பேரழிவு ஆயுதங்களின் இருப்பிடம்?

வடகொரியா தன் அணுஆயுதங்களை ஒழித்துவிடவேண்டும்; தான் மேற்கொள்ளும் இவ்வகைச் சோதனைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும், ஈரான் என்னதான் அணுமின் உற்பத்திக்கு அணு உலையைப் பயன்படுத்துவதாகச் சொன்னாலும் அது அணு ஆயுத உற்பத்திக்கு அதனைப் பயன்படுத்திவிடும் சாத்தியக் கூறு இருப்பதால் அந்த முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்றும் கூறிவரும் உலக சமாதானத்தை மட்டுமே விரும்பும் US அரசு, இன்று புதிய அதிநவீன அணுஆயுத முன்மாதிரிக்கு ஒப்புதல் அளித்து அதற்கான ஆயுத உற்பத்திக்கு வழி கோலியுள்ளது.

உலக சமாதானத்தை விரும்பும் US ன் கையிருப்பில் வெறும் 6,000 அணு ஆயுதங்கள் மட்டுமே ஏவத்தயார்நிலையில் இருப்பதாகவும் இன்னும் 4,000  அணு ஆயுதங்கள் அவசரக் கையிருப்பாக இருப்பதாகத் தெரிகிறது. இப்போது கைவசம் இருக்கும் அணுஆயுதங்களில் இருக்கும் புளூட்டோனியத்தின் அரைவாழ்வுக்காலம் இன்னொரு 100 ஆண்டுகளுக்கு வரும் என்றிருக்கும் நிலையில் தற்போது புதிய அதி நவீன ஆயுதங்களின் தேவை குறித்து பலரும் கவலை தெரிவித்து இருக்கின்றனர்.

அதோடு மற்ற வலிமை மிகுந்த நாடுகளும் இந்த ஆயுதப்போட்டியில் இறங்கி தங்களது அணு ஆயுதக் கையிருப்பை அதிகப் படுத்த முனையும் வேளையில் உலகில் பேரழிவு ஆயுதங்கள் உண்மையில் இவற்றின் வசம் குவிந்து கிடக்க வாய்ப்பிருக்கும் நிலை கவலையோடு தென்படுகிறது.

தகவல்: இப்னுஹமீது

நன்றி: கன்கார்டு மானிட்டர்