விளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்!

Share this:

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக இந்துக்களுக்கு மதவெறியூட்டிக் கொண்டு வருகிறது பா.ஜ.க! மனித குலத்திற்கே வேட்டு வைக்கும் இத்தகைய மதவெறியர்களை அடையாளம் கண்டுகொண்டு கண்டித்து வரும் இந்து சகோதரர்களுக்கு இச்சமயத்தில் நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

ஓட்டுப் பொறுக்கிகளின் கேவலமான அரசியல் லாபத்திற்காக, அப்பாவிச் சிறுபான்மையினர் மீது பழியைப் போட்டு இந்து – முஸ்லிம் ஒற்றுமையைக் குலைக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் கொலைகளை முன்னிறுத்தி, முஸ்லிம்கள் மீது பழி போடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனினும் அவற்றில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்து வருகின்றன.

“படுகொலைகளைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் தான்!” என்று போராட்டம் நடத்திய ஹிந்துத்துவா இயக்கங்களே வெட்கப்பட்டு தலைகுனியும் படியாக, அக் கொலைகளுக்கான காரணம் முன் விரோதம், தொழிலில் போட்டி, கொடுக்கல் வாங்கல், பெண் தொடர்பு, கந்து வட்டி, அரசியல் இலாபம் என்று பல்வேறு பரிமாணங்கள் தொடர் விசாரணைகளில் வெளிவந்து பல் இளிக்கிறது.

மேற்கண்ட காரணங்களில் லேட்டஸ்டாக இணைந்திருப்பது ஹிந்துத்துவா நிர்வாகிகளின் “விளம்பர மோகம்”

அதாவது, தன் வீட்டிற்குத் தானே வெடிகுண்டு வீசிவிட்டு – தீவிரவாதிகள் தாக்கியதாகவும், அதனால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பொய் புகார் அளித்து, டிவி, செய்தித்தாள்கள் மூலம் “புகழ்” அடைய எண்ணிய கேவலங்கள் வெளியே வந்து சந்தி சிரிக்கின்றன.

 இன்றைய (05-10-2013) ஊடங்களில் வெளியான பரபரப்பான செய்தி:

இந்நேரம்.காம்: குண்டு வீசியதாக நாடகமாடிய பா.ஜ.க நிர்வாகி கைது!

கோவை: தனது வீட்டில் தானே குண்டு வீசி நாடகமாடிய பா.ஜ.க நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை, வடவள்ளி அருகே, சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியில், வசிப்பவர் ராமநாதன். இவர்,பா.ஜ.,வின், நிர்வாகி. தன் வீட்டில் மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசியதாக, காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமநாதன், வேண்டுமென்றே, தனக்குத்தானே தனது வீட்டில் குண்டு வீசிவிட்டு தவறான புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, ராமநாதன் கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்

இதேபோல தன் சொந்த விளம்பரத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல்-பழனி சாலையில் பாஜக நிர்வாகி பி. பிரவீண்குமார் தன் சொந்த வீட்டில். பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதும் இதுதொடர்பாக பிரவீண்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.

http://www.inneram.com/news/tamilnadu/2410-bombing-acting-bjp-personage-arrested.html

http://www.dinamalar.com/news_detail.asp?id=819441

http://newindianexpress.com/states/tamil_nadu/BJP-worker-hurls-bomb-at-his-house-files-false-complaint/2013/10/04/article1818993.ece

பாஜக நிர்வாகி ராமனாதன் வீட்டில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து காவல்துறையினரின் விசாரணை தொடர்புடைய Youtube வீடியோ:

{youtube}CWsrgzmjP70{/youtube}

Ramanathan had lodged a police complaint after an organisation had put up posters in Coimbatore opposing the visit of Gujarat Chief Minister and BJP’s prime ministerial candidate Narendra Modi to Tamil Nadu. (The Hindu)

ஹிந்துத்துவாவின் இத்தகைய மோசமான செயல்களை இந்து சகோதர சகோதரிகளே தற்போது பெருமளவில் அடையாளம் கண்டு வருகின்றனர். மேலும், இத்தகைய வேஷங்களுக்கு ஆதரவு தரும் பார்ப்பன தினமலர் போன்ற மோடி பிரச்சாரப் பத்திரிகைகளும் இந்துக்களாலேயே இனம் கண்டு ஒதுக்கப்படுகின்றன.

தமிழக மக்கள் இத்தகைய மதவெறிப் பிரச்சாரங்களை அடையாளம் கண்டு நிராகரித்து ஒருங்கிணைய வேண்டும். அமைதிப் பூங்காவான தமிழகத்தில் இந்துமதவெறியருக்கு இம்மியளவும் இடமில்லை என்பதை நிலைநாட்ட வேண்டும்.

– அபூ ஸாலிஹா

தொடர்புடைய செய்திகள்:

“கட்சியில் பதவிக்காக, தன் பைக்கை, தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர் சக்திவேல் கைது!!”

“பிரதமா் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்: காஞ்சிபுரம் பாஜக நிா்வாகி திருநாவுக்கரசு கைது!”

“ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனோகரன் கைது: விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!”

“விளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்!”

”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்!
“பாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …!”
“ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குண்டு மிரட்டல் விடுத்த முருகானந்தம் கைது!”
“போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காக குமரி பா.ஜ. பிரமுகர் கொலை முயற்சி நாடகம்!”
“முஸ்லிம் பெயரில் குண்டு மிரட்டல். மாணவர் ஹரீஷ் கைது!”
“சிதம்பரத்தில் பா.ஜ.க பொதுச்செயலாளர் கொலை! மூன்று இந்துக்கள் கைது!”

 

 Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.