மத நல்லிணக்கத்தைக் குலைத்து மதமோதலை ஏற்படுத்தும் விதத்திலான அறிக்கைகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்!
திருபுவனத்தில் பாமக முன்னாள் நிர்வாகி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்போம். குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமில்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைப்போம்.
ஆனால்,
காவல்துறை வழக்குப் பதிவு செய்யும் முன்னரே, குற்றவாளி இன்னார் தான் என ஒரு சமூகத்தின் மீது பொய்க்காரணங்களைக் கூறி தீர்ப்பு வாசித்து, சமூகங்களுக்கிடையே மத மோதலை உருவாக்க முனையும் ஃபாசிச சங்கபரிவாரத்தின் அதே குரலை ஒலிக்கும் உங்களுடைய ஃபாசிச கூட்டு வெறியினைத் தயவுசெய்து கைவிடுங்கள்.
வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி போட்டு அப்பாவி இந்துக்களின் ஓட்டை அள்ளுவதற்கு மதவெறியினைத் தூண்டிவிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற தீயமுடிவுக்கு வந்துள்ளதை உங்களுடைய அறிக்கை தெளிவாக எடுத்துரைக்கிறது.
மதநல்லிணக்கத்தைக் குலைத்து மதமோதலை ஏற்படுத்தும் விதத்திலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக்கூடாது என அறிக்கையில் கூறியுள்ளீர்கள். மிக நல்ல கருத்து. ஆனால், அதனைக் கூற உங்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்பதை நினைத்துப்பாருங்கள்.
‘மதமாற்றம் செய்ய முயன்றவர்கள்’ எனக் கூறியுள்ளது அப்பட்டமான பொய் மட்டுமல்ல, சட்ட விரோதமானதும்கூட.
இந்தியாவில் அவரவர் தம் மதத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு முழு உரிமையினைச் சட்டம் தருகிறது. அதனைத் தடுக்க உங்களுக்கோ நீங்கள் வளர்த்த சாதிவெறியர்களுக்கோ அல்லது நீங்கள் ஒட்டிக்கொள்ள நினைக்கும் ஃபாசிச சங்கபரிவாரக் கூட்டத்துக்கோ எந்த உரிமையும் இல்லை என்பதை முதலில் உணருங்கள். மதப்பிரச்சாரத்தை, ‘மதமாற்ற முயற்சி’ எனத் திரிக்கும் பார்ப்பனீய பயங்கரவாத திரிபுவாதத்துக்குத் தமிழகத்தில் கொடிபிடிக்கும் சாதிவெறிக் கூட்டமாக இருக்காதீர்கள்.
தம் மதத்தைப் பிரச்சாரம் செய்யச் சென்றவர்களுடன் தகராறு செய்தது உம்முடைய சாதிவெறி கட்சியின் முன்னாள் நிர்வாகி ராமலிங்கம். அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. செய்த கொடியவர்களைச் சட்டம் கண்டுபிடித்துத் தண்டிக்கும்; தண்டிக்க வேண்டும். ஆனால் அதேசமயம், சட்டம் அனுமதிக்கும் விசயத்தைச் செய்யச் சென்ற இஸ்லாமியர்களைத் தடுத்துத் தகராறு செய்தது சட்ட விரோதம். ஃபாசிச சங்கபரிவாரக் கூட்டம் செய்யும் அந்தச் சட்ட விரோத செயலைத் தமிழகத்தில் செய்ய நீங்கள் எப்போதிலிருந்து மொத்தக் குத்தகைக்கு எடுத்தீர்கள்?
சட்டம் வழங்கும் உரிமையினைத் தடுக்க முனையும் சங்கபரிவார ஃபாசிச வெறிதான் சட்ட விரோதமானது. அதுதான் மதமோதலை உருவாக்குவதற்கான முதல்படி. அதனைச் செய்யும் உங்கள் சாதிவெறி கட்சியினருக்கு அவ்வாறு செய்யாதீர்கள் என முதலில் அறிவுறுத்துங்கள்.
அதேசமயம், அக்காரணத்துக்காக, தாக்குதல் என்பதும் சட்டவிரோதமானதே. சட்ட விரோதச் செயல் எவர் செய்தாலும் அது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே. அப்படி ஏதும் நடந்திருந்தால், அதனைக் காவல்துறை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி தக்க தண்டனை பெற்று கொடுக்கட்டும்.
https://www.facebook.com/1434130116731307/videos/vb.1434130116731307/363577681039885/?type=2&theater
அதுவரை சொறிவாயைக் கொண்டு, சமூகங்களிடையே தீயைக் கொளுத்தும் தீய வேலையினைச் செய்து, ஃபாசிச சங்கபரிவாரத்துக்குக் கொடிபிடிக்காமல் கவனமாக இருங்கள்.
இது, தாழ்த்தப்பட்ட இந்து மக்களின் குடிசைகளைக் கொளுத்தி உயர்சாதியினரின் ஆதரவைப் பெற்று ஓட்டுகளை அள்ளிய காலமல்ல; மக்கள் உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் கவனமாகவே உன்னிப்புடன் கவனித்து வருகின்றனர் என்ற நினைவிருக்கட்டும்.
ஃபாசிச பாஜகவுடனான கூட்டணிக்காக இத்தகைய மதமோதலை உருவாக்கும் சொறி வேலையினைச் செய்தால், தமிழகத்திலிருந்து பாமகவை மக்கள் ஒட்டுமொத்தமாக துடைத்து நீக்கிவிடுவர். இந்த மண் ஃபாசிசத்தின் மண் அல்ல என்பது எப்போதும் நினைவில் இருக்கட்டும்!
– அபூசுமையா