அநீதிக்குப் பரிகாரம்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு(பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி(ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ(பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தர வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால்(மன்னிப்புப் பெறட்டும்).

(ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவருடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு(அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின்(அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள்(அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்”.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: புகாரீ.