நீங்களே சொல்லாதவரை, இந்த பிரியாணியின் மூலம் (Source) என்னவென்று யாருக்கும் தெரியாத பொரி பிரியாணி.
தேவையானவை:
அரிசிப் பொரி |
: 1/2 கிலோ |
பெரிய வெங்காயம் |
: 3 |
தக்காளி |
: 3 |
பச்சை மிளகாய் |
: 4 |
பட்டை |
: 2 துண்டு |
கிராம்பு (இலங்கம்) |
: 3 |
ஏலம் |
: 2 |
இன்சி-பூண்டு பேஸ்ட் |
: 1 மேஜைக் கரண்டி |
பொட்டுக் கடலை |
: 25 கிராம் |
நெய் |
: 4 மேஜைக் கரண்டி |
கொத்தமல்லித் தழை |
: 4 கீற்று |
புதினாத் தழை |
: 3 கீற்று |
முன்னேற்பாடுகள்
பொரியை நீரில் போட்டு ஒரு புரட்டு புரட்டி, தாமதிக்காமல் வடிதட்டைப் பயன்படுத்தி அள்ளி விடவும். கல் இருந்தால் கீழே தங்கிவிடும். ஊற விட்டிடக் கூடாது.
வெங்காயத்தையும் தக்காளியையும் வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை நறுக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் இட்டு, மாவாகாமல் மெல்லிய குருணையாகப் பொடிக்கவும். கொத்தமல்லி-புதினாத் தழைகளைச் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
செய்முறை
கடாயில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு (இலவங்கம்), ஏலக்காய் போட்டு, பச்சை மிளாகாய் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் போடவும். வெங்காயம் சிவந்ததும் தக்காளி, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். தேவையான உப்புச் சேர்த்து நன்றாக வதங்கியதும் வடிய விட்டுள்ள அரிசிப் பொரியைச் சேர்த்து நன்றாகப் புரட்டவும். எல்லாம் நன்றாகக் கலந்து வந்ததும் பொடித்த பொட்டுக்கடலையைச் சேர்க்கவும். கொத்தமல்லி-புதினாத் தழைகளைத் தூவி இறக்கவும். கமகம பொரிபிரியானி ரெடி.
மயங்கும் மாலைநேர டிபனுக்கு ஏற்றது. சுடச்சுடப் பறிமாறிச் சுவைக்கவும். நொடியில் தயாரித்து விடலாம்.
குறிப்பு
டெகெரேஷனுக்காக சிறுசிறு தேங்காய்த் துண்டுகளையும் வறுத்த முந்திரியையும் படத்தில் உள்ளதுபோல் மேலே தூவலாம். நீங்களே சொல்லாதவரை இந்த பிரியாணி பொரியில் செய்தது என யாருக்கும் தெரியாது.
– ஆக்கம் : ஆர். நூர்ஜஹான் ரஹீம்