பிணத்தைச் சுற்றிய பாம்பு! உண்மை என்ன?

Share this:

வூதியில் மரணித்த ஒருவரின் பிணத்தைப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அதனை அகற்ற பல்வேறு முயற்சிகள் செய்தும் அப்பாம்பு விட மறுப்பதாகவும் செய்திகள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் உலா வருகின்றன.

இப்புகைப்படங்கள் முறையே Facebook, Whatsapp போன்றவற்றில் முஸ்லிம்களுக்கிடையே அதிகமதிகம் பகிரப்படுகின்றன.

ஒரு சிலர் இது சவூதி அரேபியாவில் “நேற்று” நடந்த சம்பவம் என்றும், வேறு சிலர் இந்தியாவில் “சென்ற வாரம்” நடந்தது என்றும் சுபஹானல்லாஹ், மாஷா அல்லாஹ், அல்லாஹு அக்பர் போன்ற உணர்ச்சி முழக்கத்துடன் பரப்பிக் கொண்டுள்ளனர்.

இதன் பின்னணி என்ன என்று சில வாசகர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தின் “உண்மையைத் தேடி” பகுதியில் தொடர்பு கொண்டனர். அதன் அடிப்படையில் ஒரு சிறிய ஆய்வினை சத்தியமார்க்கம்.காம் மேற்கொண்டது.

அதன்படி, மலேசியாவில் கடந்த 2004 இல் ராஷித் சிபிர் என்பவர் தயாரித்து இயக்கியுள்ள Tanah Kubur என்ற பெயரிலான விழிப்புணர்வு நாடகம், டிவி சீரியல் வடிவில் வெளியானது தெரிய வந்துள்ளது.

Astro Oasis என்ற டிவி சேனல் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான இந்த தொடரின் ஒரு பகுதியில், வட்டி வாங்கிக் கொழுத்த பணக்காரன் ஒருவன் மரணம் அடையும்போது அவன் சேமித்து வைத்த பணம் அனைத்தும் பாம்பு வடிவில் அவனது கழுத்தை நெரிப்பதாக, புனைவுக் காட்சி அமைக்கப்பட்டு தொடர் வெளியானது.

தொடரின் இப்பகுதிக்கு கண் – காது – மூக்கு வைத்து, இணையத்தில் தவறான தகவல்களுடன் பரப்பப்பட்டு வருவதைக் கண்டு அதிர்ச்சியுற்ற இந்த டிவி சேனலின் இயக்குனர் நமன் ஜி ஹாரிஸ், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

அபூபக்கர் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவத்தை ஒட்டி இந்த நிகழ்ச்சியை தயாரித்திருந்தோம். அது பொய்த் தகவல்களுடன் இப்படி வினையாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

மறுமையில் நடக்கப்போவதாகச் சொல்லப்படும் பாம்பு கடி தண்டனை  செய்திக்கும், உலகில் பிணத்தைப் பாம்பு சுற்றியிருக்கும் படத்துக்கும் இடையே இம்மைக்கும் மறுமைக்குமான பென்னம்பெரிய இடைவெளி  இருப்பதை உணராது, “கேள்விப்பட்டதை எல்லாம் பரப்புவதில் முன்னிலை வகிப்பவர்கள்” என்பதை இதனை பரப்புவோர் உறுதிப்படுத்துகிறார்கள்.

மறுமையில் ஒருவர் செய்த நல்ல தீய காரியங்களுக்கு ஏற்ப அவருக்குத் தண்டனை உண்டு. ஆனால், அதை முன்வைத்து உருவாக்கப்படும் பொய்யான இது போன்ற செய்திகளே இணையமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. பரப்பும் நபருக்கு ஏற்றபடி கற்பனைக் குதிரையை தட்டி விட்டு, வெவ்வேறு வெர்ஷன்களில் கதைகளைப் புனைந்துள்ளனர். (ஃபித்னாவின் தமிழ் வடிவம் இங்கே!)

Lot of fabricated stories, similar to one below, has been rotating around web:

Snake in the janaza deadbody (Sample Story)

Allah is the Lord of the universe. There is a new story in hyderabad a snake is wondering near the dead body of a man. The snake turned around the body during people offering the Janazah Prayer. dead body’s face changed in black color. Allah forgive us all.

So we are the human should be careful from sin. One day we will leave this cruel world. Allah/God made a heaven and hell. Allah/God create the heaven for those people who lived here according to Allah/God on his right way. Those people who spend there life on the right way of Allah/God,they got heaven. In the heaven they spend permanent life,and heaven has no death.

Those people they make a lot of sin in the world and they disappointed the creation of Allah,they must got hell forever.Allah almighty is very kind for human.Allah/God never wants to fell his creation to the hell but people don’t stop their sin’s and they never try to forgive from Allah.

please pray to Allah/God forgive us all.

 ~ oOo ~

வருத்தத்திற்குரிய உண்மை என்னவெனில், பொய்ச்செய்தி பரவும் வேகத்தில் ஆயிரத்தில் ஒரு மடங்கு கூட, அதனைப் பற்றிய உண்மைச் செய்தியும் விளக்கமும் சென்று சேர்வதில்லை.

(முக்கிய கதாபாத்திரமான நடிகர்கள் பாம்பு மற்றும் பிணத்துடன்) டிவி தொடரில் நடித்த நடிகர்கள்:

இறைவனின் அற்புதத்தைக் கண் முன் காண ஆயிரம் நல்ல, எளிய விஷயங்கள் உள்ளன. ஒரு குழந்தை உருவாவதில், மழை பொழிவதில், காய்ந்த விதை பூமியைத் துளைத்துக் கொண்டு எழுந்து மரம் ஆவதில், கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களுக்கும் ஜோடிகள் படைத்திருப்பதில், ஒவ்வொரு உயிருக்கும் உணவளிப்பதில்… இப்படிப்பட்ட விஷயங்களைக் கண்டு சிந்தித்தாலே இறைவனின் அற்புதத்தை விளங்கிக் கொள்ள இயலும்.

இறைவனிடம் உள்ள வல்லமைக்கு, குன் (ஆகுக!) என்ற ஒரே வார்த்தையில் ஒட்டு மொத்த உலகத்தையும் கண்ணிமைக்கும் நேரத்தில் முஸ்லிம்களாக ஆக்கிக் கொள்ள இயலும். இப்படிப்பட்ட “அற்புதங்களை” காட்டித்தான் பிறரை ஈர்க்க வேண்டும் என்ற அவசியம் இறைவனுக்கில்லை.

“குழப்பம் விளைவிப்பது கொலையை விடக் கொடியது!” என்ற நபிமொழியையும், “ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்!” என்ற நபிமொழியையும் இந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்வோம்.

Facebook, Whatsapp போன்றவை மூலம் தினசரி வந்து சேரும் இத்தகைய நவீனக் குழப்பங்களிலிருந்து விடுபட்டு, சேமித்து வரும் நல்ல அமல்கள் பாழாகி விடாமல் பாதுகாத்துக் கொள்வோம்.

– சத்தியமார்க்கம்.காம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.