குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), கடந்த 13 வருடங்களாக “ரியாளுல் ஜன்னா” – சுவனத்துப் பூஞ்சோலை – கூடாரம் அமைத்து செய்து வருவதைப் போன்றே இவ்வருடம் ஃபஹாஹீல் மட்டுமின்றி சால்மியாவிலும் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த அறிவிப்பினைக் கண்ணுறும் குவைத் அல்லாத பிற நாடுகளில் உள்ள வாசகர்கள், இதனை குவைத்தில் வசிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் பயன்பெறுவர். (Link: http://www.satyamargam.com/news/world-news/2571-kuwait-igc-ramadan-2015-programs.html )
ஃபின்தாஸ், மஹ்பூலா, அபூஹலிஃபா, மங்காஃப் பகுதிகளிலிருந்து , ஃபஹாஹீல் நிகழ்ச்சி நடைபெறும் கூடாரத்திற்கு வர வாகன வசதி தேவைப்படுவோர் குவைத்தில் 97928553 அல்லது அழைப்பிதழில் இடம் பெற்றுள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
குழந்தைகளின் இடையூறு இன்றி வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் வண்ணம், குழந்தைகளுக்கென விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய தனிக் கூடாரம் (ஃபஹாஹீலில் மட்டும்) அமைக்கப்பட்டுள்ளது.
ஃபஹாஹீல் கூடாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 4, 2015 சனிக்கிழமையன்று குவைத் சிட்டியில் அமைந்துள்ள மஸ்ஜித் கபீர் கூடாரத்தில் இக்ரஃ இஸ்லாமிய சங்கம் (IIC) மற்றும் இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC) இணைந்து மிகப்பெரிய இஃப்தார் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்களுக்கு IGC யின் இணைய தளத்தைப் பார்வையிடவும். இணைய தள முகவரி: http://igckuwait.net