பீஸ் டீவி (Peace TV)யின் இலவச உருது மொழிச் சேவை தொடக்கம்

மனிதகுல அமைதிக்கு இஸ்லாம் கூறும் இணக்கமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காணும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 1.1.2006 முதல் பீஸ் டீவி (Peace TV)யில் 24 மணிநேர ஆங்கில ஒளிபரப்புச் சேவை தொடங்கப் பட்டது.

 கடந்த மூன்றாண்டு காலம் தன் குறிக்கோளை இலக்காகக் கொண்டு இயங்கிய பீஸ் டீவி (Peace TV)யின் ஆங்கில ஒளிபரப்புச் சேவைக்கு உலகெங்கும் வாழும் முஸ்லிம்களும் பிறமதச் சகோதரர்களும் வழங்கிய அமோக ஆதரவுவைத் தொடர்ந்து, பீஸ் டீவி உர்து (PEACE TV URDU) எனும் தனது புதுச் சேவையைக் கடந்த 1.6.2009இல் சோதனை ஒளிபரப்பு மூலம் பீஸ் டீவி (Peace TV) தொடங்கியது.

உருது ஒளிபரப்பின் சோதனை ஓட்டமும் பெருவரவேற்பைப் பெற்றதால், கடந்த 19.6.2009 முதல் முழுமையான 24 மணி நேரச் சேவையாக பீஸ் டீவி உர்து (PEACE TV URDU) செயல்படத் தொடங்கி விட்டது, அல்ஹம்து லில்லாஹ்!

பிற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் பல்வேறு மூடநம்பிக்கைக் கற்பனைக் கதைகள், நாடகங்கள், வன்முறைகள், ஆடல்-பாடல் ஆபாசங்கள் போன்ற நிகழ்சிகளில் சிக்கியிருந்த மக்களுக்கு “மனித குல அமைதிக்குத் தீர்வு” எனும் தலைப்போடு ஒளிபரப்பப்படும் தூய்மையான இந்நிகழ்சிகள் ஒரு சிறந்த மாற்று வழியாகவும் அறிவொளியாகவும் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

கடந்த வாரம்வரை உர்து நிகழ்சிகள் PEACE TVயின் ஆங்கில நிகழ்சிகளுடன் ஒளி பரப்பப்பட்டன. அந்த ஒளிபரப்பில் 66% முதல் 75% ஆங்கில நிகழ்சிகளும் 25% முதல் 33% வரை உர்து நிகழ்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இனி இரண்டு அலைவரிசைகளும் 100% ஆங்கிலம் மற்றும் உர்து நிகழ்சிகளை ஒளிபரப்பக் கூடிய, இரண்டு 24 மணி நேர அலைவரிசைகளாக இயங்கும்.

மிகவும் வித்தியாசமான முறையில் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படையில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்சிகள் டாக்டர் ஜாகீர் நாயக், அஹ்மத் தீதாத், பிலால் பிலிப்ஸ், அப்துல் ரஹீம் கிரீன், யூசூஃப் எஸ்டேஸ், யாஸர் ஃபஜாகா, டாக்டர் ஜமால் அல்-பதவீ போன்ற பல உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், பத்திரிகையாளர்கள் கேள்வி-பதில் நிகழ்சிகள், ஆகிய ஆன்மீக, உலகப் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் அமைதியான முறையில் தீர்வுகள் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கபடுகின்றன என்பது குறிப்பாக இளம் அறிவு ஜீவிகளை கவர்கின்றது.

ஒளிபரப்பு அலை வரிசைகள்:

1) INTELSAT 10 ( PAS 10)

Position : 68.5 East Frequency : 4116 Symbol rate : 8145, FEC 3/4

Polarization Vertical.

Reach : Asia, Middle East, Australia & Africa.

2) ARAB SAT : BADR – 4

Position : 26.0 East Frequency : 12169 Symbol rate : 27500, FEC 3/4

Polarization vertical.

Reach : Middle East, Africa & Europe.

அதே போல் சென்னை மற்றும் மும்பையில் நடந்த பீஸ் மாநாட்டு நிகழ்சிகள், மும்பை இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன் (IRF ISLAMIC RESEARCH FOUNDATION) [ஐ ஆர் எஃப்]அரங்க நிகழ்சிகள், கேள்வி-பதில்கள், டாக்டர் வில்லியம் கேம்ப் பெல், டாக்டர் ருக்னுத்தீன், குரு ரவி ஷங்கர், போன்றவர்களுடன் நடைபெற்ற மத ஒப்பாய்வு விவாதங்கள் மிகவும் பிரபலமானவை.

மேலும் பொருளாதார, விஞ்ஞான, கல்வி போன்ற இதர வாழ்வியல் துறையின் புகழ்பெற்ற நிபுணர்கள் நேர்காணல்கள், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மும்பையில் நடத்தும் ISLAMIC INTERNATIONAL SCHOOL சிறுவர்கள், மாணவர்கள் நிகழ்சிகள் என்று எல்லா வர்க்கத்தினரையும் கவரும் சேனலாக இது செயல்படுகிறது.

முற்றிலும் இலவசமான இந்த ஒளிபரப்பு அலைவரிசைகளை உங்கள் கேபிள் ஆபரேட்டர்களைத் தொடர்பு கொண்டு நிறுவிக் கொள்வதன் மூலம் ஆங்கிலம் மற்றும் உர்து (ஹிந்தி) இரு மொழிகளில் 24 மணி நேரமும் உங்கள் இல்லத்தில் இறை மார்க்கம் இஸ்லாமிய மணம் கமழச் செய்வீர்களாக.

அல்லாஹ்வின் அருளும் கிருபையும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இவ்வழியில் உழைத்து நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றி நோக்கத்தில் செயல்படும் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக!