இராக்கின் அமைதிக்கு நம்பிக்கையூட்டும் சவூதி-ஈரான் மாநாடு

{mosimage}சவூதி அரேபியாவும் ஈரானும் தற்பொழுது இராக்கை அலைக்கழித்து சீரழித்துவரும் ஷியா-சுன்னாஹ் மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தத்தம் பக்கத்திலிருந்து இயன்றவரை வன்முறையைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளன. சவூதி மன்னர் அப்துல்லாஹ்வும், ஈரான் அதிபர் அஹ்மதிநிஜாதும் நேருக்குநேர் முதன்முதலாக சந்தித்துக் கொண்ட இம்மாநாட்டில் இரு நாடுகளும் இந்த உறுதிமொழியை மேற்கொண்டன.

இராக்கின் ஷியா பிரிவினரிடம் செல்வாக்குப் பெற்ற ஈரானும், சுன்னாஹ் பிரிவினரிடம் செல்வாக்குப் பெற்ற சவூதி அரேபியாவும் இம்முடிவை ஏற்றிருப்பது இராக்கில் நடைபெறும் இனமோதல்களுக்கு முடிவை ஏற்படுத்தும் என்றும், லெபனான், பாலஸ்தீனம் மற்றும் இராக்கின் ஷியா மக்களுக்கு இடையே பெருகிவரும் ஈரானின் செல்வாக்கைக் கருத்தில் கொண்டே சவூதி இந்த நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அதோடு சவூதி அரேபியா மத்தியகிழக்கில் US-ன் நெருங்கிய நட்பு கொண்ட நாடு என்பதும், ஈரான் மிகத்தீவிரமான US எதிர்ப்பு நிலை கொண்ட நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

US, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் சிலவும் ஈரான் அணுகுண்டு தயாரிக்கலாம் எனும் ஐயம் கொண்டிருக்கின்றன. ஆனால் இதனை ஈரான் மறுத்து வந்திருக்கிறது. சவூதி அரேபியா ஈரானை ஐநா நிபந்தனகளுக்கு உட்படுமாறு இனிவரும் காலங்களில் வேண்டுகோள் விடுக்கும் எனத் தெரிகிறது.