ஏக இறைவனின் பேரருளால் வளைகுடா நாடுகளில் இன்று 04-10-2014 வெள்ளிக்கிழமை தியாகத் திருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரிலுள்ள ஈத்கா மைதானங்களில் காலை 5.42 மணிக்கு சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் கத்தர் நாட்டு குடிமக்களுடன், கத்தரில் பணிபுரியும் பல்வேறு நாட்டவரும் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
ஈத்கா மைதானங்களிலும் பள்ளிவாசல்களிலும் நிறைவாக சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. உலக மக்களின் அமைதிக்காகவும் சிறப்புப் பிரார்த்தனைகள் நிகழ்த்தப்பட்டன. தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் தியாகத் திருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்திய கத்தர் இஸ்லாமியப் பேரவை (IQIC) நடத்திய பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி பின் மஹ்மூத் பகுதியிலுள்ள ஈத்கா ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
பெருநாள் குத்பா உரையின் தமிழாக்கத்தை சகோதரர் மௌலவி ஷரஃபுத்தீன் உமரீ வழங்கினார். அதனை ஆடியோ வடிவில் கீழே கேட்கலாம்.
மேலும் அதே நாளில், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) நடத்திய ஈதுல் அழ்ஹா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியானது, ஃபனார் உள்ளரங்கத்தில் நடைபெற்றது.
பெருநாள் குத்பா உரையின் தமிழாக்கத்தை சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் வழங்கினார். அதனை ஆடியோ வடிவில் கீழே கேட்கலாம்.