அமீரகத்தில் பொது மன்னிப்பு நடைமுறை

Share this:

அரபு அமீரக ஒன்றியத்தில் (United Arab Emirates) உள்நுழைவு ஆணை (Visa) காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருப்போர் எவ்வித அபராதம் மற்றும் தண்டனையின்றி தாயகத்திற்கு திரும்ப அமீரக மைய அரசு பொதுமன்னிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் படி தாயகம் செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு பயண ஆவணங்களை வழங்கும் பணியில் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் (Embassy of India) மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் (Consulate General of India) பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஈடுபட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தாயகம் செல்ல விரும்புவோர் கீழ்க்கண்ட சிறப்பு மையங்களில் தங்களது விண்ணப்ப்தை சமர்ப்பிக்கலாம் என துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் (Consulate General of India) வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் தெரிவித்துள்ளது. அவை வருமாறு : 

துபாய்:

இந்திய உயர்நிலைப்பள்ளி (Indian High School) : 050 1505292

கேரளா முஸ்லிம் கலாச்சார மையம் (Kerala Muslim Cultural Centre): 050 3402889

துபாய் இந்திய இஸ்லாமிய மையம் (Dubai Indian Islamic Centre) : 050 8808312

இந்திய நிவாரணக் குழு (Indian Relief Committee) : 050 5849320 

ஷார்ஜா:

இந்திய சங்கம் (Indian Association), ஷார்ஜா : 050 7866591

இந்திய சமூக கலாச்சார மன்றம் (Indian Social and Cultural Club), கல்பா : 050 7108750

இந்திய சமூக மன்றம் (Indian Social Club), கோர்·பக்கான் : 050 2327158 

அஜ்மான்:

இந்திய சங்கம் (Indian Association) : 050 4203464 

ராஸ் அல்-கைமா:

இந்திய சங்கம் (Indian Association),ராஸ் அல்-கைமா : 050 5402267

இந்திய நிவாரணக் குழு (Indian Relief Committee)  : 050 7404592 

உம் அல்-குவைன்:

இந்திய சங்கம் (Indian Association), உம் அல்-குவைன் : 050 2060409 

ஃபுஜைரா:

இந்திய சமூக மன்றம் (Indian Social Club), புஜைரா : 050 4709263 

இத்திட்டம் குறித்து மேலதிக தகவல் தேவைப்படுவோர் ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 050 4293269 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். 

இத்திட்டத்தின் கீழ் அவசரப் பயணச் சான்றிதழ் பெற விரும்புவோர்,

1. பாஸ்போர்ட் நகல் மற்றும் விசா நகல்
2. பாஸ்போர்ட் இல்லாதவர்கள் பாஸ்போர்ட் பற்றிய விபரக்குறிப்புகள்

அல்லது

இந்திய ஓட்டுநர் உரிமம் (புகைப்படத்துடன்) , தேர்தல் ஆணைய அடையாள அட்டை, குடும்ப அட்டை (புகைப்படத்துடன்), அமீரக பணியாளர் அடையாள அட்டை, உடல்நல அட்டை, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்ட அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம். 

தகவல்: முதுவை ஹிதாயத், துபாய்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.