தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி – இரண்டிலும் தோற்பவர் நீங்கள்!

60 ஆண்டுகள் இழுவையோ இழுவையாக இழுத்துக் கடைசியில் இழுத்து உட்காரவைத்துத் தலையில் மிளகாய்த் தோட்டத்தையே அரைத்துள்ளனர் நீதி?யரசர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்!

 

பட்டப்பகலில் முழு உலகமும் பார்த்திருக்கும் போதே பாபரி மஸ்ஜிதை இடித்துத் தரைமட்டமாக்கினர் இந்துத்துவக் கயவாலிக் காவிகள்! அதைக் கையாலாகாத வகையிலோ அல்லது மவுனமாக அங்கீகரிக்கும் வகையிலோ இடிக்கும் வரை தலைமறைவாகி இருந்து விட்டுப் பின்னர் முதலைக்கண்ணீர் வடித்தனர் காங்கிரஸ் துரோகிகள்; குறிப்பாக பிரதமர் நாற்காலியில் எந்த விலை கொடுத்தும் தூங்கிக்கொண்டே ஒட்டிக் கொண்டிருந்த நரசிம்மராவ் எனப்படும் அயோக்கியன்!

 

திட்டப்படி போதுமான முஸ்லிம்களைக் கொன்றொழித்த பிறகு ஊடகங்கள் முன்னர் தனது நாடகபாணியில் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திலேயே கட்டித் தரப்படும் என்று பொய்வாக்குறுதியும் தந்தான், இந்நாட்டு முஸ்லிம்கள் உள்பட இந்தியக் குடிமக்களின் நல்வாழ்வுக்கு வாக்களித்து பிரதமர் பதவி உறுதிப் பிரமாணம் எடுத்த பொய்யன்!

இது போதாது என எந்த அரசு பதவிக்கு வந்தாலும் டிசம்பர் 6 வரும் போதெல்லாம் பாதுகாப்புக் காரணம் என்ற பொய்யைச் சொல்லி சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்துக்காகத் துன்புறுத்தி  இதயத்தில் இடம் தருவதாகச் சொல்லும் சிறுபான்மைக் காவலர்!

உரிமையியல் வழக்கில் அனுபவப் பாத்தியதை என்ற சாதாரண காரணம் காட்டி எந்த ஒரு ஆக்கிரமிப்பாளரும் 12 ஆண்டுகள் தான் குடியிருக்கும் இடத்தையே விழுங்கி ஸ்வாஹா செய்துவிட்டால் சட்டமே அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்றிருக்கும் போது 400 ஆண்டுகள் பாத்தியதையில் இருந்த ஒரு மஸ்ஜித் காவிக் கயவர்களால் தரைமட்டம் ஆக்கப்படுவதற்கு உலகமே சாட்சியாக இருந்தும் பெரும்பான்மையினரின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கிறார்களாம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதியரசர்கள்!;

அதிலும் திருவாளர் சுதிர் அகர்வால் எழுதுகிறார்:
பாபரோ அவரது பிரதிநிதியோ தான் மஸ்ஜிதைக் கட்டினார் என்பதை முஸ்லிம்கள் நிரூபிக்கத் தவறிவிட்டார்களாம். ஆனால் பெரும்பான்மையினர் பகவான் ஸ்ரீ ராம் பிறந்த இடம் என்று நம்புவது உணர்வுப் பூர்வமாக மதிக்க வேண்டியதாம்! ;

சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையிலும் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள் வில்லங்கச் சான்றுகள் அடிப்படையிலும் தான் உரிமையியல் வழக்குகள் தீர்க்கப்படவேண்டும் என்பது சாதாரணக் குடிமகனுக்கும் தெரியும். ;

தோண்டிப் பார்த்தும் கிடைக்காத ஆதாரம், மிகவும் சிதிலமடைந்து உதிர்ந்து போன நிலையில் இருந்த ராமர் கோயில் இருந்த இடத்தில் மஸ்ஜித் கட்டியதை அநீதிக்கு துணை நிற்கும் அரச விசுவாசி அகர்வால் எப்படி அறிந்து கொண்டாராம்? அப்படியே கோயில் இருந்திருந்தாலும் கோசலைக்குப் பிரசவம் அந்த இடத்தில் தான் நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டாராம்?

விடை மிகவும் எளிது; அதுதான் தனது நீதியை[?] பகவான் ஸ்ரீ ராம் என்று எழுதி நிருபித்துவிட்டாரே காவிகளுக்கு விசுவாசமானவரென்று!

லிபரான் கமிசனும் இனி பெரும்பான்மைச் சுழலில் சிக்கிக் காணாமல் போகப் போவது உறுதி!

“பாபர் அன்னியன் ஆக்கிரமிப்பாளன்;  அவனுடைய சின்னத்தை அழிக்கப் படுவது தேசிய மானப்பிரச்சினை” என்று காதில் பூ சுத்தும் கா(வி)லிகள், இது போன்று இன்னும் எஞ்சியுள்ள எத்தனையோ ஆங்கிலேய, முகலாய அரசுகளால் கட்டப்பட்ட கட்டிடங்கள் அரசாங்கத்தின் கையிலும் பொது இடங்களாகவும் உள்ளனவே; அதை பற்றி ஏன் கண் மூடியுள்ளனர்? அங்கும் இதே காரணத்தை காட்டி தகர்த்து தரை மட்டமாக்க வேண்டியது தானே?

இதே பாணியில் இதற்கு முன்னர் புத்த விஹார்களாக ஆலயங்களாக இருந்தவற்றை இடித்து கோயில்களாகக் கட்டித்தள்ளியவர்கள் அவற்றையும்  திருப்பி தருமாறு நீதி வழங்கப்படுமா??

அட அகக்கண் குருடர்களே! நீதிபதிகள் எனும் பெயருக்கும் இழுக்கு விழும் விதமான உங்களின்  தீர்ப்பு, கையில் தராசுடன் கண்களைக் கட்டியுள்ள நீதி தேவதை சின்னம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டி அல்ல, நீதியை நியாயத்தை பார்க்காமல் தான் விரும்பிய விதத்தில் நீதி வழங்கிடவே கண்களை கட்டியுள்ளதோ என்று மக்கள் வியாக்கியானம் செய்ய வித்திடும் நிலையில் அமைந்து விட்ட உங்களின் கட்டப்பஞ்சாயத்து, இந்தியாவின் மானத்தை உலகின் முன்னிலையில் காற்றில் பறக்கவிட்டு விட்டதே!