விலை குறைவான செயற்கை சுவாச இயந்திரம் கண்டுபிடிப்பு

Share this:

மும்பையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் Techno Fest 2009-ல், Annual International Science Festival என்னும் பிரிவில் நேற்று துபாய் வாழ் இளையான்குடியை சேர்ந்த கம்பது அஸ்ரப் அலி – ஆபிதா இவர்களது மகனாராகிய அர்ஸத் அவர்கள் தாக்கல் செய்த விலை குறைவான செயற்கை சுவாச இயந்திரம் (Ventilator) என்னும் தன்னுடைய புதிய கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. மொத்தம் 24 புதிய கண்டுபிடிப்பபுகள் தாக்கல் செய்யப்பட அதில் 10 தெரிவு செய்யப்பட்டு அதில் முதல் பரிசாக இவரது கண்டுபிடிப்பு பரிசு பெற்றிருக்கிறது.

 

அர்ஸத் அவர்கள் துபாயில் பிடெக் இன்ஸ்டுரூமென்டேசன் நான்காம் ஆண்டு பயின்று கொண்டிருக்கிறார் என்பது இன்னும் சிறப்பான தகவல்.

இந்த புதிய கண்டுபிடிப்புக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த இவரது பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறுவதோடு நாமும் இளையான்குடியான்கள் என்ற வகையில் பெறு மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சாதனை (இளம்; விஞ்ஞானி) நாயகன் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம். மேலும் இவர் மென்மேலும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நம் நாட்டுக்கும் நம் ஊருக்கும் பெயர் பெற்று தர வேண்டும் என்று வாழ்த்துவோம்.

தகவல்: இளையான்குடி இணையம

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.