பான் கேக் செய்வது எப்படி?

{mosimage}
தேவையான பொருள்கள்
300 மி.லி மைதாமாவு
1/4 தேக்கரண்டி சோடா உப்பு
150 கிராம் சர்க்கரை
2 முட்டை
தேவைக்கேற்ப நெய்

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: மிக எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: NA 
தயாராகும் நேரம்: 15 (நிமிடம்)
சமைக்கும் நேரம்: 20 (நிமிடம்)
ஆக்கம்: அபூ சாலிஹா

விளக்கம்

சுவையான பான் கேக் செய்வது எப்படி என்று இப்பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

முட்டைகளை நன்றாக நுரை பொங்க அடித்து மைதா, சர்க்கரை, தண்ணீர், சோடா, உப்பு ஆகியவற்றைக் கலந்து தோசை மாவு போல் தயார் செய்யவும். முழுச்சமையலையும் இளந்தீயில் அடுப்பை வைத்திருப்பது முக்கியமான ஒன்று. தோசைச் சட்டியில் கொஞ்சம் நெய் விட்டு மாவு ஒரு கரண்டி விட்டு தோசை போல் விரித்து எடுக்கவும். மறுபக்கமும் திருப்பிவிட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.