பாஜகவில் பதவிக்காக தனக்குத்தானே குண்டை வீசிய விஸ்வநாதன் கைது!

Share this:

கோவை (26 மார்ச், 2023):  மேட்டுப்பாளையம் நகரில் பாஜக கட்சியில் பெரிய பதவி வேண்டி, தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு கொலை முயற்சி என நாடகமாடிய பாஜக நிர்வாகியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (32). இவர் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சூபர்வைசராக பணிபுரியாற்றி வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பாஜக-வில் இணைந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு மேட்டுப்பாளையம் நகர காவல்நிலையத்தில் பாஜக நகரத் தலைவர் உமா சங்கர் மற்றும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ் மீது விஸ்வநாதன் புகார் அளித்துள்ளார்.

விஸ்வநாதன் அளித்த புகாரில், ‘நகர நிர்வாகி உமா சங்கரும் மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ் என இருவரும் தன் மீது பெட்ரோல் குண்டை வீசினார்கள். இதனால் என் சட்டை முழுவதும் எரிந்தது. என் மீது தாக்குதல் முயற்சி நடத்தியுள்ளனர்’ என்ற புகாரை காவல்நிலையத்தில் கொடுத்திருந்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி தலைமையில் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் விஸ்வநாதன் தன் சட்டையில் தனக்குத்தானே நெருப்பு வைத்துக்கொண்டு காவல்நிலையத்தில் பொய்ப் புகார் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது. பாஜக மேலிடத்தில் கவன ஈர்ப்பு ஏற்பட்டு உயர் பதவி பெற இவ்வாறு செய்ததாக விசாரணையில் விஸ்வநாதன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

Courtesy: Thanthi TV News: https://www.youtube.com/watch?v=cByFHK6-S5g

தொடர்ந்து விஸ்வநாதனை கைது செய்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர், அவர் மீது வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் கைதாகியுள்ள பாஜக பிரமுகரை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இச்செய்தி வெளியான பிற ஊடங்கள்:

https://www.thanthitv.com/latest-news/bjp-posting-scam-kovai-176251

https://tamil.indianexpress.com/tamilnadu/fake-complaint-bjp-member-arrested-in-coimbatore-620572/

https://tamil.asianetnews.com/crime/drama-about-petrol-bomb-bjp-member-arrest-in-coimbatore-rs67iw

https://www.nakkheeran.in/24-by-7-news/politics/complaint-filed-by-bjp-member-against-administrators-truth-out

https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-police-arrested-a-bjp-member-who-falsely-reported-that-he-had-thrown-a-petrol-bomb-108649

தமிழ்நாட்டில் அமைதியாக வாழ்ந்து வரும் சமூகங்களிடையே மதமோதல்களை ஏற்படுத்தும் வகையில் குண்டு வைத்துவிட்டு பழியை பிறர் மீது சுமத்துவது பாஜகவினரின் தொடர் வழக்கம்.

இத்தகைய மதவெறி தூண்டுவதன் மூலம், பாஜக மேலிடத்தில் கவனிப்பும் ஆதரவும் அதனால் பெரும் பதவி ஆதாயமும் கிடைக்கும் என்பதால் இவ்வாறு செய்கிறோம் என காவல்துறையின் விசாரணையில் இவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.


கலவரம் செய்துவிட்டு பிற மதத்தினர் மீது பழி சுமத்தும் பாஜகவினரின் பட்டியலை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் #தனக்குத்தானே என்ற TAG மூலம் தொகுப்பாக வாசிக்கலாம். (லிங்க்)


 

 


Share this: