தோஷம் கழிக்கச் சென்றபோது விபத்து!
மானாமதுரையில் மரத்தில் கார் மோதி 5 பேர் பலி!
குழந்தைகளுக்கு தோஷம் கழிப்பதற்காக குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றவர்களின் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தை உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
“கிரகம்” கணித்த ஜோதிடரும் பலி!
குழந்தைக்கு கிரகம் சரியில்லை என்று கணித்த உள்ளூர் ஜோதிடர் கோபால், அதற்கு பிராயச்சித்தமாக, உடனடியாக ராமேஸ்வரம் சென்று பூஜை செய்து தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தைக்கு கிரகம் சரியில்லை என்று கூறத் தெரிந்த ஜோதிடர், தனது கிரகத்தைக் கணிக்கத் தெரிந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம்.
– நன்றி பத்திரிகை செய்தி