தமிழ் இணைய வளர்ச்சியில் மிகப் பெரும்பங்கு வகிக்கும் தேனீ எனப்படும் ஒருங்குறி இயங்கு எழுத்துரு உருவாக்கிய தமிழகத்தின் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த யுனிகோடு உமர் என அறியப்படும் உமர்தம்பி அவர்கள் , கடந்த 12 ஜூலை 2006 மாலை 5:30 மணியளவில் மறைந்தார். உமர்தம்பி அவர்கள் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
தணியாத தமிழார்வம் கொண்டிருந்த உமர்தம்பி அவர்கள் உருவாக்கிய தேனீ எழுத்துரு இன்று தொண்ணூறு விழுக்காடு தமிழ்க் கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர அவர் தமிழ்க்கணிமைக்குப் பல செயலிகளை அளித்துள்ளார்.
இவற்றுடன் தமிழ் இணைய அகராதி, யூனிகோட் எழுத்துருமாற்றி, தமிழ் ஈமெயிலர், தேனிவகை எழுத்துருக்கள் ஆகியவை உமர்தம்பி அவர்களின் இலாப நோக்கற்ற தனிப்பட்ட படைப்புகளாகும்.
சத்தியமார்க்கம்.காம் தளத்தில் உமர்தம்பி அவர்களின் தேனீ எழுத்துருவை நாம் பயன்படுத்துவதால் நன்றியோடு அவர்களின் பங்களிப்பை நினைவு கூர்வதோடு, அவர்களின் மறுமை வாழ்வு சிறக்கவும் துஆ(பிரார்த்தனை) செய்கிறோம்.
தமிழ்மணம், தமிழோவியம் உள்பட முன்னணித் தமிழ்த் தளங்களும், ஏராளமான வலைப்பூக்களும் தேனீ எழுத்துருவைப் பயன்படுத்துகின்றன. இணையத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழும் இஸ்லாமிய எதிரிகள்கூட இந்த எழுத்துருவால் பயன்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
உமர்தம்பி அவர்கள் தமிழா யாஹூ குழுமம், மரத்தடி.காம், ஈ-சங்கமம் ஆகிய தமிழர் குழுமங்களிலும் இணைய தளங்களிலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்.
உமர்தம்பி அவர்களின் வலைப்பூ முகவரி http://thendral.blogspot.com
உமர்தம்பி அவர்களைப் பற்றிய விபரங்களைத் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தளித்துள்ளது:
இச்செய்தி தொடர்பான மற்ற பதிவுகளைக் கீழே காணலாம்.
‘யூனிகோட்’ உமர்தம்பி மரணமடைந்தார்கள் – அதிரை.காம்
யூனிகோட் உமர்தம்பி மரணம் – அபூமுஹை
யுனிகோடு உமர் அவர்களின் மறைவு – முஃப்தி
தேனி உமருக்கு அஞ்சலி – மதி கந்தசாமி
‘தேனீ’ உமர் மறைவு – கேட்டவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன். – ஆசாத்
உமர் – பினாத்தல் சுரேஷ்
e-வீதியில்: யுனிகோடு உமர் அவர்களின் மறைவு – மா. சிவக்குமார்
நண்பர் உமர் மறைவு – கனடா வெங்கட்
புகைப்படம் நன்றி: விக்கிபீடியா