மட்டன் மர்க் (Mutton Margh)

மட்டன் மர்க் (Mutton Margh)

தேவையானவை:

ஆட்டிறைச்சி – 1/2 கிலோ

இஞ்சி பேஸ்ட் – 2 தேக்கரண்டி

மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி

சமையல் எண்ணெய் – 3 தேக்கரண்டி

உப்பு, கொத்துமல்லித் தழை

 

செய்முறை:

  1. அடுப்பில் குக்கரை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி மிதமான வெப்பத்தில் சூடாக்கவும்.

  2. பின்னர் இஞ்சி பேஸ்ட் போட்டு ஒட்டிக் கொள்ளாதவாறு கிளறவும்.

  3. பின்னர் இறைச்சியையும் மிளகுத் தூளையும் தேவையான அளவு உப்பையும் அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

  4. இறைச்சி மூழ்கும் அளவு நீரை நிரைத்து குக்கரை மூடி வைக்கவும்.

  5. மூன்று விசிலிற்குப் பிறகு திறந்து இறைச்சி வெந்து விட்டதை உறுதி செய்து கொண்டு, கொத்துமல்லித் தழை தூவினால் “மர்க்” ரெடி.

மர்குக்குத் தேவையில்லாத வெங்காயம், தக்காளி, மசாலாக்கள், தேங்காய்ப்பால், தயிர், குங்குமப்பூ போன்ற எதையும் இதில் சேர்த்துவிட வேண்டாம்.

பரோட்டோ, சப்பாத்தி, இடியாப்பம் ஆகியனவற்றுக்கு எளிதான விரைவான ஸைட் டிஷ் மர்க் ஆகும்.

குறிப்பு : இந்த மெனு அரைகிலோ ஆட்டிறைச்சி மர்க்குக்கானதாகும். உறுப்பினர்கள் அதிகமுள்ள பெரிய குடும்பம் என்றாலோ அவசரமாக வந்துபோகும் விருந்தினர்கள் என்றாலோ இறைச்சியையும் பிறவற்றையும் இரட்டிப்பாக்கிக் கொள்ளலாம்

– ஆக்கம்: Zahid Hussain, Dallas, USA