உடல் ஊனமுற்றோருக்கான நிகாஹ் முகாம்

Share this:

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் நாங்கள் (Nikah.com & Nikah.com Centre) சுமார் பத்து வருடங்களாக இணையதளம் Nikah.com மூலம் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான முஸ்லிம் மணமக்களுக்கு அவர்களின் இல்வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் வசதியை எங்கள் இணையதளம் மூலமாகவும் இணையதள வசதியற்றவர்களுக்கு Nikah.com Centre மூலமாகவும் கடந்த 5 மாதங்களாக சேவை செய்து வருகிறோம். எங்கள் மூலமாக பல்லாயிரம் பேர் இதுவரை திருமண வாழ்வில் இணைந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!
 

கமிஷன், புரோக்கர் கட்டணம் எதுவுமின்றி இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி இதை நடத்தி வருகிறோம். எங்களின் சேவைகளில் தாய், தந்தையற்ற பெண்களுக்கும் உடல் ஊனமுற்றோருக்கு முற்றிலும் இலவசமாகவும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு சலுகைகளுடனும் சேவை புரிகிறோம்.
 
 எங்களின் சமுதாயச் சேவையில் ஒரு பகுதியாக.. இன்ஷா அல்லாஹ் உடல் ஊனமுற்றோருக்கான இல்வாழ்க்கைத் துணையைத்தேர்வு செய்ய உதவும் முகாம் இன்ஷா அல்லாஹ் 12.10.2008 ஞாயிறு அன்று சென்னை அடையாறில் உள்ள குரசானி பீர் பள்ளியில் இலவசமாக நடைபெற உள்ளது. வாழ்க்கைத் துணையைத்தேடும் முஸ்லிம்களில் உடல் ஊனமுற்ற ஆண், பெண்களில் மணமாகாதவர்கள், விவாகரத்தானவர்கள், விதவைகள் ஆகியோரும் தியாக மனப்பான்மையுடன் உடல் ஊனமுற்றோருக்கு வாழ்வு தர விரும்பும் சகோதர, சகோதரிகளும் புகைப்படத்துடன் தங்களின் வருகையை 1.10.2008, புதன் கிழமைக்குள் கீழ்கண்ட முகவரியில் பதிவு செய்ய வேண்டுகிறோம்.
 
 * உடல் ஊனமுற்றவர்களில் ஆண்கள் குடும்பம் நடத்த போதிய வருமானம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
 
 * இந்த நிகழ்ச்சிக்குக் கட்டணம் ஏதும் இல்லை.
 
 * சமுதாய ஆர்வலர்கள் மற்ற அன்பர்களுக்கு இத்தகவலைத் தெரிவித்து ஊனமுற்றவர்களுக்கு உதவிட வேண்டுகிறோம்.
 
 தலைமை அலுவலகம்:
 
 நிகாஹ் டாட் காம் செண்டர்
 எண். 54 பள்ளிவாசல் வளாகம்
 எல்.பி. ரோடு, அடையாறு
 சென்னை – 600 020
 தொலைபேசி: 044 – 455 11 460
 044 – 455 11 470
 
 கிளை அலுவலகம்:
 
 நிகாஹ் டாட் காம் செண்டர்
 எண்: 247 ஏ, முதல் மாடி,
 நேதாஜி ரோடு,
 மதுரை – 1.
 தொலைபேசி: 0452 – 234 84 62
 0452 – 234 84 63
 
 மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். அல்லது எங்களின் நிகாஹ் மேடை என்னும் நிகழ்ச்சியை வெள்ளி தோறும் காலை 11.30 மணிக்குத் தமிழன் தொலைகாட்சியில் காணவும்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.