பாகிஸ்தான் ISI க்காக இந்திய ராணுவ ரகசியங்களை விற்ற குஜராத் தீபக் கிஷோர் கைது!

ன்றைய நாளிதழ்களில் , எட்டாம் பக்கம் வெளியாகியிருந்த அந்த செய்தியின் தலைப்பு சற்று ஆச்சரியத்தைத் தந்தது.

Surat man held for ‘spying’ for ISI

பாகிஸ்தான் சார்பில், நம் இந்திய நாட்டு ராணுவ ரகசியங்களை நீண்ட காலங்களாக உளவு பார்த்து வந்த ஒரு நபர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் கைது செய்யப்பட்டவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது செய்தியில் இல்லை.

தேசத்துரோகியின் தலையில் துணி போர்த்தி காவல்துறை இழுத்துச் செல்லும் திகில் படம் இல்லை. திரும்பத் திரும்ப காட்டி மிரட்டும் தொலைக்காட்சி செய்திகள் எதுவுமே இல்லை. விலங்கு மாட்டிய ஒரு இணைய படம் மட்டுமே அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகி இருக்கிறது.

“அடடா… மத உணர்வுகளை உசுப்பி, மக்களிடையே வெறுப்பைப் பரப்பி ஊடகங்கள் தவறு செய்கின்றன என்று நாம்தான் தப்பாய் எடை போட்டு விட்டோம் போலிருக்கு!”

தேசத்துரோக செயல் என்றாலும், தேசத்துரோகியின் மதத்தைக் குறிப்பிடாமல், “சூரத் மேன்” என்று நாகரீகமாக குறிப்பிட்ட ஊடகங்களை பாராட்ட வார்த்தைகளின்றி தடுமாறி விட்டு செய்திக்குள் சென்றேன். இந்திய ஊடகங்களின் நேர்மை பல் இளித்தது.

அடடே! வசமாக சிக்கிய தேசத்துரோகியின் பெயர் தீபக் கிஷோர்.

33 வயதான இவர், சாய் பேஷன்ஸ் என்ற பெயரில் குஜராத் சூரத்தில் உள்ள புவனேஸ்வரி நகரில் கடை நடத்தி வந்து, Pakistani intelligence agency (ISI) யின் உளவாளியாகப் பணியாற்றி வந்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டுடன் தொடர்பு வைத்து, பாகிஸ்தான் ஏஜண்ட்டாக பணியாற்றி, பல காலமாக நம் இந்திய நாட்டு ராணுவ ரகசியங்களைப் பரிமாறி வந்தது காவல்துறை விசாரணையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

என்னதான் தேசத்துரோகம் செய்தாலும், நாட்டில் குழப்பம் விளைவிக்காத தீபக் கிஷோருக்கு நன்றி… நன்றி!

இதே செயலை முஸ்லிம் பெயர் வைத்த ஒருவர் மட்டும் செய்திருந்தால்… நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

லஷ்கர் இ தொய்பா, ஐ எஸ் ஐ, இன்னும் இன்ன பிற வாயில் நுழையாத இயக்கப் பேர்களை எல்லாம் உருவாக்கி இந்திய மீடியாக்கள் இந்தியர்களை தூங்க விடாமல் மிரள வைத்திருப்பார்கள்.

இவருக்கும் அவருக்கும் தொடர்பா? இந்த நகரத்தைத் தகர்க்க சதியா? இணைப்பில் காத்திருங்கள் போன்ற ஃப்ளாஷ் நீயுஸ்களுடன் 24X7 ஊடகங்கள் கத்தி காது கிழிந்திருக்கும்.  தெருவில் நடமாடும் ஒவ்வொரு முஸ்லிமின் தாடியும் தொப்பியும் மிரட்சியுடன் பிறரால் பார்க்கப்படும். அவை எதுவும் இன்றி நாடு அமைதியாக இருக்கிறது.

எனவே, இந்திய மக்களின் திகிலை நீக்கிய தேசவிரோதி தீபக் கிஷோர் அவர்களுக்கு நன்றி மீண்டும்!

-அபூஸாலிஹா

பின் குறிப்பு: தேசத்துரோகி முஸ்லிம் அல்லாதவர் என்பதால், ஊடகங்களில் வெளியான செய்தி ஆதாரத்தை அழிக்க வேண்டி, இந்த செய்திகள் விரைவில் நீக்கப்படும்.

https://indianexpress.com/article/india/surat-man-held-spying-for-isi-8322896/

https://timesofindia.indiatimes.com/city/surat/surat-man-held-for-spying-for-pakistans-isi/articleshow/96201711.cms

https://www.indiatoday.in/amp/india/story/gujarat-crime-branch-arrests-man-spying-for-pakistans-isi-in-surat-2308770-2022-12-13

https://www.ndtv.com/india-news/man-from-gujarat-arrested-for-working-for-paks-spy-agency-isi-report-3603485