பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க என்ன வழி?

Share this:

ன்றிக் காய்ச்சல்… சுவைன் ப்ளு…. H1N1 (Influenza A)… இன்றைய தலைப்புசெய்திகளில் அதிகம் காணப்படுவதும் மக்களிடம் அதிகமாக பேசப்படுவதும், விவாதிக்கப் படுவதுமான ஒன்று.

 

பன்றி இறைச்சி உண்பதால் பன்றிக் காய்ச்சல் வருவதாக எண்ணுவது அறியாமையாகும். முதற்கண், பன்றிக் காய்ச்சல் வைரஸ்கள்,  அவ்விலங்குகள் வளர்க்கப்படும் பண்ணையில் புழங்கும் மனிதர்களைத் தொற்றுகிறது. இருப்பினும் உடனடியாக அவர்களைப் பாதிப்பதில்லை. சில நாட்களில் அவற்றின் புரத அமைப்பு திடீர் மாற்றம் (Mutation) அடைந்து மனித உயிரணுக்களான செல்களைப் பாதிக்கும் அளவு தகவமைப்புப் பெறுகிறது.

அப்போதுதான் H1N1 என்று பெயரிடப்பட்ட இழையாக மாறுகிறது. தகவமைப்புப் பெற்ற வைரஸ் நன்கு மனித செல்களைத் தாக்கும் முழு ஆற்றல் கொண்டதாக மாற்றம் பெறும்போதுதான் இது ஒரு மனிதரை விட்டு இன்னொரு மனிதரைத் தொற்றும் இயல்பு பெறுகிறது. இது காற்றில் பரவுவதால் நாடு விட்டு நாடு பயணிப்போர் மூலம் பரவ இயலுகிறது.

இன்ஷா அல்லாஹ்… இதைப்பற்றி முக்கியமான தகவல்களையும் அதிலிருந்து எப்படி காத்துக் கொள்வது என்பதை இந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொள்வோம்.

இதில் இடம் பெறும் தகவல்கள் உலக சுகாதார நிறுவனமான WHOவிடமிருந்து பெறப்பட்டவையாகும்.

இன்றைய சூழலில் இதைப்பற்றி ஆராய்வதற்கு முன், இதிலிருந்து எப்படி நம்மைக் காத்துக் கொள்ளலாம் என்பதே முக்கியமாகும். எனினும் சிறு குறிப்புகளை அறிவது அவசியம் (இன்ஷா அல்லாஹ் தேவைப்பட்டால் இதைப்பற்றி மிக நீளமான கட்டுரை ஒன்றைப் பிறகு பகிர்ந்து கொள்வோம்).

பன்றிக் காய்ச்சல் முதன்முதலில் அமெரிக்க நாட்டில் இரு குழந்தைகளுக்கு இருப்பதாக மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டது எனினும் இந்த நோயின் ஆதிமூலம் மெக்சிகோ நாடு என்பதாகவே சொல்லப்படுகிறது (பார்க்க [6]). இது பன்றிப்பன்னையிலிருந்து தொற்றியதாகவே அறியப்படுகிறது. இந்த நோய் முதலில் அதிகம் பாதித்தது மெக்சிகோ நாட்டையே. அதன் பிறகு அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டது. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு பரவியதாக நம்பப்படுகிறது. இன்றோடு இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் இரு லட்சம் (approx. 1,87,830. மேலும் உடனுக்குடனான புதிய தகவல்களுக்கு, பார்க்க [5]).

இது மனிதக்காய்ச்சல் கிருமிகளின் ஒன்றும் பறவைக்காய்ச்சல் கிருமிகளின் ஒன்றும் பன்றிக் காய்ச்சல் கிருமிகளின் இரண்டும் ஆக, நான்கு தாக்குதல் கிருமிகள் சேர்ந்த புதுவகையான தாக்குதல் கிருமியாக தற்போதய ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளது (பார்க்க [6]). இது சுவசத்துளிகள் மூலமாக மனிதர்களுக்குள் பரவுவதாக அறியப்படுகிறது (பார்க்க [7-8]). இதற்குச் சரியான மருந்துகள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை (பார்க்க [7]). எனினும் சில நிறுவனங்கள் தாங்கள் மருந்து கண்டுபிடித்து விட்டதாகக் கூறி வருகின்றன (பார்க்க [2]). பன்றிக்காய்ச்சலுக்குத் தற்போது Oseltamivir Or Zanamivir என்ற ஆண்டி-வைரல் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன (பார்க்க [7]). மேலும் இந்தக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு டாமிஃபுளு (Tamiflu) மருந்து பயன்படுத்தப்படுகிறது (பார்க்க [1]).

இந்தக் காய்ச்சல் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்க கூடியதாக உள்ளது. வயதானவர்களுக்கும் அதிகம் பாதிப்பை உண்டு பண்ணக் கூடியதாக உள்ளது. மேலும் இந்நோய் ஆஸ்த்மா, உடல் பருமனானவர்கள், நுரை ஈரல், கிட்னி, ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புள்ளது (பார்க்க [3]). இந்தக்கிருமியின் பாதிப்பு ஆரம்பத்தில் அவ்வளவாகத் தெரியாது. சாதரணக் காய்ச்சல், ஜலதோசம், உடல் வலி, வயிற்று வலி போன்றுதான் இருக்கும். இதற்கு இதுவரை தடுப்பு மருந்துகளும் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரியவில்லை. தடுப்பு மருந்துகள் இல்லை எனவே கூறலாம் – பார்க்க [7]).

இந்தக் காய்ச்சல் நோயின் அறிகுறியையும் அதிலிருந்து எப்படி காத்துக்கொள்வது என்பதையும் இன்ஷா அல்லாஹ் இப்போது பாப்போம் (இது உலக சுகாதார அமைப்பின் இணைய தளத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது).

நோயின் அறிகுறி:

* சாதரண நோய்க்கும் H1N1 க்கும் வித்தியாசம் காண முடியாது.

பொதுவான அறிகுறிகள்:

* காய்ச்சல், இருமல், தலை வலி, உடல் வலி, தொண்டை வலி மற்றும் அரிப்பு, மூக்கொழுகுதல்.

மருத்துவ நிபுணர்கள் மட்டுமே இந்த நோயை உறுதிப்படுத்த முடியும்.

நோயிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது:

  • அதிகமதிகமாக துஆ செய்து இறைவனிடம் பாதுகாப்பு தேடுங்கள்.
  • இந்த நோயின் அறிகுறி தெரிபவரிடம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவும்.
  • மூக்கையும் வாயையும் தொடுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும்.
  • கை சுத்தத்தை பேணவும். சோப்பு போட்டு அடிக்கடி கையை கழுவவும் (கையை எவ்வாறு கழுவுவ வேண்டும் என்பதைப் பட விளக்கத்துடன் உலக சுகாதார நிறுவன ஆவணத்தைப் பார்க்கவும் – பார்க்க [9])
  • உடல் நலம் குன்றியவர்களிடம் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.
  • கூட்டமான இடங்களில் நிற்பதைத் தவிர்க்கவும்.
  • உங்கள் இருப்பிடத்தை காற்றோட்டமானதாக ஆக்கிக்கொள்ளவும்.

உங்களுக்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால்:

  • வீட்டிலேயே இருக்கவும்
  • ஓய்வெடுக்கவும். அதிகமாக நீர், ஜூஸ் அருந்தவும்
  • தும்மும்போதும் இருமும்போதும் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளவும். நீங்கள் கைக்குட்டையோ அல்லது அது போன்ற ஒன்றை தும்மும்போது பயன்படுத்தினால் அதை கண்ட இடங்களில் போடாமல், மற்றவர்களுக்கு பாதிப்பில்லாமல் அப்புறப்படுத்தவும்.
  • முகமூடி அணிந்து கொள்ளவும்.
  • உறவினர் மற்றும் நண்பர்களிடம் தெரியப்படுத்தி அவர்களிடம் சற்று நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம் அவர்களுக்குப்பரவுவதைத் தவிர்க்கலாம்.

முக்கியமாக, N95 மற்றும் சில வகை முகமூடிகள் அணிவதால் இந்நோயிலிருந்து

பன்றியின் இறைச்சி, இறைவேதம் அல்குர்ஆனிலும் (2:173; 5:3; 6:145; 16:115) பைபிளிலும் (5:17-19; 11:7-8; 14:8; 65:2-5) உண்பதற்குத் தடை செய்யப் பட்டதாகும்.

தப்பிக்கலாம் என்பது போன்ற  தவறாக நம்பிக்கை நம் மக்களிடையே காணப்படுகின்றது. இது ஒரு தவறான நம்பிக்கை (பார்க்க [4]). உங்களுக்கு இந்நோய் இருந்து இது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க இதைப் பயன் படுத்தவும்.

எல்லாம் வல்ல அர்ரஹ்மான் இந் நோயிலிருந்து அனைத்து மக்களையும் காப்பாற்றி அருள்வானாக,

செய்தி: டாக்டர் எஸ்.ஜாஃபர் அலி Phd (USA)

References:
[1] WHO recommends Tamiflu in ’severe’ swine flu treatment, AFP: http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gHsIlKD0CynlBXAg2wpltiGfm6Qg

[2] Cipla : http://www.xomba.com/cipla_has_launched_new_drug_against_swine_flu_where_virenza_available

[3] Independent: What you need to know about H1N1, http://www.independent.ie/health/swine-flu/what-you-need-to-know-about-h1n1-1855513.html

[4] Myth Busted: N95 Masks Are Useless at Protecting Wearers from Swine Flu, http://www.naturalnews.com/026160_preparedness_swine_flu_outbreak.html

[5] TheAirDB: http://www.theairdb.com/swine-flu/heatmap.html

[6] Wikipedia: http://en.wikipedia.org/wiki/2009_flu_pandemic

[7] World Health Organization: http://www.who.int/csr/disease/swineflu/frequently_asked_questions/what/en/index.html

[8] World Health Organization: http://www.who.int/csr/resources/publications/Adviceusemaskscommunityrevised.pdf

[9] World Health Organization: http://www.who.int/gpsc/5may/How_To_HandWash_Poster.pdf


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.