உசாமாவைப் பிடிக்க புஷ் புதிய வியூகம்!

{mosimage}வாஷிங்டன்: உசாமா பின்லாடனை உயிருடனோ பிணமாகவோ பிடிப்பது வரை ஆப்கன் மீதான ஆக்கிரமிப்பு முடிவுபெறாது என பின் லாடனுக்காக ஆரம்பித்த ஆப்கன் யுத்தத்தில் பின்லாடனை பிடிப்பது பற்றி புது வியூகம் அமைக்க முஷரப்புடன் பேச்சு நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் புஷ் கூறினார்.

 

பின் லாடனை பிடிப்பதற்காக அமெரிக்கா இதுவரை எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காததற்கு உசாமா பின்லேடன், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலைப்பகுதிகளில் பதுங்கி இருப்பது தான் காரணம் என அமெரிக்கா கூறி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் முஷரப் , அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். வரும் 22- ந் தேதி அவர் அமெரிக்க அதிபர் புஷ்சை சந்திக்கிறார். வெள்ளை மாளிகையில் இச்சந்திப்பு நடக்க இருக்கிறது.

 

அச்சந்திப்பின் போது பின்லாடனை பிடிக்க புது வியூகங்கள் வகுப்பது பற்றி முஷரஃபுடன் புஷ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இத்தகவலை புஷ் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

"முஷரப்பை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். அவர் அல்-கொய்தா இயக்கத்தை விரும்ப மாட்டார். ஏனென்றால் அவரைக் கொலை செய்ய அல்-கொய்தா முயன்று வருகிறது. பின்லேடனைப் பிடிப்பது பற்றி முஷரப்புடன் பேச்சு நடத்துவேன். பின்லேடனைச் சட்டத்தின் முன்பு நிறுத்தும் வரை எங்கள் தேடுதல் வேட்டை தொடரும். அதை நாங்கள் தொடந்து  செய்து வருகிறோம். ஏற்கனவே, இரட்டை கோபுரத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டியவர்களையும், அதில் ஈடுபட்டவர்களையும் சட்டத்தின் முன்பு நிறுத்தியுள்ளோம். எங்கள் நாட்டைப் பாதுகாக்க இப்படித்தான் நாங்கள் செயல்பட வேண்டும்" என்று புஷ் கூறினார்.

"பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதிகளை வேட்டையாட, அமெரிக்கா ஏன் படைகளை அனுப்ப மறுக்கிறது?'' என்று புஷ்சிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "ஏற்கனவே, பாகிஸ்தானில் பலரை சட்டத்தின் முன்பு நிறுத்தி சாதனை படைத்துள்ளோம். மேலும், பாகிஸ்தானின் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம். எனவே, அந்த நாடு அழைப்பு விடுக்காத பட்சத்தில், நாங்கள் படைகளை அங்கு அனுப்ப மாட்டோம்" என்று அவர் கூறினார்.