நியூயார்க்: அமெரிக்காவில் இயங்கி வரும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பு, நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.
அதில், ‘இந்தியாவில் இயங்கி வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பாசிச கொள்கைகளை பரப்பி வருவதுடன், இந்தியாவை இந்து நாடாக மாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. தாய் மதத்துக்கு திரும்புதல் என்ற பெயரில் இந்துக்களையும், முஸ்லிம்களையும் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்கிறது’ என்று கூறப்பட்டு உள்ளது.
{youtube}nEJKaJ7g7w0{/youtube}
மேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதாக அந்த மனுவில் கூறியிருக்கும் சிக்கிய அமைப்பு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது. மேலும் அதன் துணை அமைப்புகளையும் தீவிரவாத இயக்கங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக 2 மாதங்களுக்குள் பதிலளிக்குமாறு அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரிக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
நன்றி: தினத்தந்தி (23-01-2015)
தொடர்புடைய செய்தி:
உலகின் மிக பெரிய பயங்கரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமெரிக்க ஆய்வு நிறுவனம் அறிவிப்பு
http://www.satyamargam.com/news/world-news/2505-rss-in-one-of-the-biggest-terrorist-organization-usa.html