மட்டன் முதாபக் (மலேசியன்)

{mosimage}

தேவையான பொருள்கள்
மட்டன் கீமா – 1/2 கிலோ
தக்காளி சாஸ் – 4 தேக்கரண்டி
இஞ்சி – 1 தேக்கரண்டி
பூண்டு -1 தேக்கரண்டி
உப்பு – தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
க்கரு மிளகு – 1 தேக்கரண்டி
முட்டை – 2
கரம் மசாலா – தேவையான அளவு
மைதா மாவு – 2 கப்
பெரிய வெங்காயம் – 1
நெய் – 2 தேக்கரண்டி

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: மிக எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: NA
தயாராகும் நேரம்: 50 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)

 

முன்னேற்பாடுகள்:

1. மைதா மாவை நெய், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து 3/4 மணி நேரம் ஊர வைக்கவும்

2. முட்டையை நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவும்

3. வெங்காயத்தை நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

4. இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும்

5. கரு மிளகை பொடி செய்து கொள்ளவும்

செய்முறை

சமையல் எண்ணையை வாணலியில் விட்டு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.  பிறகு மட்டன் கீமா சேர்த்து வதக்கவும். உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, மிளகு தூள், தக்காள்ளி சாஸ் போட்டு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

 

மைதா மாவு கலவையை உருட்டி அதன் மேல் அடித்து வைத்துள்ள முட்டையை தடவி சமைத்த கீமா கலவையை வைத்து பொரித்த வெங்காயத்தை தூவி மடக்கிவிடவும்.

 

வாணலியில் எண்ணெய் விட்டு பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுக்கவும்.

 

எடுத்து நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.