குடை கூறும் வானிலை அறிக்கை

Wi-Fi

 

வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது இன்றைய வானிலை குறித்த தகவல் இப்போது கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்; ஆனால் செய்தித்தாள் பார்க்கவோ, தொலைக்காட்சியின் வானிலை அறிக்கையைக் காணும் வரைக்கும் காத்திருக்கவோ பொறுமை இல்லை.

சரி… வானிலை குறித்த வலைத்தளங்களைப் பார்க்கலாமே என்கிறீர்களா? அடப்போங்கப்பா இப்போ தான் கணினியிலிருந்தே எழுந்திருத்தேன் என்கிறீர்களா?

இதற்காக சிகாகோவிலிருக்கும் மெட்டீரியஸ் எனும் நிறுவனம் ஒரு வைஃபை(Wi-Fi) குடையை வடிவமைத்துள்ளது. குடையை மாட்டி வைக்கும் கைப்பிடியில் உள்ள கம்பியிலா இணைய இணைப்பு மூலம் முன்னரே வரையறுக்கப்பட்ட வானிலை வலைத்தளங்களுக்கு தானே தொடர்பு கொண்டு வானிலை நிலவரத்தை குடைக் கைப்பிடி நிறம் மாறுவது மூலம் தெரிவிக்கும்.

ஒரு சாதாரண குடை தானே  என இனி யாரும் ஏளனமாக நினைக்க வேண்டாம். இக்குடை இன்னும் சந்தைக்கு வரவில்லை. இம்மாதம் 23ம் தேதி (23-05-2005) ஹவுட் கிரீன் எனும் கண்காட்சியில் இக்குட இடம் பெறும் என மெட்டீரியஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவல்: அபூஷைமா