ட சில செய்திகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன. யாஹூ இணையதளத்தில் வெளியிடப்பட்ட இரு நிழற்படங்களில் ஒன்றில் கருப்பினத்தவர் ஒருவர் சில உணவுப் பொருட்களைச் சுமந்து கொண்டு மார்பளவு நீரில் நீந்திச் செல்கிறார். மற்றொரு நிழற்படத்தில் வெள்ளையர் ஒருவரும் ஒரு பெண்மணியும் முதுகிலும் கைகளிலும் பொருட்களைச் சுமந்து கொண்டு அதே போல நீந்திச் செல்கின்றனர். ஒரே நாளில் ஒரே இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட இவ்விரு நிழற்படங்களில் முதலாவதில் அந்தக் கருப்பினத்தவர் உணவுப் பொருட்களைச் ‘சூறையாடிச்’ செல்வதாகவும் வெள்ளையர்கள் அப்பொருட்களைக் ‘கண்டுபிடித்துச்’ செல்வதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இவர்களது ‘இஸ்லாமோஃபோபியா’ அரிப்பைச் சொறிந்து கொள்ள எந்த நிலைக்கும் கீழிறங்குவார்கள்.
திரைப்படத்தில் வந்த காட்சியினைப் போட்டு, “சிரியாவில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்த பெண்ணைக் கல்லால் அடித்து கொல்லும் கொடூரம்” எனப் பச்சைப்பொய்ப் பரப்பி, தம்மை எழுத்தாளர் என அழைத்துக்கொள்ளும் உலுத்தர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
அந்த வகையில் 9.8.2014 அன்று தட்ஸ்தமிழ் தளத்தில் வெளியான ஒரு செய்தி: (SCREENSHOT – CLICK HERE)
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » உலகம்
7 வயது சிறுமியை திருமணம் செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி: சமூக வலைத்தளங்களில் உலவும் போட்டோ
Posted by: Veera Kumar, Published: Saturday, August 9, 2014, 17:55 [IST]
—
பாக்தாத்: ஈராக்கில் 7 வயது சிறுமியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி திருமணம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் உலாவி வருகிறது.
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திருமணம் மூலமாகவும் மதம் மாற்றம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
இஸ்லாமிய டிவிட்டர் பயனாளி (Fadel Al Hadidi @Fadel_alHadidi) ஒருவர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அழும் சிறுமியுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏழு வயதான அந்த சிறுமியை உடன் நிற்கும் நபர் திருமணம் செய்துள்ளதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த போட்டோ எடுக்கப்பட்டது ஈராக் அல்லது சிரியா என எந்த நாடு என்பது குறிப்பிடப்படவில்லை. இவரது டிவிட்டரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஷியா பிரிவு இஸ்லாமியர்களை கொடூரமாக கொன்ற புகைப்படங்களும் உள்ளன.
அரபு நாட்டு தொலைக்காட்சிச் சேனலான அல்-ஹயத் கூட இதை ஒளிபரப்பிவருகிறது. திருமணத்துக்கு பெண் தேட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அலுவலகமே திறந்துவிட்டனர் என்று கடந்த மாதமே, பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
வடக்கு சிரிய பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திருமண அலுவலகம் திறந்ததுடன், திருமணமாகாத மற்றும், விதவை பெண்கள் தங்களை திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம், ஜிகாத் நடத்த அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நம்பிக்கொண்டிருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன.
மேலை நாட்டு இணைய தளங்கள் ஆறு நாட்களுக்கு முன்னரே இச்செய்தியை வெளியிட்டுவிட, தமிழ்த்தளம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது. செய்தி உண்மையா, உறுதிப்படுத்தப்பட்டதா என்றெல்லாம் தள ஆசிரியர் சிந்தித்ததாகத் தெரியவில்லை; செய்தி பதித்தவரும் அக்கறை காட்டவில்லை.
இன்று போல் email வசதியோ s m s வசதியோ cell phone வசதியோ பரவலாக இல்லாத காலத்தில், ‘துபையில் பிள்ளையார் பால் குடித்ததாக’ வந்த வதந்தியை உலகம் முழுக்கப் பரப்பிய இந்துத்துவ சக்தியைப்போல் இச்செய்தியும் உடனடியாகப் பரப்பப் பட்டது. நூற்றுக்கணக்கான தளங்கள் இச்செய்தியை உடனே மறுபதிப்புச் செய்து மகிழ்ந்தன.
இதைப்போல், “சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தன் ஐந்து வயது மகளை வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்திக் கொலை செய்தார்” எனக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு ரீல் ஓடியது. பிறகு அந்த ரீல் அறுந்துவிட இப்போது அடுத்த ரீலை ஓட்டியுள்ளனர்.
உண்மை என்ன?
சிரியாவில் ஐ எஸ் ஐ எஸ் நடத்திய குர்ஆன் ஓதும் போட்டி பற்றி ஒரு காணொளி வெளியானது. அதில், குர்ஆன் ஓதல் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த ‘ரகத்’ எனும் பெயருடைய ஒரு குழந்தையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அபூ வகாஸ் அல்-லைதி எனும் துனீசியர் ஆறுதல் படுத்துகிறார்.
{youtube}JJEPB9hJmQc{/youtube}
அதைக்கூடப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள் கூட்டம், “இஸ்லாமிய ஜிஹாதி ஏழு வயதுச் சிறுமியைக் கல்யாணம் செய்து விட்டான்” எனப் பொய்ச்செய்தியைப் பரப்பின. எவனோ ஒருவன் வாந்தி எடுத்ததை வரிசையாகப் பல தளங்களும் வாரி உண்டன. தங்கள் மதம் மற்றும் இனம் சார்ந்த நுண்ணரசியலை முன்னிலைப்படுத்தி வெளியிட்ட செய்தியைத் தட்ஸ்தமிழ்த் தளமும் வெளியிட்டது. அந்தப் பதிவுக்கு வாசகர்கள் என்ற பெயரில் வெளிவந்த வக்கிரப் பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்தால் தமிழ் வாசகர்களின் கருத்துகளில் முஸ்லிம்களுக்கு எதிரான இத்துணை வன்மம் கலந்துவிட்டிப்பதை நம்மால் நம்பமுடியவில்லை. அவற்றையும் தட்ஸ்தமிழ் தளம் வெளியிட்டுத் தன் ‘கருத்துச் சுதந்திரத்தை’ப் பறை சாற்றியது.
பின்னர் உண்மையான தகவலை தட்ஸ் தமிழ் தளம் வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது.
உண்மையில் நடந்தது என்ன என்று அறிய விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் முழுமையான காணொளியைக் காணுங்கள்.
{youtube}S16EfgD98aw{/youtube}
குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் தினம்தினம் எத்தனையோ நடக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த நிகழ்ச்சியும். போட்டியில் தோற்று விட்டோமோ என்ற குழந்தைத்தனமான விசும்பலையும், அந்தக்குழந்தையைத் தேற்றும் உணர்வுப்பூர்வமான நிகழ்வையும் இணைத்து, ‘பால்ய திருமணம் செய்ததால் அச்சிறுமி அழுவதாக’த் திரித்து எழுதும் இவர்களின் மனவக்கிரத்தை எவ்வகையில் எடுத்துக் கொள்வது? ஒரு புகைப்படம் கிடைத்துவிட்டால் மனம் விரும்பியபடி எவர்மீதும் குப்பை வீசுவார்களா? இத்தனைக்கும் அந்த வக்கிர செய்திக்குக் காட்டப்பட்டுள்ள புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று உறுதியாகத் தெரியவில்லையாம்! உறுதியற்ற ஒன்றைச் செய்தியாக வெளியிடவேண்டிய அவசரம்தான் என்ன? இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் எதை எழுதினாலும் விலைபோகும் என்ற கீழ்த்தர வணிகநோக்கமும் இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வும்தானே காரணமாக இருக்க முடியும்?
பச்சிளம் பாலகர்கள் என்றுகூடப் பாராமல் பாலியல் வன்புணர்வு செய்யும் காமுகர்களுக்கும், இந்த செய்தியாளருக்கும் அதிக வித்தியாசமில்லை. மேற்காணும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அபூ வகாஸ், இரு நாட்களுக்கு முன்னர் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதை, “7 வயதில் விதவையான முஸ்லிம் சிறுமி” என வக்கிரம் பிடித்தவர்கள் படத்தோடு செய்தி வெளியிட்டு ஜல்லியடித்தாலும் வியப்பதற்கில்லை.
இந்தக் காணொளியின் உணமையை முழுக்க அறிந்த பின்னும் அதை மறைத்து விட்டுக் கேவலமான ஒரு கற்பனையை மேலை நாட்டு ஊடகம் வெளியிட வேண்டிய தேவை என்ன?
விடை எளிதானதே!
இஸ்லாம் மேலைநாடுகளில் விரைந்து பரவும் மார்க்கமாக இருப்பதால் ஏற்பட்ட எரிச்சல்.
இஸ்லாம்தான் இனி உலகை ஆளப்போகும் ஆற்றல் என்பதால் ஏற்பட்ட கலக்கம்.
அப்படி இஸ்லாம் வென்று விட்டால்… என்ற ஃபோபியா அச்சம்.
இவற்றால் விளைந்த வெறியும் வெறுப்பும் வன்மமும் விஷம் தோய்ந்த செய்திகளைப் புனைந்து வெளியிடத் தூண்டுகின்றன.
அடிக்க அடிக்கத்தான் பந்து மேலெழும். இஸ்லாத்தை அழிக்க நினைத்தவர்கள அதற்குள் கரைந்து போனதுதான் வரலாறு. தன்னை எதிர்ப்பவர்களை இஸ்லாம் எவ்வாறு ஈர்க்கிறது என்பதற்கு மிக அண்மைச் சான்று, உலக முஸ்லிம்களின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களை இழிவு படுத்தித் திரைப்படம் எடுத்த டென்மார்க் நாட்டு இயக்குநர் அர்னோட் வான் டோன் இஸ்லாம் தன்னை எவ்வாறு ஈர்த்தது என்பதை விளக்குகின்றார்:
{youtube}57GcUnwAUSI{/youtube}
பாவேந்தர் பாரதிதாசன் அன்று
“காரிருள் அகத்தில் நல்லகதிரொளி நீ தான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!
ஊரினை நாட்டை இந்தஉலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்பிறந்த பத்திரிகைப் பெண்ணே”
என்று பாடினார்.
இன்று அவர் இருந்திருந்தால், “சிற்றறிவாளர் சிந்தையில் பிறந்த பத்திரிகைப்பெண் வேசியாகிவிட்டாள்” என்று நொந்து போயிருப்பார்.