“மன்னிக்கக்கூடாத குற்றம்! தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு குறித்த தலையங்கம்”
என்ற தலைப்பிட்டு, தினமணி நாளிதழில் அதன் ஆசிரியர் வைத்தி, இன்று (04th April 2020 07:41) ஒரு தலையங்கம் எழுதியுள்ளார். அதைப் படித்த பின்னர் கொரோனாவைவிட அபாயகரமான சங்கி ஊடக வைரஸ், கொரோனாவைவிட அதி வேகமாகப் பரவுவதை உணர முடிந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் தினமலருக்கு இந்த சங்கி வைரஸ் தொற்றி பாதிப்பை ஏற்படுத்தியது.
தினமணியின் தலையங்கத்தில் பல அவதாரங்களை வைத்தி எடுத்துள்ளார்.
“மன்னிக்கக்கூடாத குற்றம்” என்று தொடக்கத்திலேயே வைத்தி, ரஞ்சன் கோகாயாக உருமாறி, டெல்லிக்குச் சென்ற தப்லீக் ஜமாத்தினர் தண்டனைக்கு உரியவர்கள் என்பதாகத் தீர்ப்பளிக்கின்றார்.
உலகம் தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் போராடிக் கொண்டிருக்கும்போது, கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு கூட்டப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது. தவறு செய்தது போதாது என்று தாங்கள் செய்த தவறை அவர்களில் பலர் நியாயப்படுத்த முயல்வதும், அந்த அமைப்பினருக்குச் சிலர் ஆதரவுக் குரல் கொடுப்பதும், இதை மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று கூறி அடக்கி வாசிக்க முயல்வதும், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம் என்று தலையங்கத்தின் முதல் சொற்றொடர் தொடங்குகின்றது.
தப்லீக் ஜமாத் மஷூரா கூட்டம் தொடங்கிய அதே 8.3.2020 நாளன்று அதே டெல்லியில், நாட்டின் குடியரசுத் தலைவர் கோவிந்த் அவர்கள் தலைமை வகித்த ‘நாரீ ஷக்தி புரஸ்கார்’ விழா நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
“உலகம் தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் போராடிக் கொண்டிருக்கும்போது, கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் தில்லியில் அதுவும் குடியரசுத் தலைவரின் தலைமையில் ‘நாரீ ஷக்தி புரஸ்கார்’ விழா நடைபெற்றது பேரதிர்ச்சி அளிக்கிறது!” என்பதையும் சேர்த்து எழுதியிருந்தால் வைத்தியை நேர்மையான ஒரு பத்திரிகை ஆசிரியர் என்று ஒப்புக்கொள்ளலாம்.
தில்லி நிஜாமுதீனில் செயல்படும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகம், அலமி மர்கஸ் பங்களேவாலி மசூதியில் அமைந்திருக்கிறது. இப்போது வெளிவரும் செய்திகளிலிருந்து, மதத் தீவிரவாதத்தின் நாற்றங்காலாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. என்று இரண்டாவதாக உளவுத்துறை ஐ.ஜி. வேடத்தில் வெளிப்படுகின்றார் வைத்தி.
யாருக்கும் தெரியாத 94 ஆண்டு கால இரகசியத்தை ‘இப்போது வெளிவரும் செய்திகளால்’ எப்படிக் கண்டுபிடித்தீர்கள் மிஸ்டர் வைத்தி? ‘தீவிரவாதம்’, ‘பயங்கரவாதம்’ என்பதற்கும் தப்லீக் ஜமாத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே! உங்களுக்கு மட்டும் எப்படி எட்டியது வைத்தி? தப்லீக் ஜமாத்தின் தலைமையகம், நிஜாமுத்தீன் காவல்துறையின் அலுவலகத்தோடு ஒட்டித்தான் இருக்கிறது. ‘யாரும் அரசியல் பேசக் கூடாது’ என்பது தப்லீக் ஜமாத்தின் அடிப்படை கோட்பாடுகளில் தலையாயது. “அவர்கள் வானுக்கு மேலே உள்ள (மறுமை) வாழ்க்கையையும் பூமிக்குக் கீழேயுள்ள (மண்ணறை) வாழ்க்கையைப் பற்றியுமே பேசுவர்” என்பது உளவுத்துறையினருக்கு நெடுங் காலமாகத் தெரியும். சில கேள்விகள் உங்களுக்காக உண்டு. கொஞ்சமாவது நேர்மை இருந்தால் பதில் சொல்லுங்கள்:
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் தப்லீக் ஜமாத் அமைப்பாளர்களிடம், மசூதியிலிருந்து அனைவரும் கலைந்து போகும்படி ஐந்து நாள்கள் கெஞ்சி இருக்கிறார்கள். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இரவு நேரத்தில் நேரில் சென்று, நிலைமையை விளக்கி வேண்டிக்கொண்ட பிறகுதான், கூடியிருந்தவர்களைத் தனிமைப்படுத்தவும், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அனுமதித்திருக்கிறார்கள். ஜனநாயக இந்தியா இதை சகித்துக் கொண்டிருக்கிறது. என்று திரைக்கதை வசனகர்த்தாவாக மூன்றவது அவதாரம் வைத்திக்கு.
‘காவல் துறையினர் கெஞ்சினார்கள்’ என்று சிரிப்பு வசனத்தையும் சேர்த்து எழுத வைத்தி மறக்கவில்லை. காவல் துறை எப்படிக் கெஞ்சும் என்று மக்களுக்குத் தெரியாதா மிஸ்டர் வைத்தி?
New Delhi: Prime Minister Narendra Modi government banned all religious congregations Tuesday amid a nationwide lockdown in the wake of the coronavirus pandemic. But the order didn’t deter Uttar Pradesh chief minister Yogi Adityanath from attending a religious function in Ayodhya, and subsequently courting a controversy – The print |
பிரதமரால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மூன்று நாள்கள் கடந்த பின்னர் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அயோத்திக்குத் தம் பரிவாரங்களுடன் போய் வழிபாடு செய்தாரே! ஜனநாயக இந்தியா அதையும் சகித்துக்கொண்டுதானே இருக்கிறது?
ஜக்கி டான்ஸுக்கு வந்த வெளிநாட்டவர்கள், உள்நாட்டவர்கள் எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் தேறுமில்லையா? அப்புறம், லண்டனுக்குப் போய் வந்த டான்ஸர் கனிகா கபூர், மார்ச் மாத நடுவிலிருந்து பல பார்ட்டிகளில் பங்கெடுத்ததெல்லாம் பாவம், உங்களுக்கெப்படித் தெரியும்?
Allegations have surfaced that Kanika Kapoor hid her travel history before attending parties. Her irresponsible behaviour has fuelled danger in Uttar Pradesh and Delhi because after her party, those with whom she socialised have interacted with hundreds of people. – India Times |
டெல்லிக்குப் போய்ச் சேர்ந்த முதல் வேலையாகத் தங்கள் தகவல்கள் அனைத்தையும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்து, எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கி, ஊரடங்குக்கு ஒரு நாள் முன்னதாகவே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு புறப்படத் தயாரக இருந்தவர்களைப் பற்றி கற்பனைகளைக் கலந்து, இத்துணை வன்மத்துடன் எழுதி, உங்களுடைய சங்கிப் புத்தியை மிகவும் வெளிப்படையாகக் காட்டியதற்கு மிக்க நன்றி மிஸ்டர் வைத்தி!