குட்டி ஒட்டகம்!

தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் பேசிக் கொண்டிருந்தன.

‘‘அம்மா, நமக்கு ஏன் காலெல்லாம் ரொம்ப நீளமா இருக்கு?’’ என்று கேட்டது குட்டி.

‘‘பாலைவன மணல்ல நடக்கணும்னா, கால் நீளமா இருந்தாத்தான் வசதி. அதான்’’ என்றது தாய்.

‘‘அம்மா, நமக்கு ஏன் கண் இமை முடிகள் எல்லாம் நீளமா இருக்கு?’’

‘‘அப்போதான் பாலைவனத்து மணலெல்லாம் கண்ணுக்குள் புகாது.’’

‘‘நம்ம தோல் ஏம்மா சொர சொரனு ரொம்பக் கெட்டியா இருக்கு?’’

‘‘பாலைவனதுல வெயிலும் குளிரும் கடுமைய இருக்கும்ல. அதைத் தாங்கிக்கிறதுக்காக, தோல் கெட்டியா இருக்கு.’’

‘‘எல்லாம் சரிம்மா, அப்போ நாம ஏன் பாலைவனத்துல இல்லாம, இங்க ஜூவுல இருக்கோம்?’’ என்ற குட்டி கேட்ட கேள்விக்குத் தாயிடம் பதிலில்லை.

தொகுப்பு: அபூ ஸாலிஹா