தொடர்ந்து தோல்வியுறும் இராம கோபாலனின் மத வியாபாரம்!

Share this:

ங்கரன்கோவில் இந்து முன்னணி பிரமுகர் கொலை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது பரபரப்பு தகவல்கள்!

சங்கரன்கோவில் இந்து முன்னணி நகர செயலாளர் கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை கழுத்தை கொன்றுவிட்டு, நாடகமாடியதாக அவருடைய மனைவியை போலீசார் நேற்று இரவில் கைது செய்தனர்.

மனைவி கைது

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி செயலாளர் ஜீவா என்ற ஜீவராஜ் (வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டின் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடினார்கள். இந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக, கொலை செய்யப்பட்ட ஜீவாவின் மனைவி அய்யம்மாளை (31) நேற்று இரவில் போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு தகவல்கள்

அவரிடம் நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

http://mmimages.maalaimalar.com/Articles/2014/Jul/b98922c6-99a5-4814-bf65-39236499f423_S_secvpf.gifஇந்து முன்னணி பிரமுகர் ஜீவாவும், அவருடைய மனைவி அய்யம்மாளும் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா தேவி என்பவரை, ஜீவா 2–வது திருமணம் செய்துகொண்டார். அதன் பின்புதான் ஜீவாவுக்கும், அய்யம்மாளுக்கும் இடையே வாழ்க்கையில் புயல் வீசியது. கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இருந்தாலும் அய்யம்மாள், ஷர்மிளாதேவி மற்றும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் ஜீவா வசித்து வந்தார்.

சமீப காலமாக 2–வது மனைவி ஷர்மிளாதேவியுடன் சேர்ந்து அய்யம்மாளை ஜீவா துன்புறுத்தி வந்தாராம். இதனால் உள்ளூரில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டுக்கு அய்யம்மாள் சென்றுவிட்டார். கணவர் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

கழுத்து அறுத்துக் கொலை

நேற்று முன்தினம் இரவில் வீட்டுக்கு வெளியே ஜீவா படுத்து இருந்தார். அவருடைய 2–வது மனைவி ஷர்மிளாதேவி வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகளும் தூங்கிவிட்டனர்.

நள்ளிரவில் அங்கு வந்த அய்யம்மாள், கணவர் படுத்து இருந்த படுக்கையைச் சுற்றி மிளகாய் பொடியை தூவியதுடன், ஜீவாவின் முகத்திலும் மிளகாய் பொடியை வீசியுள்ளார். பின்னர் அரிவாள்மனையால் கணவரின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார் என்று தெரிய வருகிறது. இதற்கிடையே சற்று நேரத்தில் ரத்தவெள்ளத்தில் ஜீவா பிணமானார்.

நாடகமாடினார்

அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று காலையில் அந்த கிராம மக்களுக்கு தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஒன்றுமே தெரியாதது போல் கணவரின் வீட்டுக்கு வந்த அய்யம்மாள், கணவரின் உடலை பார்த்து கதறி அழுது நாடகமாடினார்.

போலீசார் விசாரணைக்கு பின்பு அய்யம்மாள் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில், கணவரை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்தது.

2–வது மனைவியுடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதால் கணவரை கொன்றதாக அய்யம்மாள் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

– தினத்தந்தி (06-07-2014)


காவல் துறையினரின் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் இவ்வாறு இருக்க, படுகொலை நடந்தவுடன் இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் ஊடகங்களுக்கு தெரிவித்த கண்டனத்தை பார்ப்போம்.

சங்கரன்கோவில் நகர இந்து முன்னணிச் செயலாளர் ஜீவராஜின் படுகொலைக்கு அந்த அமைப்பின் நிறுவனர் இராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி செயலாளர் ஜீவராஜ் வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டின் முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

சமுதாய சேவையில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றிய ஜீவராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு வேலை செய்கிறதா? என்ற சந்தேகத்தை இந்தக் கொலை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட கொடூர குற்றச் செயல்கள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்குச் செல்கிறதா? என்பதும் தெரியவில்லை.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த படுகொலைகளில் காவல்துறையின் நடவடிக்கை கவலை அளிக்கும் வகையிலேயே உள்ளது.

இதற்கு காவல் துறையும், அரசும் பதில் சொல்லாமல் இருக்கலாம், ஆனால், மக்கள் தங்களது எதிர்ப்பை உரிய நேரத்தில் பதிவு செய்வார்கள். இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பது தெரிந்தும் காவல்துறை அலட்சியமாக நடந்து கொள்கிறது.

காவல்துறை மீதும், அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டால் அது பேராபத்தாகிவிடும். அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது என்பதற்காக குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்பவர்களிடம்கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையை ஏற்படுத்த முனைகிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட படுகொலைகள் நடந்தும்கூட நமது அரசியல்வாதிகள் வாய் மூடி மெளனியாக இருக்கிறார்கள்.

இனியும் இது தொடர்ந்தால் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே, தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

சந்தேகத்திற்கு இடமானவர்களை கைது செய்யவும், சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் என இராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.

– தினமணி (06-07-2014)

இத்தகையவற்றைத் தொடர்ச்சியாக கண்டு வரும் தமிழர்கள் மனதில் ஒட்டு மொத்தமாக எழும் கேள்வி ஒன்றே ஒன்று தான். எங்கு எது நடந்தாலும் அதற்கு காவி முலாம் பூசி மத வியாபாரம் செய்து பிழைக்கும் இராம. கோபாலன் மீது இந்திய பீனல் கோடு செக்’ஷன் 153A இன் படி, இன்னும் வழக்குகள் பாயாமல் இருப்பது ஏன்?

தொடர்புடைய செய்தி:

இந்து முன்னணி பிரமுகர் கொலையில் ஊடகங்கள் சொன்ன கதைகள்!

http://www.inneram.com/collections/others-best/1044-stories-told-by-the-media.html

(மூன்றாம் தர, மலிவு உத்தியைப் பின்பற்றும் தமிழ்முரசு போன்ற தளங்கள், இவ்வாறு கற்பனைக் கதைகளைப் புனைந்து தமிழர்களிடையே மதவெறியூட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே பொறுமை காக்கும் மக்களின் வேண்டுகோளாக உள்ளது.)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.