துபையில் ‘உணர்வாய் உன்னை’ தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம்

Share this:

துபையில் கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் சார்பில் ‘உணர்வாய் உன்னை’ எனும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (10/08/2007) அன்று கராமா பகுதியில் உள்ள விஸ்டம் இன்ஸ்டிட்டியூட்டில் நடைபெற்றது.

வளைகுடாவிற்கு வந்து விட்ட அவசரத்தில் ஒவ்வொருவரும் சம்பாதிப்பதில் மட்டுமே குறிக்கோளாய் இருந்து வரும் மனிதர்கள் தாங்கள் யார், தங்களிடம் உள்ள திறமைகள் என்ன, தேவையற்ற சிந்தனைகளை மனதில் புதைத்து வைத்துக் கொண்டு வாழ்வைத் தொலைத்து திரிகின்றனர் சிலர்.

இத்தகைய நிலையைப் போக்கிடும் முயற்சியாக கோட்டாறு நண்பர்கள் எடுத்த முயற்சியின் காரணமாய் பயிற்றுநர்கள் பொதக்குடி ஜலால் மற்றும் கள்ளக்குறிச்சி உசேன் பாஷா ஆகியோர் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தனர்.
ஆங்கிலத்தில் பெங்களூரைச் சேர்ந்த இஸ்லாமிக் வாய்ஸ் ஆங்கில மாத இதழ் ஆசிரியர் துபையில் இம்முகாமை நடத்திய பின்னர் தமிழில் இத்தகைய பயிற்சி வகுப்புகள் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் சிறப்புற நடைபெற்று வருகிறது.

கோட்டாறு நண்பர்கள் குழுமம் பல்வேறு கல்வி, சமூக மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை துபையில் உள்ள தங்களது ஊர் நண்பர்களை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.

‘உணர்வாய் உன்னை’ பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் தலைவர் நசீர் உசேன் (050 655 2491), செயலாளர் ஜகபர் சாதிக் (050 734 6756), அசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இது போன்ற பயிற்சி முகாம்களைத் தமிழகத்திலும், அமீரகத்திலும் நடத்த விரும்புவோர் ஜலால் (050 614 2633) மற்றும் உசேன் பாஷா (050 385 1929) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

தகவல்: முதுவை ஹிதாயத்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.