அன்பான அழைப்பு:
ஆன்லைன் தஜ்வீத் வகுப்புகளுக்கான சேர்க்கையினைத் துவங்குவதாக இஸ்லாம் ஆன்லைன்.நெட் (www.islamonline.net) தளம் அறிவித்துள்ளது.
குர் ஆன் அருளப்பட்ட புனித மாதமான ரமளானில் முஸ்லிம்கள் அதிக அளவில் குர் ஆனைப் பொருளுணர்ந்து ஓதவும், மனனம் செய்யவும் தமது வாழ்வில் பிரதிபலிக்கவும் செய்கின்றனர்.
குர் ஆனை பிழையின்றிச் சரியான உச்சரிப்பில் ஓதுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். ஆனால், அவசியமான இந்த கடமையினைச் சரி வரச் செய்யும் வாய்ப்பு முஸ்லிம்களில் பலருக்குக் கிட்டுவதில்லை என்பது வருந்தத் தக்க உண்மையாகும். இந்த குறைபாட்டிற்கு முதல் காரணமாகக் கூறப்படுவது, குர் ஆனைப் பிழையின்றி ஓதச் சொல்லிக் கொடுக்க அனுபவமுள்ள ஆசிரியர் கிடைப்பதில்லை என்பதே!
இந்தக் குறையினைப் போக்க இஸ்லாம் ஆன்லைன்.நெட் இணையதளம் ஆன்லைனில் தஜ்வீத் (குர் ஆனை உரிய முறையில் வாசிக்கும் விதிமுறைகள்) வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. நான்கு மாத காலம் நடக்கவிருக்கும் இந்த பயிற்சி வகுப்பிற்கு “உரிய முறையில் குர் ஆனை ஓதுவது எப்படி? (How to Recite the Qur’an Correctly) என்று பெயரிடப் பட்டுள்ளது.
தஜ்வீத் கலையில் நிபுணத்துவமும், மிகுந்த அனுபவமும் பெற்ற ஆசிரியரான ஷேக் முஹம்மத் சலாஹ் இதனைத் துவக்குகிறார்.
ரமளான் துவக்க வாரத்தில் துவங்கும் இந்த ஆன்லைன் தொடர் வகுப்புகளுக்கான பாடங்கள் ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து வெளியாகும். பாடங்கள் வெளியாகும் தேதிக்கான அறிவிப்புகள் விரைவில் தளத்தில் வெளியிடப் படும். (இஸ்லாம் ஆன்லைன் தளத்தின் சுட்டி: இங்கே கிளிக்கவும்)
இஸ்லாம் ஆன்லைன்.நெட் அளிக்கும் இந்த ஆன்லைன் தஜ்வீத் வகுப்பில் இணைந்து பயன்பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி: essam.harira@iolteam.com
இதில் தொடர்பு கொள்வதன் மூலம் எவ்வாறு தளத்தினுள் லாகின் செய்து இந்தப் பயிற்சி ஏட்டினைப் பெற்றுக் கொள்ள இயலும் என்ற விபரங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
ஆன்லைன் தஜ்வீத் வகுப்புகளில் இணைந்து பயன்பெற வாசகர்களை அன்போடு அழைக்கிறோம்.
-சத்தியமார்க்கம்.காம்