மனுஸ்மிருதியை இந்துக்கள் படிச்சுட்டா இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இருக்காது: திருமாவளவன்!

ன்றைக்கு நாம் சந்திக்கின்ற அனைத்து சிக்கல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் சாதிய பாகுபாடுகளுக்கும் பாலின பாகுபாடுகளுக்கும் அடிப்படை கருத்து மனுஸ்மிருதி தான். மனுஸ்மிருதி இன்று புத்தகமாக மக்களிடையே அறிமுகப் படுத்துவதற்கான காரணம் மனுஸ்மிருதி அரசியல் கொள்கையாக கொண்டிருக்கின்ற ஆர்எஸ்எஸ் இயக்கம், மக்கள் இயக்கம் போல் காண்பிக்க முயற்சித்து வருகிறது.

[dflip id=”13128″ ][/dflip]

ஆர் எஸ் எஸ் இயக்கம் பிற கட்சிகளைப் போல சராசரியான மக்கள் இயக்கம் இல்லை; ஜனநாயக இயக்கம் இல்லை; கலாச்சார இயக்கமும் இல்லை.. மதவாத அரசியலை வெறுப்பு அரசியலை, பாகுபாடு அரசியலை கொண்டு இருக்கிறது. அது ஒரு முறைக்கு இருமுறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம். காந்தியடிகளை கொன்ற இயக்கம், காமராஜரை கொல்ல முயன்ற இயக்கம், பாபர் மசூதியை இடித்த இயக்கம், குஜராத் படுகொலையை நடத்திய இயக்கம், தொடர்ந்து லவ் ஜிகாத் என்றும் கர்வாசி என்றும் holy Cow பசு புனிதம் என்றும் பல்வேறு பெயர்களில் முஸ்லிம் வெறுப்பையும், கிறிஸ்தவ வெறுப்பையும், இந்த மண்ணில் விதைக்கிற இயக்கம்.

இந்தியர்களை இந்துக்கள் என்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றும் பிளவுபடுத்துகிற இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இந்துக்களை மேல் சாதி கீழ் சாதி என்று பிளவு படுத்தி அவர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற இயக்கம். சமூக ஒற்றுமைக்கு எதிரான இயக்கம். ஆகையால் தான் இந்த இயக்கம் தமிழ்நாட்டில் வேறு ஒரு ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். பாரதிய ஜனதா கட்சி என்றாலும் அது ஒரு அரசியல் இயக்கமாக இருக்கிற காரணத்தினால் வெளிப்படையாக இந்த பாகுபாடுகளை வெறுப்பு அரசியலை பேசத் தயங்குகிற இயக்கம். ஆகவே பாஜக ஒரு அரசியல் இயக்கம் என்கிற பெயரில் பேரணிகளை நடத்துவதில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை.. ஆர் எஸ் எஸ் அரசியல் பிரிவாக இருக்கிற பாஜக இருக்கும்போது பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ஆர் எஸ் எஸ் சார்பாக பேரணி நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?

ஆர் எஸ் எஸ், பாஜக வேறு வேறு அல்ல. இந்திய மண்ணில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கடந்த முறை இவர்கள் பேரணி நடத்த முயற்சித்த போது 80க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று கூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ஆர்எஸ்எஸ் பின்வாங்கிக் கொண்டது. மனுஸ்மிருதி முலம் இந்து சமூகத்தினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையாக மேற்கொண்டு இருக்கிறோம். இது ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான நடவடிக்கையே தவிர இந்து சமூகத்தினருக்கு எதிரான நடவடிக்கை அல்ல. இந்துக்களின் நலன்களை பாதுகாப்பதற்காகத்தான் இந்துக்களின் பாதுகாப்பை முன்னுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு வெகுமக்கள் மத்தியில் இன்றைக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

மனுஸ்மிருதி படிக்கத் தொடங்கினால் விழிப்புணர்வு பெற்றால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஆர்எஸ்எஸுக்கு இடம் இருக்காது. காவல்துறை தான் திருநெல்வேலியில் அனுமதி இல்லை; இதை வழங்கக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள். வேறு யாரும் தடுக்கவில்லை. அதை மீறி தோழர்கள் ஆங்காங்கே அமைதியான முறையில் வழங்குகிறோம். இது ஆர்ப்பாட்டம் இல்லை; பேரணி இல்லை; நாங்கள் துண்டறிக்கை விநியோகம் செய்வது போல இதை விநியோகம் செய்கிறோம். எங்களை நீங்கள் தடுக்க கூடாது என்று சொல்லி ஒரு சிலருக்கு அந்த புத்தகங்களை வழங்கி இருக்கிறார்கள். அதையும் தாண்டி காவல்துறை அவர்களை சில மணி நேரம் பிடித்து மண்டபத்தில் அடைத்து வைத்திருந்து விடுவித்து இருக்கிறார்கள். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

இன்று நவம்பர் 6, 2022 அன்று, திரு. தொல். திருமாவளவன் வெளியிட்ட மனு ஸ்மிருதி நூலிலிருந்து சில பகுதிகளை வாசிக்க க்ளிக் செய்க:

http://www.satyamargam.com/wp-content/uploads/2022/11/Manu-Smiruthi.pdf