குற்றங்களைத் துருவுதல் (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள். இழிவுபடுத்தாதீர்கள். அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.'' (முஸ்னத் அஹ்மத்)