உதவிக் கரம் நீட்டுவோம்!

உதவிக்கரம் நீட்டுவோம்!
Share this:

கடந்த ஜூன் 9ஆம் தேதி, “உயர்கல்வி பயில உதவியை எதிர்பார்க்கும் மாணவி” என்ற தலைப்பிட்டு அப்போது நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சகோதரி ஸாஜிதாவைப் பற்றிய செய்தி வெளியிட்டிருந்தோம்.

நமது சத்தியமார்க்கம்.காம் தளத்தில் அச்செய்தி வெளியானவுடன் பல சகோதரர்கள் பொருளுதவி செய்வதற்கு முன்வந்து வங்கிக் கணக்கு விபரம் கேட்டு, பின்னூட்டம் இட்டிருந்தனர்.

செய்தி வெளியிட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல், சகோதரி ஸாஜிதாவின் குடும்பச் சூழல், தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்கள், உதவி செய்யப் படுவதற்குத் தகுதி, பொருளதவி செய்யவதற்கான (வங்கி) வழி ஆகியன குறித்து நேரில் கண்டு / கேட்டறிவதற்காக நமது பிரதிநிதியைச் சகோதரியின் ஊரான முடச்சிக்காட்டுக்கு அனுப்பி இருந்தோம்.

நமது பிரதிநிதி நேரில் விசாரித்து அறிந்த வகையில், சகோதரி ஸாஜிதா உதவி பெறுவதற்கு முற்றிலும் தகுதி உடையவர் என்பது தெரிய வந்தது.

அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம்:

 

பாடம்

மதிப்பெண்கள்

தமிழ் (Tamil)

171

ஆங்கிலம் (English)

153

இயற்பியல் (Physics)

142+50 = 192

வேதியியல் (Chemistry)

135+50 = 185

உயிரியல் (Biology)

138+50 = 188

கணிதம் (Mathematics)

191

மொத்தம் (Total Marks)

1080

தேர்வுப் பதிவெண் (Register No.)

463563

 

இதனிடையில், கடந்த 15.06.2008 நாளிட்ட ஜூனியர் விகடன் இதழில் ‘ஒளி 116‘ என்ற தலைப்பிட்டு, கல்வி உதவிச் சேவைகள் பற்றி ஒரு செய்தி வெளியானது:

 

ஜூனியர் விகடன் (15.06.2008) வெளியிட்டச் செய்தி!

 

சாஸிதாவுக்குத் தீர்வு!

பேராவூரணியில் இருந்து சாஸிதா என்ற மாணவி நம்மைத் தொடர்பு கொண்டார்.

”நாங்க ரொம்ப வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவங்கண்ணே. அப்பா கிடையாது. அம்மா துணிமணிகளை வாங்கி நடந்து போய் வியாபாரம் பண்றவங்க. இவ்வளவு வறுமையிலும் 1080 மார்க் வாங்கினேன். மேற்கொண்டு படிக்கிறது எப்படின்னு தெரியலை. அண்ணா யுனிவர் சிட்டிக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எப்படியும் ஃப்ரீ ஸீட் கிடைச்சிடும். ஆனா, இதர செலவுகளைப் பெரிய மனசுள்ள யாராவது ஏத்துக்கிட்டா புண்ணியமா போகும்” என சோகத்தோடு சொன்னார் சாஸிதா.

கும்பகோணத்தில் இருக்கும் ஹலிமா எஜுகேஷனல் அறக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்து விஷயத்தைச் சொன்னோம்.

”சாஸிதாவின் படிப்பு செலவுகளையும் இதர செலவுகளையம் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இனி சாஸிதா எங்கள் குழந்தை!” எனப் பெருமனதோடு சொன்னார்கள் ஹலிமா அறக்கட்டளை நிர்வாகிகள்.

சகோதரி ஸாஜிதாவைப் பற்றிய மேற்கண்ட செய்தியைக் கண்ணுற்ற நமது வாசகச் சகோதரர் ஜியாவுத்தீன் அவர்கள் “சாஸிதாவுக்குத் தீர்வு!” என்ற தலைப்பிட்டு அதனைப் பின்னூட்டமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தில் இட்டிருந்தார்.

சகோதரி ஸாஜிதாவின் தாயாரைத் தொடர்பு கொண்டு நேரில் நாம் விசாரித்த வகையில் அவ்விருவருக்கும் ஜூனியர் விகடனில் வெளியான செய்தியைப் பற்றியோ கும்பகோணம் ஹலீமா கல்வி அறக்கட்டளை பற்றியோ ஏதும் தெரிந்திருக்கவில்லை.

எனவே, சகோதரிக்குத் தங்கள் பொருளுவிகளை அனுப்புவதை நிறுத்த வேண்டாம் என்று தயாள குணம் படைத்த வாசகச் சகோதர சகோதரியரைக் கேட்டுக் கொள்வதோடு, அனுப்ப வேண்டிய விபரங்களையும் இங்குத் தருகிறோம்.

சகோதரி ஸாஜிதாவின் தாயாரின் வங்கிக் கணக்கு:

 

M. Sarammal

SB A/C – 11199629553 State Bank of India, Peravurani.

 

வீட்டு முகவரி:

எம். ஸாஜிதா பேகம்,

தாயார் பெயர்: சாராம்மாள்,

(புதுக்கோட்டயார் வீடு)

98/495, முஸ்லிம் தெரு,

பள்ளிவாசல் அருகில்,

முடச்சிக்காடு,

பேராவூரணி – 614804.

தஞ்சை மாவட்டம்.

 

கும்பகோணம் ஹலீமா அறக்கட்டளையையும் ஜூனியர் விகடனையும் விசாரிக்கத் தொடங்கியுள்ளோம். விபரங்கள் இன்ஷா அல்லாஹ் இங்குப் பதிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.