பணம் படுத்தும் பாடு!

Share this:

ஒரு மனிதன் தன் வாழ்க்கைத்தரத்தை பெருக்குவதற்காக என்னென்னவோ குறுக்கு வழிகளையெல்லாம் கையாளுகின்றான். தான் மட்டுமே இந்த உலகில் வாழவேண்டுமென்ற அற்ப ஆசைதான் அதற்கு காரணம்.

பிற மனிதரும் தம் போன்ற சக மனிதர்தானே, அவனுக்கும் நமக்கு இருப்பது போலவே குழந்தைகள் உள்ளனவேசக மனிதர்தானே, அவனுக்கும் நமக்கு இருப்பது போலவே குழந்தைகள் உள்ளனவே…நம் குழந்தைக்கு, மனைவிக்கு, பெற்றோருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் நம் மனது எப்படியெல்லாம் பதைக்கின்றது, துடிக்கின்றது, நம் மனம் எவ்வளவு வேதனை அடைகின்றது என்ற எண்ணம் தன் மனதில் கொஞ்சமேனும் இருந்திருந்தால் அதைப்பற்றி சிந்தித்து இருந்தால் அவன் பொய் சொல்லி பணம் சம்பாதிக்க மாட்டான்அவன் பொய் சொல்லி பணம் சம்பாதிக்க மாட்டான். தடுக்கப்பட்ட வழிகளையும் அவன் தேட மாட்டான்.

 

ஆனால், இன்று நாம் பார்க்கின்றோம் அவன், "தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும்" என்பதற்காக எப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளையெல்லாம் செய்கின்றான். தன்னுடன் வேலை செய்யக்கூடிய சக தொழிலாளியை தன் மேலாளரிடம், இவன் வேலை செய்வது சரியில்லை என்றெல்லாம் சொல்லி மற்றவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கி தான் மட்டுமே நல்லவன் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு வயிறு பிழைக்கக்கூடியவர்களைப் பார்க்கின்றோம்ம், இவன் வேலை செய்வது சரியில்லை என்றெல்லாம் சொல்லி மற்றவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கி தான் மட்டுமே நல்லவன் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு வயிறு பிழைக்கக்கூடியவர்களைப் பார்க்கின்றோம்.

 

உழைக்கக்கூடிய மனிதனின் வேர்வை காயும் முன் அவனுடைய ஊதியத்தை கொடுத்து விடு என இஸ்லாம் கூறுவது ஒருபுறம் இருக்க அல்லும் பகலும், வெய்யிலிலும் மழையிலும் குளிரிலும் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் ஏழை தொழிலாளர்களின் சம்பளத்தையும் கூட சில நிறுவனங்கள் மூன்று மாதம் கழித்துத்தான் சம்பளம் தருவோம். மூன்று மாத சம்பளம் எங்கள் கையிருப்பில் இருக்கும். நீங்கள் வேலையைவிட்டு நீங்கும் சமயத்தில் அப்பணத்தை  திருப்பி தந்து விடுவோம் என்று சொல்லிவிட்டு அந்தப் பணத்தை பேங்கிலே தன் பெயரில் இட்டுவிட்டு (எ:கா 50 பேருடைய மூன்று மாத சம்பளத்தை வங்கியில் இட்டால் எவ்வளவு வட்டி கிடைக்கும்) வரும் வட்டிப்பணத்தை வாங்கி சாப்படுகிறார்கள்.

 

பொருள்களிலே வயிற்றுக்கு மனித உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருள்களை கலந்து விற்று வாழக்கூடியவர்களைப் பார்க்கின்றோம். ஒரு புறம் இப்படி ஒரு கூட்டம் இந்த பூமியே எங்களுக்குத்தான் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

 

இதன் மறுபுறமோ தாய்-தந்தை, மனைவி-மக்கள், சொந்த பந்தம் அனைத்தையும் இழந்து பணத்திற்காக அன்னிய நாட்டில் அனாதையாக வேலை செய்கின்றான்ய்-தந்தை, மனைவி-மக்கள், சொந்த பந்தம் அனைத்தையும் இழந்து பணத்திற்காக அன்னிய நாட்டில் அனாதையாக வேலை செய்கின்றான்.

 

கணவனின் புகைப்படத்தைக் காண்பித்து தந்தையைப் பிறந்த குழந்தைக்கு "அறிமுகம்" செய்த தாய்மார்கள் எத்தனை, ஏண்டி ஒரு முத்தம் கொடேன் என்று மனைவியிடம் டெலிபோனில் கணவன் கேட்க, "சும்மா இருங்க பக்கத்தில் ஆளுங்க இருக்காங்க!" என்று அவள் சிணுங்கியதை மனதில் தாங்கிக்கொண்டு அன்றைய வேதனையை போக்கி கானல் நீரிலே தாகம் தீர்க்கின்ற கணவன்மார்கள் எத்தனை எத்தனை??!

 

இவைகளை ஏன் இங்கே குறிப்பிடுகின்றேன் என்றால் மனிதன் இவ்வளவு வேதனையையும் ஏன் அவன் சகித்துக்கொள்கின்றான் பொறுத்துக்கொள்கின்றான் என்றால் எல்லாம் காசுக்காகத்தான் இப்படி காசுக்காக தன்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை மாற்றி வைக்கக்கூடிய மனிதனை நோக்கி இஸ்லாம் இவ்வாறு கூறுகின்றது

 

வாழ்க்கைத் தரத்தில்) உங்களுக்குக் கீழிருப்போரை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில் , அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என , அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ , முஸ்லிம்

 

ஒரு மனிதன் தன் அக்கம்பக்கத்தை பார்க்கின்றான். உற்றார் உறவினர்களை பார்க்கின்றான் தன்னுடன் படித்த சக நண்பர்களைப் பார்க்கின்றன். அவர்களெல்லாம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டனர். நாம் ஏன் இன்னும் இப்படியே இருக்க வேண்டுமென்று நினைக்கின்றான். அவர்களைப் போல் உயர வேண்டுமென்பதற்காக குறுக்கு வழிகளைக் கையாளுகின்றான்.

 

ஆனால் அவன் எடுத்த அந்த குறுக்கு வழி மூலம் மற்ற மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அவன் மறந்து விடுகின்றான். ஏனென்றால் அவனுடைய பார்வை மேல் நோக்கியே ஆகிவிட்டது. தனக்கு கீழ் இருப்பவர்களை அவன் பார்த்திருந்தால் இன்னும் தன்னை விட வாழ்க்கை தரத்தில் கீழ் பலர் இருக்கின்றார்கள். அன்றாடம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எத்தனையோ பேர் உள்ளனர் அவர்களை விட நாம் சிறப்பாகவே இருக்கின்றோம் என்று ஒரு மனிதன் சிந்தித்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் இஸ்லாம் சொல்கின்றது.

 

சிந்தனை: அபூஇப்ராஹிம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.