மலைகளின் சரிவான பகுதிகளில் உள்ள வானுயர்ந்த பெரிய பெரிய மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, அங்குள்ள மலைப்பாறைகளையும் குடைந்து சமப்படுத்த சாலைகள் அமைத்து, அந்தச் சாலைகளை ஒட்டி மலைகளின் சரிவான பகுதியில் உள்ள மரங்களை மேலும் வெட்டிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம் பிளாட் போட்டு வீடுகள், ஹோட்டல்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்ற கட்டடங்களைக் கட்டிவிடுகின்றார்கள். பின்னர், மழைக்காலங்களில் காட்டாறு போல ஓடும் மழை வெள்ள நீரால் மண் சரிந்து விடாமல் தன் வேர்கள் மூலம் மண்ணை இறுக்கிப்பிடித்த நிலத்தை இருத்தி வைக்க உயர்ந்த மரங்கள் இல்லாத காரணத்தால்தான் அங்கு மண் அரிப்பு நடந்து பெரும் நிலச்சரிவு ஏற்படுகின்றது.
இதை அரசுகள் உணர்ந்து, சமவெளியில் அன்றி, சரிவான மலைகளில் குடியிருப்புகள் அதிகரிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும். மலைகளில் மிக அதிகமாக இனிமேல் மரங்கள் நட வேண்டும். மலைக்காட்டாற்றுக் கரைகளில் நெருக்கமாக மரங்கள் நடவேண்டும். மழை வெள்ள நீருக்கு உரிய உடனடி வடிகாலை அதிகமாக்கி, அதில் எவ்வித அடைப்பும் இன்றித் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.