பஹ்ரைனைச்சார்ந்த ருகையா அல் கஸ்ராவின் சாதனை முஸ்லிம் விளையாட்டு வீரர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிந்து விளையாட்டில் பங்கு பெறும் பெண்களுக்கு.
தலை முதல் கால் வரை மறைக்கப்பட்ட உடை அணிந்து, ஒலிம்பிக் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பிரான்ஸ் வீராங்கனையைப் பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்து ஹிஜாபினால் தன்னுடைய விளையாட்டிற்குத் தடங்கலில்லை என்பதை உலகிற்கு நிரூபித்திருக்கிறார்.
இவருக்கான ‘ஹிஜூத்'(Hijood)உடையை ஆஸ்திரேலியாவைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கான உடைகள் தயார் செய்யும் நிறுவனம் தனித்துவமாக தயார் செய்து அனுப்பியது.
நவீன(நிர்வாணகோல)ப் பெண்ணியத்தில் அன்னியர்களின் ஆபாசப்பார்வைகளிலிருந்துப் பெண்களைப் பாதுகாத்து, அவர்களுக்குச் சமூகத்தில் கண்ணியத்தையும் மரியாதையையும் அளிக்கும் பர்தா உடை முறையினை எதிர்த்துக் கூக்குரலிடும் பெண்ணியப் போராளிகள், “பர்தா என்பது முஸ்லிம் பெண்களை அடக்கி ஒடுக்குகின்றது” எனக் கூறுவதற்கு விளையாட்டுக்களில் முக்கியமாகத் தடகள விளையாட்டுகளில் முஸ்லிம் பெண்கள் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியிருந்தமையையும் ஒரு காரணமாகக் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இயன்றவரை உடலிலிருந்து ஆடைகளை அப்புறப்படுத்தி இரண்டு துண்டுகளை உடலில் சுற்றிக் கலந்து கொண்டாலே தடகளப்போட்டிகளில் வெற்றிக்கு வாய்ப்பு அதிகம் என்ற ஒரு தவறான பிம்பமும் இவர்களால் உருவாக்கப்பட்டிருந்தது.
பெண்கள் அன்னியர்களின் முன்னிலையில் உடைகளைக் குறைத்துக் கொண்டு பவனிவருவதல்ல பெண் சுதந்திரம் என்றும் பெண்கள் உடலை மூடிக் கொள்வது தான் அவர்களுக்கு அழகையும் கண்ணியத்தையும் அதிகரிக்கும் என்பதையும் பலவேளைகளில் முஸ்லிம் பெண்டிர் இச்சமூகத்திற்கு நிரூபித்திருக்கின்றனர்.
அவ்வரிசையில், உடலை மூடி ஆடை அணிவது தடகள விளையாட்டுகளுக்கும் தடையில்லை என்பதைச் சகோதரி ருகையா வென்றதன் மூலம் நிரூபித்துத் தன் நாட்டிற்கும் பெருமை தேடித் தந்திருக்கிறார்.
இதிலிருந்து, சமூகத்தில் பெண்கள் ஆடை மூடாமலிருப்பது ஆண்களின் பருந்துப் பார்வைக்கான விருந்தே அன்றி, அது அவர்களின் முன்னேற்றத்தை உயர்த்துவதற்கு அல்ல என்பதை இனிமேலாவது பெண்ணிய சமூகமும் போலி பெண்ணியவாதிகளும் புரிந்துக் கொள்ளட்டும்.
பொது இடங்களில் உடை குறைத்தலே பெண் சுதந்திரம் எனும் போலி பிம்பத்தை உடைத்தச் சகோதரிக்கு வாழ்த்துகள்!
தகவல்: சகோதரர் மாஹிர்.