நிகழும் 2013 ஆம் ஆண்டில் ஹஜ் பயணம் செல்ல விரும்புபவர்கள், மார்ச்-20 க்குள் (20-03-2013) விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு முன்பு அறிவித்திருந்தது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் தேதி தற்போது 30-03-2013 ஆக நீடிக்கப் பட்டுள்ளது என்பதை வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
இதற்கான சுட்டி (http://hajcommittee.com/ext_date_haj2013.pdf)
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள முந்தைய அறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டிருந்தது:
இந்த ஆண்டு 2013 ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள் விண்ணப்ப படிவங்களை எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது இதற்கான விண்ணப்பத்தை www.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப் படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை, மனுதாரர்கள் வரும் மார்ச் 20ம் (20.03.2013) தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு முன் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கால தாமதம் ஆகி விட்டது என்ற காரணம் கொண்டு இதுவரையில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் இந்த நல் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். – சத்தியமார்க்கம்.காம்
எவர்கள் அங்கு யாத்திரை செய்யச் சக்தியுடையவர்களாக உள்ளார்களோ, அப்படிப்பட்ட மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று அவ்) வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்….. (அல் குர் ஆன் 3:97)
கடமையான ஹஜ்ஜை விரைவாக நிறைவேற்றி விடுங்கள்! ஏனெனில், உங்களில் ஒருவருக்கு என்ன தடை நேரும் என்பதை அவர் அறியமாட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அஹ்மத்)