கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் விக்கிப்பீடியாவின் தமிழ் பதிப்பு, தொடர் கட்டுரைப் போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது. இப்போட்டி ஜுன் 2013 முதல் மே 2014 வரையான 12 மாதங்கள் நடைபெறுகிறது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பணம், புத்தகம் எனப் பல பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
விரிவாக்க வேண்டிய கட்டுரைகளில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான சில பக்கங்களை வாசகர்கள் பார்வைக்காக இங்கே வழங்குகிறோம். ஆர்வமுடைய தலைப்புகள் மீது க்ளிக் செய்தால் உரிய பக்கத்தினை அடையலாம்.
- இப்னு சீனா – Avicenna
- Ibn_Khaldun – இப்னு கல்தூன்
- Aurangzeb – அவுரங்கசீப்
- Yasser Arafat – யாசர் அராபத்
- Ali – அலீ
- Muhammad – முகமது
- Mosque – மசூதி
- Mecca – மெக்கா
- Babur – பாபர்
- Genghis Khan – செங்கிஸ் கான்
- Hammurabi – ஹமுராபி
- Humayun – நசிருதீன் உமாயூன்
- Ibn Saud – அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ்
- Mahatir Bin Muhammad – மகாதிர் பின் முகமது
- Queen of Assyria – சாம்முர் அமாத்
- Osama bin Laden – ஒசாமா பின் லாடன்
- Honey – தேன்
- Cairo – கெய்ரோ
- Istanbul – இஸ்தான்புல்
- Mughal Empire– முகலாயப் பேரரசு
- Arabic – அரபு மொழி
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர், கூடுதல் விபரங்களைக் கீழ்க்கண்ட சுட்டிகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி
நேரமும் ஆர்வமும் உள்ள சகோதர சகோதரிகள், இப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
– அபூ ஸாலிஹா