அண்ணா பல்கலையில் NRI குழந்தைகளைச் சேர்க்க…!

Share this:

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கீழ்க்கண்ட கல்லூரிகளில் பொறியியல், நுட்பம், கட்டிடவியல் இளநிலை (B.E./B.Tech./B.Arch.) மற்றும் முதுநிலைப்படிப்புகளில் சேர்க்க 2008 -09 ஆம் கல்வியாண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிண்டி பொறியியற் கல்லூரி (College of Engineering Guindy – CEG)
அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி (AC College of Technology – ACTech)
கட்டிடக்கலை & திட்டவியல் பள்ளி (School of Architecture & Planning – SAP)
சென்னை தொழில்நுட்பப் பயிலகம் (MIT, Chromepet)

இதற்கான விண்ணப்பங்களைப் பல்கலைக்கழகத்தின் தள முகவரியிலிருந்தோ அல்லது
 

இயக்குநர் (சேர்க்கை )
பன்னாட்டு விவகாரங்கள் மையம்,

அண்ணா பல்கலைக்கழக வளாகம்
சென்னை 600 025

 

என்ற முகவரியில் நேரில் அணுகியோ பெற்றுக்கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 200 அமெரிக்க டாலர் வரைவுக்காசோலையுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு இளநிலைப் படிப்புகளுக்கு 06 ஜூன் 2008-க்கு முன்னதாகவும், முதுநிலைப் படிப்புகளுக்கு 30 ஜூன் 2008-க்கு முன்னதாகவும் வந்துசேர வேண்டும்.

Director (Admissions) / Director – Centre for International Affairs,
Anna University Chennai,
Chennai 600 025

 

தகவல்: முதுவை ஹிதாயத்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.