தொடரின் இரண்டாம் பாகத்தில் நுழையும் முன் முதல் பாகத்தினை வாசித்துக் கொள்ளுங்கள். – சத்தியமார்க்கம்.காம்
இந்திய நாளிதழ்களின் பக்கங்களை இரங்கல் செய்திகளும் அழகழகான மனிதர்களைப் பற்றி,அவர்கள் தங்கிய ஹோட்டல் அறைகளைப் பற்றி, அவர்கள் மிகவும் விரும்பும்உணவகங்கள் பற்றி, அங்கு அவர்களுக்கு உணவு பரிமாறிய ஊழியர்களைப் பற்றிச்சொன்ன செய்திகளெல்லாம் விலவாரியாக ஆக்ரமித்திருந்த ஒரு நாளில், தேசிய நாளிதழ் ஒன்றின்உள்பக்க இடது மேல் மூலையொன்றில், “உங்களுக்கு பசிக்கிறதா?” என்றகேள்வியின் கீழ் ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது. உலகில் பட்டினிக்கொடுமை பரவலாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் (International Hunger Index) சூடானுக்கும் சோமாலியாவுக்கும் கீழே இந்தியா இடம் பிடித்துள்ளதுஎன்ற தகவல்தான் அது.
இதுவும் ஒருவகையில் போர்தான்; ஆனால், இது வேறு வகையான போர்!
கிராமங்களில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும்நர்மதை நதிக்கரையிலும் கோயல் கரோ நதிக்கரையிலும்செங்காராவின் ரப்பர் தோட்டங்களிலும்நந்திகிராம், சிங்கூர், மேற்கு வங்காளத்தின் லால்கார் போன்றகிராமப்பகுதிகளும் சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா மாநிலங்களிலும்பெருநகரங்களின் குடிசைப்பகுதிகளிலும் இன்றளவும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் போர் இது! இந்தப் போரை நீங்கள் தொலைக்காட்சிகளில்பார்க்க முடியாது.
எனவே, நாமும் ஊருடன் ஒத்துப்போவதற்காக, தொலைக்காட்சிகளில் காட்டப்படும் ‘போரை’ப்பற்றி மட்டும் சிந்திப்போமாக!
பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றின் மூல காரணத்தைக் கண்டு பிடிப்பது, மெகாநிறுவனம் ஒன்றின் வருமானம் எங்கிருந்து வந்தது என்பதைக்கண்டுபிடிப்பதைப்போல மிகக் கடினமானது; அரிதினும் மிக அரிதானது.
இன்றைய சூழ்நிலையில் தீவிரவாதம் பற்றி நிகழும் உரையாடல்களில் முற்றிலும்வேறுபட்ட இருவிதமான கருத்துகள் நிலவுகின்றன.
ஒரு தரப்பினரின் கருத்துப்படி (இவர்களை ‘ஏ’ பிரிவினர் என்று வைத்துக் கொள்வோம்)தீவிரவாதம், குறிப்பாக ‘இஸ்லாமிய’த் தீவிரவாதம், வெறுக்கத்தக்கபைத்தியக்காரத்தனமான, கடும் தண்டனைக்குரிய ஒரு குற்றச்செயல்.வெளியுலகத்துடன் எந்தத் தொடர்புமில்லாமல், வரலாற்றுப் பிண்ணனியோ, புவியியல்-பொருளியல் ரீதியிலான காரணிகளோ இல்லாமல், ஒரு தனி வட்டத்திற்குள் சுழன்றுகொண்டிருப்பதுதான் தீவிரவாதம்.எனவே, தீவிரவாதத்தைத் தற்கால அரசியல்கண்ணோட்டத்தில் அணுகிப் புரிந்துக் கொள்ள முயல்வதே ஒரு குற்றம்.ஏனெனில் அத்தகைய அணுகுமுறை தீவிரவாதத்தை நியாயப்படுத்துவதாக ஆகிவிடும்என்பது இந்த ஏ பிரிவினரின் வாதம்.
மற்றொரு தரப்பினரின் கருத்துப்படி (இவர்கள் ‘பி’ பிரிவினர்), தீவிரவாதச்செயல்களை எவ்வகையிலும் எக்காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்தமுடியாதுதான்.ஆனால் அச்செயல்கள் குறிப்பிட்ட காலம், இடம், அரசியல்சூழல் ஆகியவற்றுடன் தொடர்புடையன. தீவிரவாதத்தை இத்தகைய கண்ணோட்டத்தில்அணுக மறுப்பது பிரச்னையை மேலும் அதிகரிக்கச் செய்து மேலும் பலரைஅபாயத்திற்குள்ளாக்கும் என்பதால் அதுவே குற்றமாகும் என்பதுஇந்த பி தரப்பினரின் வாதம்.
இஸ்லாமின் அடிப்படைவாத ‘சலபி’ பிரிவைச் சார்ந்தவரும் 1990 இல் லஷ்கர்-எ-தொய்பா இயக்கத்தைத் தொடங்கியவருமான ஹஃபிஸ் சயீத்தின் வார்த்தைகள் ‘ஏ’ பிரிவினரின் வாதத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. ஹஃபிஸ் சயீத் தற்கொலைத் தாக்குதல்களை அங்கீகரிக்கிறார். யூதர்களையும் ஷியாக்களையும் ஜனநாயகத்தையும் வெறுக்கிறார். ‘அவரது இஸ்லாம்’ உலகை ஆளும் நாள் வரும் வரை தொடர்ந்து ‘ஜிகாத்’ செய்து கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் நம்புகிறார்.
“இந்தியா தனது சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு காண ஏன் அமெரிக்காவைஅழைக்க வேண்டும்? ஒரு வல்லரசு நாட்டிற்கு நண்பர்கள் என்று யாரும் இருக்கமுடியாது. கையாளாக மட்டுமே இருக்க முடியும்”.
அவர் சொன்ன மேலும் சில கருத்துகள்:
“இந்தியா சேதமடையாமல் இருக்கும்வரையில் அமைதி இருக்காது. அவர்களைத் துண்டாடுங்கள். உங்கள் முன் மண்டியிட்டு அவர்கள் மீது கருணை காட்டும்படி கெஞ்சும் வரை துண்டாடுங்கள்”.
“இந்தியாதான் நம்மை இந்தப்பாதையில் தள்ளியிருக்கிறது. அதற்காக நாம் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும். காஷ்மீர் முஸ்லிம்களை அவர்கள் கொல்வதுபோல இந்துக்களை நாம் கொல்ல வேண்டும்”
இது போன்ற வெறுப்புணர்வு எந்தவித வரலாற்றுப் பிண்ணனியோ வேறு காரணங்களோ இல்லாமல் தன்னிச்சையாகத் தோன்றியது என்று ‘ஏ’ பிரிவினர் வாதாடினால், அகமதாபாத் பாபு பஜ்ரங்கியின் வார்த்தைகளை எந்த வகையில் சேர்ப்பார்கள்?
2002இல் குஜராத்தில் நடந்த இன ஒழிப்புக் கலவரங்களின் முக்கியகாரணகர்த்தாவான பாபு பஜ்ரங்கி, ஒரு பயங்கரவாதியாக அல்லாமல் ஒருஜனநாயகவாதியாகத்தான் தன்னைக் கருதிக் கொள்கிறான்.
கேமராவின் முன் பஜ்ரங்கியே சொன்ன வார்த்தைகள்:
“நாங்கள் ஒரு முஸ்லிம் கடையைக்கூட விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றுக்கும்தீ வைத்தோம். அவற்றை உடைத்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தினோம். இந்தத் தே….. மகன்களுக்கு அவர்களின் பிணத்தை எரிப்பது பிடிக்காது. எரிப்பது என்றாலே அவர்களுக்கெல்லாம் பயம். அதனாலேயே அவர்களையெல்லாம் தீயிலிட்டு எரித்தோம். எனக்கு மரண தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கட்டும். என்னைத் தூக்கிலிட்டாலும் கவலை இல்லை. எனக்கு ஒரே ஒருகடைசி ஆசை இருக்கிறது. என்னை தூக்கில் போடுவதற்குமுன் இரண்டு நாள்மட்டும் கொடுங்கள். நான் ஜுஹாபுராவிற்குச் சென்று ‘களப்பணி’ ஆற்றவேண்டும். அங்கு அவர்கள் (முஸ்லிம்கள்) ஏழு அல்லது எட்டு லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களை நான் முடித்து விடுவேன். அவர்கள் இன்னும் கொஞ்சம் பேர் சாகட்டும். குறைந்தது 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் பேராவது சாக வேண்டும்.”
எம்.எஸ்.கோல்வால்கர் ‘குருஜி’யின் போதனைகளை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வேதம் போல மதிக்கிறார்கள். 1944 இல் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தலைவராக இருந்த கோல்வார்கர் கூறினார்:
“முஸ்லிம்கள் ஹிந்துஸ்தானில் காலடி எடுத்து வைத்த அந்த துரதிருஷ்டநாளிலிருந்து இன்றுவரை இந்த ஹிந்து தேசம் ஆக்ரமிப்பாளர்களுக்கெதிராகத் துணிச்சலாகப் போராடிக் கொண்டிருக்கிறது. இன உணர்வு எழுச்சி பெற்றுவருகிறது”
“தமது நாட்டின் இன, கலாச்சாரத் தூய்மையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, யூத இனத்தை முற்றிலும் துடைத்தொழித்த ஜெர்மனியின் அதிரடி நடவடிக்கைகள் உலகையே அதிர்ச்சியடைய வைத்தது. இனப் பெருமை இங்கு மிக உயர்வாக வெளிக்காட்டப் பட்டது. இதிலிருந்து கற்றுக் கொள்ளவும் பயனடையவும் ஹிந்துஸ்தானிகளான நமக்கு ஒரு நல்ல பாடம் இருக்கிறது.”
கோல்வார்கரின் மேற்காணும் சொற்களை ‘ஏ’ பிரிவினர் எந்த வகையில் சேர்ப்பார்கள்?
– தொடரும், இன்ஷா அல்லாஹ்…