{mosimage}
தேவையான பொருள்கள்
கெட்டி தயிர் – 100 கிராம் எலும்பற்ற சிக்கன் கறி – 200 கிராம் பச்சை மிளகாய் – 5 வெங்காயம் – 50 கிராம் இஞ்சி – 10 கிராம் பூண்டு – 10 கிராம் சிவப்பு மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி மல்லி தூள் – 1 தேக்கரண்டி கரம் மசலா – 3 தேக்கரண்டி சமையல் எண்ணை – 50 மிலி. உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி தழை கரு மிளகு – 15 கிராம்
|
சமையல் குறிப்பு விபரம் செய்வது: மிக எளிது |
முன்னேற்பாடுகள்: 1. இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயத்தை விழுதாக அரைத்துக்கொள்ளவும் 2. தயிரை நன்றாக அடித்துக்கொள்ளவும் 3. கரு மிளகை பொடி செய்துகொள்ளவும் 4. பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டிக்கொள்ளவும் 5. கொத்தமல்லி தழையை நறுக்கிகொள்ளவும் |
செய்முறை சமையல் எண்ணையை வாணலியில் சூடாக்கவும். ஆவி வந்தவுடன் இஞ்சி, பூண்டு, வெங்காய விழுது மற்றும் கரு மிளகு தூள், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும். பிறகு தயிர் சேர்த்து, சிக்கன் மற்றும் இதர பொருட்கள் அனைத்தையும் (கொத்தமல்லி தழை தவிர) போட்டு மித சூட்டில் 20 நிமிடம் சமைக்கவும்.
எடுத்து நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும். |