குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), நடத்தி வரும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய விபரங்களை முன்பு வெளியிட்டிருந்தோம்.
தற்போது IGC நடத்தவிருக்கும் ஒரு சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் சன் டிவி நேருக்கு நேர் புகழ் வீரபாண்டியன் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பில் வரும் 25ம் தேதி குவைத், ஃபஹாஹீலில் உள்ள IGC அலுவலகத்தில் ஊடகப் பயிலரங்கம் நடைபெற உள்ளது. இதில் சன் டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சி புகழ் வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும்.
இதையடுத்து வரும் 26ம் தேதி சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறுகிறது. ஸால்மியா இந்தியன் மாடல் ஸ்கூல் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வீரபாண்டியன் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
இவ்விரு நிகழ்ச்சிகளிலும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு இஸ்லாமிய வழிகாட்டி மையம் அழைப்பு விடுத்துள்ளனர். குவைத்தில் வாழும் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இப்பக்கத்தின் லிங்க்கை அனுப்பவும். ( http://www.satyamargam.com/news/world-news/2278-sun-tv-veerapandian-to-attend-igc-function-at-kuwait.html) கூடுதல் விபரங்களுக்கு IGC தளத்தினைப் பார்வையிடவும். (igckuwait.net)