“வளைகுடாவாசி ஒருவர், இந்த வருடத்தோடு ‘பினிஃஷ்’ செய்து கொண்டு வந்துவிடுவதாக கூறியது அவர்மேல் பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஏனெனில் வருடங்கள் பலவற்றைக் கடந்தபிறகு ஒரு வழியாக இந்தியா செல்ல எத்தனித்து கடந்த ஏழு வருடங்களாக அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறார்” – சகோதரர் அபூஸாலிஹா எழுதிய ‘கல்ஃப் ரிட்டர்ன்‘ வாழ்வியல் தொடர், பகுதி 1 |
“பல நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாலும் நம்முடைய நினைவோ ஊரில் உள்ள கட்டிய மனைவி, நோய்வாய்ப்பட்ட தாய்-தந்தை, திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் அக்கா-தங்கைகள் ஆகியோருக்காக நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நினைப்புடன்தான் இருப்போம். நம்முடைய உடல் இங்கு இருக்கும்; ஆனால் உள்ளமோ விமானப் பயணச்சீட்டு இல்லாமலே அடிக்கடி தாயகம் போய் வரும்” – சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் சகோதரர் அபூஆப்ரீன் அவர்களின் வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?
“திருமணம் முடித்த எத்தனையோ வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் வயிற்றைக் கழுவ வளைகுடாவில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்களில் எத்தனை பேர் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் இல்லற வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்கள்? திருமணம் முடித்த ஒரேநாளில், ஒரேவாரத்தில், ஒரேமாதத்தில் என எத்தனை சகோதர-சகோதரிகள் திருமண பந்தத்திற்கு முன்னாலேயே வளைகுடாவுக்கு வாழ்க்கைப் பட்டதால் பிரிய மனமில்லாமல் வாழ்க்கைத் துணையைப் பிரிந்து செல்கிறார்கள்” – சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் சுவனப்பாதை இதழாசிரியர், சகோதரர் ஹாஜா முஹைதீன் அவர்களின் வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?
“மத்தியக் கிழக்கு நாடுகளின் நிறுவனங்களில் மிகுந்து போனவர்களாகக் கருதப்பட்டுப் பணி நீக்கம் செய்து தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்படும் பல்லாயிரக்கணக்கிலான இந்தியத் தொழிலாளிகளுக்குக் கடனுதவி வழங்கி அவர்கள் தமது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள வழிவகுக்கப்படும்” – சகோதரர் இப்னு ஹனீஃப் தமிழாக்கித் தந்த, ‘வளைகுடாத் தொழிலாளர்களுக்கு வழியமைக்கும் கேரளம்‘
புலம் பெயர்ந்து வாழும் நம் சமுதாயத்தவரின் எதிர்காலப் பொருளாதார அச்சம் போக்கி, வேலை/தொழில்களுக்கான வழிவகைகள் வகுத்துத் தருவதற்காக ஒரு மாநாடும் பயிலரங்கமும் குவைத்தில் செயல்படும் ‘தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை’ மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டுகிறோம்.
தகவல் : இம்ரான் கரீம், துபை
மக்கள் தொடர்புச் செயலாளர்,
அமீரக சமூகநீதி அறக்கட்டளை
+971559739408
+971504784350
imran.mik67@yahoo.com
imran2mik@gmail.com