“இந்திய முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிரையும் கொடுப்பார்கள்! – மோடி பெருமிதம்

Share this:

ந்திய முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிரையும் கொடுப்பார்கள்!” என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

அல்-காய்தா உள்ளிட்ட எந்த தீவிரவாத இயக்கத்துக்கும் இந்திய முஸ்லிம்கள் துணைபோக மாட்டார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் மோடி மேலும் கூறியுள்ளது:

“தீவிரவாதிகள் அனைவருமே இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு அநீதியைத்தான் இழைத்து வருகின்றனர். இந்திய முஸ்லிம்கள் நாம் ஆட்டுவிக்கும்படி ஆடுவார்கள் என்று தீவிரவாத அமைப்பினர் நினைத்தால், அவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள். இந்திய முஸ்லிம்கள் இந்தியர்களாக வாழ்வார்கள். அவர்கள் இந்தியாவுக்காக உயிரையும் கொடுப்பார்கள். நாட்டுக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள்!” என்றார்.

இந்திய துணைக் கண்டத்தில் அல்-காய்தாவின் கிளை தொடங்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி சமீபத்தில் அறிவித்தார். ஏ.கியூ.ஐ.எஸ். என்று கூறப்படும் இந்திய கிளையை, பாகிஸ்தான் தலிபான் இயக்கத் தலைவர் ஆசிம் உமர் வழிநடத்துவார் என்றும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

{youtube}YUhsUWVweyk{/youtube}

55 நிமிடங்கள் ஓடும் இந்த மிரட்டல் வீடியோ பதிவை அல்-காய்தாவின் ஊடகப் பிரிவான அஸ்-சஹாப் மீடியா வெளியிட்டிருந்தது.

பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த வீடியோ குறித்த கேள்விக்கு மோடி மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘இந்தியாவில் 17 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இதில், அல்-காய்தா இயக்கத்தில் இணைந்தவர்கள் மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை எனும் நிலையே இருக்கிறது. இத்தனைக்கும் அண்டை நாடான பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் தான் அல்-காய்தா ஆதிக்கம் அதிகம் உள்ளது’ என்றார்.

இந்திய முஸ்லிம்கள் அல்-காய்தா தாக்கத்துக்கு வசப்படாததற்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி, ‘உளவியல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ இதனை பகுப்பாய்வு செய்ய முடியவில்லை. ஆனால், நம் முன் இருக்கும் சவால் மனிதத்தன்மை பேணப்பட வேண்டுமா? வேண்டாமா என்பதுதான். மனிதத்தன்மையை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். தீவிரவாதம் என்பது ஒரு நாட்டுக்கோ அல்லது குறிப்பிட்ட ஓர் இனத்துக்கோ எதிரானது அல்ல. தீவிரவாதம் என்பது மனித குலத்துக்கு எதிரானது’ என்றார்.

அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மோடி, ‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரு நாடுகளும் ஜனநாயகம் உள்பட பல விஷயங்களில் ஒரே மாதிரியான தன்மை கொண்டவை. கடந்த நூற்றாண்டில் இரு நாடுகளிடையே உறவில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கலாம். ஆனால் 21-ம் நூற்றாண் டின் தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சவால் காத் திருக்கிறது. நமது உறவு ஆழமானது. இந்த உறவு வரும் காலத்தில் மேலும் மேம்படும்’ என்று மோடி பதிலளித்தார்.

நன்றி: த ஹிண்டு தமிழ் பதிப்பு (19-09-2014)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.