தேவையான பொருட்கள்
சுக்கு |
: 1.5″ நீளம் |
பெரிய வெங்காயம் |
: 2 |
தக்காளி |
: 3 |
பூண்டு் |
: 1 |
சிறு வெங்காயம் |
: 1 கைப்பிடி |
புளி |
: 1 சிறு எலுமிச்சை அளவு |
மிளகாய்த்தூள் |
: 1 மேஜைக் கரண்டி |
மல்லித்தூள் |
: 2 மேஜைக் கரண்டி |
கொத்தமல்லித் தழை |
: 3 கீற்று |
கறிவேப்பிலை |
: 2 கீற்று |
நல்லெண்ணெய் |
: 1 குழிக்கரண்டி |
உப்பு |
: தேவைக்கு ஏற்றாற்போல் |
தாளிப்பதற்கு
கடுகு 1/2 ஸ்பூன்
உளுந்து 1/2 ஸ்பூன் அல்லது வடகம்
சீரகம் 1/4 ஸ்பூன்
முன்னேற்பாடுகள்
கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமாகக் காய்ந்ததும் சுக்கைப் போட்டு, கருக விடாமல் இருபுறமும் புரட்டிப் புரட்டிப் போடவும். சுக்கு உப்பி வந்த பின்னர் கடாயில் இருந்து எடுத்து, ஆறியதும் அதைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
பூண்டில் பாதியை வைத்துக் கொண்டு, மீதிப் பூண்டுப் பல்லை மீதி எண்ணெயில் போட்டு வதக்கி, அது சிவந்ததும் எடுத்து விடவும்.
பெரிய வெங்காயம், தக்காளியை வெட்டி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பாதியாக நறுக்கிக் கொள்ளவும். மீதிப் பூண்டுப் பற்களை நான்காகக் கீறி வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்துச் சாறு எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை
வெங்காயம், தக்காளி, தட்டிய சுக்கு, வதக்கிய பூண்டு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் மீதி எண்ணெயை ஊற்றி, கடுகு, (அ)வடகம் தாளித்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டுப் பொரிந்ததும் சின்னவெங்ககாயம் சேர்த்து எல்லாம் சிவந்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் அரவையையும் அதில் போட்டு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை சுருள வதக்கி, புளித்தண்ணீர் விட்டு, உப்பு, கீறிய பூண்டுப் பல்லைப் போட்டுக் கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்துச் சுண்டியதும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
மணக்கும் சுக்குக் குழம்பு பசியைத் தூண்டி வாவா என்று அழைக்கும்.
குறிப்பு
இந்தக் குழம்பு உடல்வலியைப் போக்கும். மாந்தக்கோளாறு, ஜீரணக்குறைவு, பித்தம் ஆகியவற்றைப் போக்குகின்ற இயற்கை நிவாரணியாகும். மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
– ஆக்கம் : உம்மு ஷிஃபா
சுக்கு |
1.5″ நீளம் |
பெரிய வெங்காயம் |
2 |
தக்காளி |
3 |
பூண்டு |
1 |
சிறு வெங்காயம் |
1 கைப்பிடி |
புளி |
1 சி.எலுமிச்சைஅளவு |
மிளகாய்த்தூள் |
1 மேஜைக் கரண்டி |
தனியாத்தூள் |
2 மேஜைக் கரண்டி |
கொத்தமல்லித் தழை |
3 கீற்று |
கறிவேப்பிலை |
2 கீற்று |
நல்லெண்ணெய் |
1 குழிக் கரண்டி |
உப்பு |
தேவைக்கேற்ப |