பாராபங்கி! (Barabanki) – உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருந்து 27.9 கி.மீ தொலைவிலுள்ள நகரம்.
புதிய கொலைக் களம் : போலீஸ் வேன்!
ஃபைஸாபாத் மாவட்ட பாராபங்கி நீதிமன்ற விசாரணையை முடித்துக்கொண்டு லக்னோ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில், ராம் சனெஹி கட் எனும் ஊரைக் கடக்கும்போது போலீஸ் வேனுக்குள் திட்டமிட்டபடி ஒரு படுகொலை நடைபெற்றது.
நாள்: 18.5.2013 சனிக்கிழமை
கொலையுண்டவரின் பெயர்: காலித் முஜாஹித்
கூட்டுக் கொலையாளிகளாகப் பட்டியலிடப் பட்டுள்ளவர்கள்: சப் இன்ஸ்பெக்டர் ராம் அவத்ராம், கான்ஸ்டபிள்கள் சந்திரசேகர், ஆனந்த் ப்ரகாஷ், ஜிதேந்திரா, மனோஜ் குமார், ராம்ஜி யாதவ், தீபக் குமார், ஜெயப்ரகாஷ் மற்றும் லாலாராம்.
***
ஒரு சிறிய Flashback!
நவம்பர் 23, 2007 அன்று லக்னோ, வாரணாசி மற்றும் ஃபைஸாபாத் நீதிமன்றங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்றன. 14 உயிரிழப்புகள்; காயமடைந்தோர் பலர். குண்டு வெடிப்பு நடத்திய உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உ.பி. காவல்துறைக்கு வக்கில்லாமல் போனது; அல்லது உண்மைக் குற்றவாளிகள் காவலர்களுக்கு உத்தரவிட்டதன்படி டிசம்பர் 12, 2007இல் ஆஸம்கர் எனுமிடத்திற்கு டாட்டா சுமோ வாகனத்தில் வந்த சிறப்பு அதிரடிப்படையினர் (STF), யூனானி மருத்துவரான முஹம்மது தாரிக் காசிமி என்பவரைப் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்க அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றனர்.
நான்கு நாள்கள் கழித்து, டிசம்பர் 16, 2007 அன்று பள்ளி ஆசிரியரான, மேற்கூறிய மவ்லவீ காலித் முஜாஹித் என்பவரை ஜோன்பூர் எனும் இடத்தில் பலரும் பார்த்துக் கொண்டிருக்கும்போது சிறப்பு அதிரடிப்படையினர் தூக்கிச் சென்றனர்.
ஏறத்தாழ பத்து நாள் வரைக்கும் அவ்விருவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் 14.12.2007 அன்று முஹம்மது தாரிக் காசிமியின் குடும்பத்தினர், நகரக் காவல் நிலையத்தில் ‘ஆள் கடத்தல்’ புகார் ஒன்றைப் பதிவு செய்தனர். மட்டுமின்றி, 19.12.2007 அன்று நீதிமன்றத்தில் ‘ஆள் கொணரும்’ (ஹேபியஸ் கார்பஸ்) வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, NLP (National Loktantrik Party) கட்சியின் சவுத்ரி சந்தபால் சிங் என்பவர், உ.பி. காவல்துறைக்கு எதிராகப் போராட்டம் ஒன்றை நடத்தினார். அதில் முஹம்மது தாரிக் காசிமியையும் மவ்லவீ காலித் முஜாஹிதையும் திருப்பி ஒப்படைப்பதற்கான கெடுவாக 22.12.2007ஐ நிர்ணயித்திருந்தார்.
டிஸம்பர் 22, 2007 அன்று ஒரு பத்திரிகையாளர்களின் சந்திப்பை லக்னவின் ADGP பிரிஜ்லால் ஏற்பாடு செய்து, கடந்த 23.11.2007இல் நீதிமன்றங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் ‘முக்கியக் குற்றவாளிகள்’ என்பதாகத் தாரிக்கையும் காலித் முஜாஹிதையும் அன்று(22.12.2007) ‘பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன்’ பாராபங்கி ரயில்வே ஸ்டேஷனில் வைத்துக் கைது செய்ததாக சரடு விட்டார். (FIR 1891/2007; FIR 547/2007).
‘கெட்டிக்காரன் புளுகு எட்டே நாட்களில் உடையும்’; ‘நுணலும் தன் வாயால் கெடும்’ எனும் சொலவடைகளுக்கு ஒப்ப, “உ.பி. நீதிமன்றங்கள் மூன்றில் நடந்த குண்டு வெடிப்புகள் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புகளை ஒத்திருக்கின்றன” என்று பிரிஜ்லால் கூடுதலாக உளறி வைத்தார். (மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது ஹிந்துத்துவாதான் என்று ஸ்வாமி அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்). வழக்கம்போல் காவிச் சார்பு ஊடகங்கள் இல்லாத ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித் தீர்த்தன.
இரு கைதிகளின் குடும்பத்தினரும் மனித உரிமை ஆர்வலர் குழுக்களும் இணைந்து காவல்துறையின் கபட நாடகத்துக்கு எதிராகக் களங்கள் கண்டனர். உ.பி. காவல்துறைக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்தன. இறுதியாக, மேற்காணும் வழக்கில் காவல்துறையினரின் முறைகேடுகளையும் கைது நடவடிக்கைகளையும் குறித்து விசாரிப்பதற்கு அப்போது ஆட்சியிலிருந்த மாயாவதி அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி R.D. நிமேஷ் என்பவரின் தலைமையில் கடந்த மார்ச் 2008இல் ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தரும்படி உத்தரவிட்டது.
R.D. நிமேஷ் கமிஷனின் பதவிக் காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.
ஆறுமாதக் கெடு கொடுத்து அமைக்கப்பட்ட R.D. நிமேஷ் கமிஷன், நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் 31, 2012இல் தனது அறிக்கையை உ.பி. அரசிடம் சமர்ப்பித்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆட்சியை இழந்து, சமாஜ் வாடியின் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராகி இருந்தார். ஆறு மாதங்களாகியும் கமிஷனின் அறிக்கையை உ.பி. அரசு வெளியிடாமல் கண்ணாமூச்சு விளையாடியது.
லக்னோவில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்த 12.10.2012 கருத்தரங்கில் பேசிய அக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ராஜேந்தர் சச்சார், “நிமேஷ் கமிட்டி தன் அறிக்கையை ஆகஸ்டு 21 அன்றே உ.பி அரசிடம் சமர்ப்பித்த பிறகும் ஏன் உ.பி அரசு அறிக்கை வெளியிட மறுக்கிறது?” என்று வினா எழுப்பினார்.
மேலும், இது இரு இளைஞர்களின் வாழ்வு குறித்த பிரச்னை மாத்திரமல்ல என்றும் குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களுக்கான நியாயம் கிடைக்கவேண்டும்; உண்மை குற்றவாளிகள் சமூகத்தில் தோலுரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அண்மைக் காலமாக முஸ்லிம் இளைஞர்கள் பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நிரபராதியாக விடுதலையாவது இவ்வரசின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாகி விடும் என்று எச்சரித்த சச்சார், விசாரணைக் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னும் அதை வெளியாக்குவதில் காட்டும் தாமதம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நொறுக்கிவிடும் என்றும் கூறினார்.
கெட்டிக்கார இணைய ஊடகங்கள் சில, உ.பி. காவல்துறையின் தில்லுமுல்லுக் கைதுகளைக் கண்டிக்கும் R.D. நிமேஷ் கமிஷனுடைய அறிக்கை பகுதிகளை வெளியிட்டன. அவற்றுள், சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறை கருப்பாடுகள் தண்டிக்கப்பட வேண்டும் எனும் பரிந்துரை தலையாயது. சட்ட விரோதமாக இரு அப்பாவிகளைக் கைது செய்வதற்கு சதி செய்ததாகவும் உடந்தையாக இருந்ததாகவும் 42 காவல்துறை அதிகாரிகள் மீது R.D. நிமேஷ் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டியிருந்தது.
{AF template=white_border ration 50 width=100% colorize=FFCC66} According to sources, the Commission described the picking up of Tariq and Khalid as an “unlawful activity” and recommended punishment to officials involved in “detaining and torturing” them. The Commission, which heard over 100 witnesses, is reported to have concluded that the two were not arrested on December 22 from Barabanki as claimed by the STF but had been picked up several days earlier — Tariq, a Unani practitioner, from the Shankarpur checkpost near Sarai Meer in Azamgarh “by some people in a Tata Sumo” on December 12 and Khalid, a teacher, in the same manner from Mariyahu in Jaunpur on December 16. Both were taken to different locations and tortured, the Commission is reported to have said, censuring the Azamgarh and Jaunpur police for not taking cognisance of complaints and FIRs on the “forcible capture of Qasmi and Mujahid by people in Tata Sumo.” The Commission is said to have recommended appointment of non-police gazetted officers as witnesses of recoveries as a safeguard against falsification of records; disposal of terror cases within two years and action against officials for delays beyond this period; investigation of cases by gazetted officers different from those making the arrests and videorecording of interrogation.
Source: http://www.thehindu.com/news/national/other-states/khalid-death-turns-focus-on-nimesh-panel-report/article4730505.ece {/AF}
R.D. நிமேஷ் கமிஷனுடைய அறிக்கை உ.பி. சட்டமன்றத்தின் முன்வைக்கப்பட்டால் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி மேலும் பலர் மாட்டிக் கொள்வார்கள். எனவே, நிரபராதிகளுக்கு எதிராகப் புனையப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாகக் கடந்த 24.4.2013 அன்று நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் உ.பி.யின் உள்துறைச் செயலர் சர்வேஷ் சந்திர மிஸ்ரா அறிவிப்புச் செய்தார்.
ஆனால், நிரபராதிகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறமுடியாது என பாராபங்கியின் நீதிபதிகள் கடந்த 10.5.2013 அன்று மறுத்துவிட்டனர். பெரும்பாலான நீதிபதிகள் வித்ய பாரதியினால் மூளைச் சலவை செய்யப்பட்ட முன்னாள் மாணவர்களல்லவா? ஒரு மாநில அரசின் முடிவின்படி முதல் நிரபராதியாக ஒரு முஸ்லிம் விடுதலையாகிவிட முடியுமா? நீதித்துறை விடுவித்தாலும் காவல்துறை விட்டுவிடுமா?
“இது, காலங் காலமாக சிறுபான்மையினருக்கு எதிராகக் காவல்துறைக்குள் ஊட்டப்பட்ட வெறுப்பு” என்கிறார் உ.பி.யின் முன்னாள் ஐ.ஜியான எஸ்.ஆர் தாராபூரி, ஐ.ப்பீ.எஸ்.
{AF template=white_border ration 50 width=100% colorize=FFCC66} There is a communal bias in the police department. I have seen that majority of the officers have a communal bias towards the minorities. This practice has been going on for a while now and no attempt has been made to stop this. Moreover there is no action against those police personnel who book innocent people in wrong cases. What has happened in Hyderabad? So many people were let off by the court. The police who booked the cases for reasons best known to them continue to remain unpunished.
Source: http://news.rediff.com/interview/2010/jun/15/interview-darapuri-majority-of-police-force-is-biased.htm {/AF}
கடந்த 20.5.2013 அன்று பத்திரிகையாளர்களுக்கு தாராபூரி அளித்த பேட்டியில் “காலிதை பொய் வழக்கில் சிக்க வைத்தவர் உ.பி.யின் முன்னாள் DGP விக்ரம் சிங்” என்று குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
“நேற்று முன்தினம் போலீஸ் வேனில் கொல்லப்பட்ட காலித் முஜாஹித் ஓர் அப்பாவி; கைது செய்யப்பட்டபோது அவரிடம் ஆயுதம் ஏதும் இருக்கவில்லை. அன்றைய DGP விக்ரம் சிங், ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்டு, கிடைக்காத காரணத்தால் காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காசிமி ஆகிய இருவரையும், இந்த வழக்கில் அநியாயமாக சிக்கவைத்தார்.
காலித் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், சட்டத்துக்கு புறம்பான முறையில் புலனாய்வுத் துறையினரின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள், அவர்தம் குடும்பங்களுக்குக்கூட தெரியாத வகையில் ‘கடத்தப்பட்டு’ ரகசிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் போது, தேவைப்படும் வழக்குகளில் அவர்கள் சிக்க வைக்கப்படுவார்கள். இவ்வாறு ரகசிய காவலில் வைக்கப்படும் முஸ்லிம் இளைஞர்கள், பன்றிக்கறி சாப்பிடவும் மூத்திரம் குடிக்கவும் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
{AF template=white_border ration 50 horiAlign=right width=100% colorize=FFCC66} Many Muslim youth who have been missing from their districts and even their families do not know about them because the investigative agencies have abducted them and kept them at a secret place so that implicate them in bomb blast some time in future. These youth are forced to eat pig meat and drink urine. It is at the connivance of police officials that these innocent are put behind bars showing that they had an unlicensed pistol. When Khalid Mujahid and Tariq Qasmi were arrested nothing was found on them but Vikram Singh told them that if they paid him Five lac rupees they would-be set free and someone else would be implicated instead. {/AF}
முஸ்லிம் இளைஞர்கள் போலீஸ் காவலில் சாகடிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. பல நேரங்களில் பல உண்மைகள் உலகுக்குத் தெரியவராமலேயே புதைக்கப்படுகின்றன” என்கிறார் தாராபூரி.
***
போலீஸ் வேனுக்குள் வைத்து 18.5.2013இல் கொலை செய்யப்பட்ட மவ்லவீ காலித் முஜாஹித், “அன்று மதியம் 3.30 மணிவரை நீதிமன்றத்தில் இருக்கும்போது எவ்வித அயர்ச்சியுமின்றி திடகாத்திரமாகவே இருந்தார்” என அவருடைய வழக்கறிஞர் முஹம்மது ஷுஐப் தெரிவித்துள்ளார்.
ஆனால், “வெப்பம் தாளாமல் இறந்துவிட்டார்” என முதலில் கூறிய ஃபைஸாபாத்தின் DIG தர்மேந்த்ர சிங் யாதவ், “மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மாரடைப்பால் மரணித்தார்” என பல்டி அடித்துள்ளார்.
நீதிமன்றத்தின் விசாரணை முடிந்து போலீஸ் வேனுக்குள் சென்றபோது வெள்ளை பைஜாமா-குர்தா அணிந்திருந்த காலித் முஜாஹித், காவல்துறையினரால் பிணமாகக் காட்டப்படும்போது ட்டீ ஷர்ட் அணிவிக்கப்பட்டிருந்தார். பாராபங்கி மருத்துவமனைக்கு காலிதைக் கொண்டு சென்றபோது கண்ணால் கண்ட சாட்சிகள், காலிதின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் வழிந்திருப்பதையும் முகத்தில் புதிய காயங்களையும் பார்த்திருக்கின்றனர். [படம்].
மவ்லவீ காலித் முஜாஹிதின் மாமா ஸஹீர் ஆலம் ஃபலாஹீ என்பவர் கடந்த 19.5.2013 அன்று ஒரு முதல் தகவல் அறிக்கையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். அதில், தம் மருமகன் காலிதைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாக உயரதிகாரிகள் உட்பட 42 காவல்துறையினரைப் பட்டியலிட்டுள்ளார். இத்தனைக்குப் பின்னரே CBI விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிகள் நடத்தும் குண்டுவெடிப்புகளைப் பற்றிய செய்திகள் காட்சி ஊடகங்களில் காலையில் வெளியானால் எவ்வித விசாரணையும் நடைபெறாத அன்று மாலையே “முஸ்லிம் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு” என்று கூசாமல் செய்தி வெளியிடும் ஊடகங்கள்;
ஏமாளி முஸ்லிம்களைத் தூக்கிக் கொண்டுபோய் யாருக்கும் தெரியாத இடத்தில் அடைத்து வைத்துக்கொண்டு “ஐந்து லட்சம் ரூபாய் தா; இல்லையென்றால் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியே நீதான்” எனக் காசு பறிக்கும் விக்ரம் சிங் போன்ற பகல் கொள்ளைக் காரன்கள்;
இலஞ்சம் கொடுப்பதற்கு மறுக்க, மறுக்க இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்தேறிய பல்வேறு குற்றங்களில் அப்பாவி முஸ்லிம்களைச் கோத்துவிடும் காவல்துறையினருக்குத் துணையாக ‘பங்கு’ ஏதும் தேறாதபோது சிறைச்சாலைக்குள்ளேயே வைத்துக் கொன்றுபோடும் ஜெயிலர்கள்
விசாரணை என்ற பெயரால் அப்பாவிகளைக் கைது செய்து போலீஸ் வேனுக்குள்ளேயே வைத்துக் கொலை செய்யும் ராம் அவத்ராம், சந்திரசேகர், ஆனந்த் ப்ரகாஷ், ஜிதேந்திரா, மனோஜ் குமார், ராம்ஜி யாதவ், தீபக் குமார், ஜெயப்ரகாஷ் மற்றும் லாலாராம் போன்ற ‘காவலர்கள்’ என்ற பெயருக்கே இலாயக்கற்ற போலீஸ் பொறுக்கிகள்;
காட்டுத் தனமாகத் தாக்கப்பட்டதில் முகத்தில் வெளிப்படையாகத் தெரியும் காயங்களைக்கூட குறிப்பிடாமல் பிரேதப் பரிசோதனை தயாரிக்கும் சோரம்போன அரசு மருத்துவர்கள்;
இத்தனை தகவல்களையும் உளவுத்துறை மூலம் தெரிந்துகொண்டு, “காலிதின் மரணம் இயற்கையானது போலத்தான் தெரிகிறது” என்று அறிக்கை விடும் மோசடி அரசியல்வாதிகள்;
நூறு சாட்சிகளுக்குமேல் விசாரித்து, “குற்றம் சுமத்தப்பட்ட இருவரும் நிரபராதிகள்” என நிமேஷ் கமிஷனின் அறிக்கை வந்த பின்னர் பொய்வழக்கை வாபஸ் வாங்குவதாகவும் நிரபராதிகளை விடுதலை செய்யுமாறும் அறிவித்த உ.பி. மாநில அரசின் கோரிக்கையை மறுதலித்து, அப்பாவி முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய மறுக்கும் நீதி(!)பதிகள்!
இவர்களுக்கு மத்தியில்தான் முஸ்லிம்கள் வாழவேண்டியுள்ளது – “நாங்கள் அப்பாவிகள்” என்று சொல்வதற்குக்கூட சுதந்திரம் மறுக்கப்பட்டவர்களாக.
[இச்செய்தி பதிவாகும் வேளையில் உ.பி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வழங்கிய நிவாரணத் தொகையான ஆறு இலட்சம் ரூபாயை முகத்தில் அடித்தார் போன்று திருப்பி வீசியுள்ளனர் காலித் முஜாஹித் குடும்பத்தினர். இதற்குப் பகரமாக, காலிதை அநியாயமாக அடித்துக் கொலை செய்த கொலையாளிகளுக்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.]